வியாழன், 28 நவம்பர், 2013

வக்ஃப் வளர்ச்சி கழகத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம்!



நாட்டில் வக்ஃப் சொத்துக்களின் பாதுகாப்பை லட்சியமாக கொண்டு மத்திய சிறுபான்மை அமைச்சகம் சிபாரிசு செய்த தேசிய வக்ஃப் வளர்ச்சி கழகத்திற்கு மத்திய அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

500 கோடி ரூபாய் மூலதனத்தில் வக்ஃப் வளர்ச்சி கழகம் துவங்கப்படும் என்று ஏற்கனவே மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான் கான் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். 100 கோடி ரூபாய் மூலதனத்தில் வக்ஃப்வளர்ச்சி கழகம் செயல்பட துவங்கும்.

இது அமலுக்கு வந்தால் நாட்டின் 4.9 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய வக்ஃப் சொத்துக்களின் மறு வளர்ச்சி சாத்தியமாகும். வக்ஃப் நிலங்களில் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், வியாபார மையங்கள், ஷாப்பிங் மையங்கள், மால்கள், ஃப்ளாட்டுக்கள், ஹாஸ்டல்கள் ஆகியன கட்டி அதன் மூலம் வருமானத்தை அதிகரித்து, அதன் மூலம் சமுதாயத்தின் வளர்ச்சித் திட்டங்கள் பயன்படுத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சச்சார் கமிட்டி அறிக்கையின் படி இந்தியாவில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் ஏக்கர் வக்ஃப் நிலங்கள் உள்ளன. இவற்றின் சந்தை விலை 2006-ஆம் ஆண்டு நிலவரப்படி 1,20,000 கோடி ரூபாய் மதிப்பாகும்

ஆனால், வெறும் 163 கோடி ரூபாய் மட்டுமே இதன் மூலம் வருமானமாக கிடைக்கிறது.
இத்தொகை இந்நிலங்களின்பரிபாலனத்திற்கு கூட போதாது என்று சச்சார் கமிட்டி அறிக்கை கூறியது. புதிய திட்டம் மூலமாக ஆண்டு தோறும் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானமாக அதிகரிக்கலாம் என்று அமைச்சர் ரஹ்மான் கான் கூறுகிறார்

புதன், 27 நவம்பர், 2013

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது பொய் வழக்கு- ஜவாஹிருல்லா கண்டனம்.



சென்னை: கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது பொய் வழக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது மனிதநேய மக்கள் கட்சியின் சட்டசபை கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அறப்போராட்டம் நடைபெற்று வரும் இடிந்தகரை அருகே உள்ள சுனாமி காலனியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 7 பேர் பலியானதும் 3 வீடுகள் தரைமட்டமானதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஆனால் இந்த குண்டு வெடிப்பிற்கு சிறிதும் தொடர்பு இல்லாத அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் தலைவர்களான சுப. உதயகுமார், புஸ்பராயன் உள்ளிட்ட நால்வர் மீது காவல்துறை பொய் வழக்கு தொடுத்திருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறேன்.
இடிந்தகரை அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக தாது மணல் கம்பெனிக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு குழுக்கள் இயங்கி வருகின்றனர். அந்த ஊரைச் சார்ந்த மக்கள் பல கடலோர கிராமங்களில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர்.
பலர் இடிந்தகரை கிராமத்தில் இருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுனாமி காலனியில் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சிலர் வசித்து வந்த ஒரு வீட்டில் நேற்று (நவம்பர் 26, 2013) மாலை சுமார் 6:40 மணியளவில் பெரும் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்துக்கும் கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்புப் போராட்டத்துக்கும் எந்த விதமானத் தொடர்பும் கிடையாது. இந்த நிகழ்வில் இடிந்தகரை மக்களுக்கும் எந்தவிதமானத் தொடர்பும் இல்லை.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் அறவழிப் போராட்டமாகவேத் தொடர்கிறது ஏற்கெனவே கூத்தங்குழியில் தாது மணல் பிரச்சினையில் ஒரு குழு இன்னொரு குழுவைத் தாக்கி நடந்தத் தகராறில், புகார் கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
உயர்நீதி மன்றம் புகாரை விசாரித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நேற்று (நவம்பர் 25, 2013) உத்தரவிட்டது. இந்த சூழலில உரிய விசாரணைகள் நடத்தாமல் அறவழிப் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டிருப்பது உண்மையான குற்றவாளிகளை தப்பவைக்கும் செயலாகும்.
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்திலின்படி தற்போது போடப்பட்டுள்ள வழக்கு உட்பட கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவினர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Source : ThatsTamil

ஞாயிறு, 24 நவம்பர், 2013

மோசடி மன்னன் மோடி --- வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்



புதுடெல்லி: குஜராத்தில் அரசுக்கு சொந்தமான விவசாய நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்ததில் மோடி அரசு செய்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விவசாயிகள் பெரும்பாலும் கால்நடைகளை மேய்வதற்காகப் பயன்படுத்தி வந்த நிலம், 2.5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரையிலான விலைக்கு தனியார் நிறுவனத்திற்கு மோடி அரசு விற்பனை செய்துள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2005-2007 கால அளவில் சந்தை விலை சதுர மீட்டருக்கு 1000 முதல் 1500 ரூபாய் வரை இந்த நிலங்கள் இருந்து வந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை அரசு சாரா நிறுவனமான அன்ஹத் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.

