செவ்வாய், 7 ஏப்ரல், 2015


அஸ்ஸலாமு அலைக்கும்...

தொண்டி பேரூர் தமுமுக நடத்திய முப்பெரும் நான்கு நிகழ்வுகள்.............. 



தொண்டி பேரூர் தமுமுக சார்பில் இன்று 7/4/2015 முப்பெரும் நான்கு நிகழ்வுகள் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தொண்டியில் மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வுகள் 1), காலை 10 மணியளவில் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் நீர் மோர் தர்பூசணி ஜூஸ் பந்தல் திறந்து பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது. நிகழ்வுகள் 2), மதியம் 2 மணியளவில் தொண்டி அன்பாலயாவின் உண்டு உறைவிட பள்ளியில் மனவளர்ச்சி குன்றிய ஆதரவு இல்லாத குழந்தைகளுக்கு மாவட்ட தொண்டரனி துனை செயலாளர் ஆனந்தூர் சகோ,பட்டாணி மீரா ஏற்பாட்டில் மதிய உணவுகள் ஏற்பாடு செய்து இலவசமாக கொடுக்கப்பட்டது நிகழ்வுகள், 3) மாலை 4 மணியளவில் தொண்டி மரைக்காயர் தெரு பகுதியில் சென்னை வாழ் தமுமுக நிர்வாகி தொண்டி சகோ,ஜப்ரான் அவர்களின் ஏற்பாட்டில் பெண்களுக்கு மார்க்க விழிப்புணர்வு உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்வுகள், 4)தொண்டி பாவோடி மைதானத்தில் மாலை 6 மணியளவில் தமுமுக வடக்கு தெரு கிளை சார்பில் சமூக தீமைகளுக்கு எதிரான மாபெரும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் மார்க்க பிரச்சாரகர்கள் மௌலவி, ஹாஜி அலி பிர்தவ்ஷி அவர்களும் மௌலவி பைசுல் ரஹ்மான் பைஜி அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள் இந்த நான்கு நிக்ழ்விலும் தமுமுக மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா தலைமை தாங்கினார்கள் ஒன்றிய செயலாளர் நம்புதாளை சாகுல் ஹமீது முன்னிலை வகிக்க மமக தொண்டி நகர செயலாளர் ஆயிஷா பரக்கத் அலி, மாவட்ட தொண்டரனி துனை செயலாளர் ஆனந்தூர் பட்டாணி மீரா,தொண்டி பேரூர் செயலாளர் கலந்தர் ஆசிக், பொருளாளர் அப்துல் ரஹீம், துனை செயலாளர்கள் இபுராகிம்,நெய்னார் ஹாஜா,ஜலால் தொண்டரனி செயலாளர் மீரான் தெற்குப்பகுதி செயலாளர் இஞ்சினியர் ஹபீப் ரஹ்மான்,வடக்கு பகுதி செயலாளர் ராஜ் முகம்மது பொருளாளர் செய்யது மலுங்கு துணை செயலாளர்கள் பௌசுல் ரஹ்மான் அப்துல் ரவூப் கிழக்கு பகுதி செயலாளர் அப்துல் ரஜாக் துனை செயலாளர் முகைதீன் பிச்சை சென்னை மண்ணடி 106 வது வட்ட செயலாளர் தொண்டி ஜப்ரான் மற்றும் ஏராளமானோர் இம்மூன்று நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் (அல்ஹம்து லில்லாஹ் ) எல்லா புகழும் இறைவனுக்கே! 

சளைக்காமல் சமுதாய பணி!
அதுவே தமுமுக வின் தலையாய பணி! 
இவன்; தமுமுக தொண்டி பேரூர்.................................