வியாழன், 5 பிப்ரவரி, 2009

இராமநாதபுரத்தில் தமுமுக ரூபாய் இரண்டு லட்சம் நிதியுதவி


இராமநாதபுரம் தமுமுக சார்பில் ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. இராமநாதபுரம் மீன்காரத் தெருவைச் சேர்ந்த சீனி ஜஹாங்கீர் என்பவர் கார் விபத்தில் மரணமடைந்தார். அவரின் குடும்பத்திற்கு ரூ. ஒரு லட்சத்தை அவரது தகப்பனார் சாகுல் ஹமீதிடம் வழங்கப்பட்டது. மண்டபத்தைச் சேர்ந்த சுலைமான் என்பவருக்கு எழும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ. 50இ000 வழங்கப்பட்டது. பிரப்பன் வலசையை சேர்ந்த அப்துல் ரஹீம் என்ற சகோதரரின் மகளுக்கு இருதய சிகிச்சை செய்ய ரூ.10இ000மும்இ பட்டரைக்காரத் தெருவைச் சேர்ந்த திவான் முஹம்மது என்பவர் தொழில் துவங்க ரூ. 10இ000மும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை செய்யது தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தஸ்பீக் அ­இ பொருளாளர் சல்மான்இ துணைச் செயலாளர்கள் ரசூல்கான்இ சாதிக் அமீன் ஆகியோர் முன்னிலையில் மாவட்டத் தலைவர் ச­முல்லாஹ்கான் வழங்கினார்.