மனிதநேய மக்கள் கட்சி திருப்புல்லாணி ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம்



அஸ்ஸலாமு அலைக்கும்









தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி தன் கரைபடியாத தன்னலமற்ற செயல்பாட்டினால் ஜாதிஇ மத பேதமின்றி தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் விரிந்திருப்பது நாம் அறிந்ததே. குறிப்பாக மனிதநேய மக்கள் கட்சியி இந்திய வரலாற்றிலே கரைபடியாத இரு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு சிறப்பாக செயல்படுவது மாற்றுமத சகோதரர்களை மெய்சிலிர்க்கச் செய்துள்ளது என்றால் அது மிகையாகாது.

அதன் எடுத்துக்காட்டாக முகவை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் திருப்புலாணி செயல்வீரர்கள் கூட்டம் கலிமன்குண்டு என்ற கிராமத்தில் நடைவெற்றுக் கொண்டிருக்கிறது.

இக்கிராமம் முஸ்லிம்கள் நிறைந்த கிராமம் இல்லை. இங்கு தொழுவதற்கு பள்ளிகள் கூட இல்லை. மாற்றுமத சகோதரர்கள் நிரைந்துள்ள இக்கிராமத்தில் மனிதநேய மக்கள் கட்சியில் தூய செயல்பாட்டில் கவரப்பட்டு அங்குள்ள பொதுமக்கள் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். குறிப்பாக அக்கிராமத்தில் உள்ள சகோ.சுரேஸ், சகோ.செந்தில் இக்கூட்டத்தை தலைமை ஏற்று ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில் தலைமை உரை திருப்புலானி ஒன்றியச் செயலாளர் சகோ.ரைஸ் இப்ராஹிம் நிகழ்த்தினார். அறிமுகஉரையை இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் சகோ. சாதிக் பாட்ஷா நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் அனைத்து மக்களுக்கும் அரசின் உதவித்திட்டங்கள் முறையாக சென்றடைய வேண்டும் என்றும் அதை எவ்வாறு பெற வேண்டும் என்று திருவாடனை ஒன்றியச் செயலாளர் சகோ.அக்பர் சுல்தான் விளக்கினார்.

இக்கூட்டத்தில் சிறப்புரை மாநில அமைப்புக் குழு உறுப்பினர் மௌலவி மைதீன் உலவி நிகழ்த்த உள்ளார்.

மேலும் இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சகோ.அன்வர் மாவட்டப் பொருளாளர் சகோ. வாணி சித்திக்இ மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் சகோ.ஜாஹிர் உட்பட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

களத் தகவல் சகோ. அக்பர் சுல்தான்

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பிழைத் திருத்தம் செய்ய தியதி அறிவிப்பு



மதுரை : தமிழகத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு பதிவுதாரர்களின் விபரங்கள் ஆன்-லைன் மூலமாக பாரமரிக்கப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்tnvelaivaippu.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவுதாரர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விபரங்களை சரி பார்த்துக் கொள்ளலாம். இந்த இணையதள முகவரியில் சென்று வேலைவாய்ப்பு அலுவலக புதுப்பதிவு, புதுப்பித்தல், கூடுதல் தகுதியினை பதிவு செய்தல், மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகலெடுத்தல் போன்ற வசதிகளை உடனடியாக பெற முடியும்.
பதிவுதாரர்கள் தங்களது பதிவு விபரங்களை சரிபார்க்கும் போது காணப்படும் எழுத்துப்பிழைகள், பதிவு விடுதல்கள், பதிவு மூப்பு, கல்வித்தகுதி திருத்தங்கள், முன்னுரிமை பதிவு விபரங்கள் ஆகியவற்றில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை சரி செய்ய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் முதற்கட்டமாக தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு கிளை அலுவலகம் மதுரையில் முன்னுரிமை பிரிவின் கீழ் (ஆதரவற்ற விதவை, கலப்பு திருமணம் புரிந்தோர் ;, இராணுவத்தினரைச் சார்ந்தோர்,  முன்னாள் இராணுவத்தினா, மாற்றுத்திறனாளி போன்ற பிரிவில் பதிவு செய்துள்ள முன்னுரிமை பதிவுதாரர்கள் தங்களது பதிவு விபரங்களை மேற்குறிப்பிடப்பட்ட இணையதள முகவரியில் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதை சரிசெய்ய உடனடியாக மதுரையில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகத்தில் 29.11.2013 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை (கையெழுத்து பிரதி) இணையதளம் மூலம் பெறப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள கல்வி மற்றும் இதர தகுதி தொடர்பான சான்றுகள், ரேஷன் கார்டு, சாதிச் சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவற்றின் நகல்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பி வைக்குமாறு தொழில் மற்றும் செயல்வேலைவாய்ப்பு கிளை அலுவலக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவவர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

வியாழன், 21 நவம்பர், 2013


உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்


டிசம்பர் 6ல் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் -- பேராசிரியர் ஜவாஹிருல்லா MLA பேட்டி






இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் தன் தொகுதிக்குட்பட்ட கீழக்கரை பகுதியில் களஆய்வு செய்தார்கள். குறிப்பாக கீழக்கரையில் உள்ள  இஸ்லாமியா தொடக்கப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் ஆய்வை மேற்கொண்டார்கள்.

அதன் பின் கீழக்கரை நகர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பேராசிரியர்.

அதில் விபத்துக்கள் பாதுகாப்பு வாரத்தை நாம் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும், வாகன ஓட்டிகளின் தவறுகளால் ஏற்படும் கோர விபத்துக்கள் குறித்து முழு அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றார். அதன் பின் இந்தியாவிற்கு உலகரங்கிள் தலைகுனிவை ஏற்படுத்திற பாபர் மசூதி இடிப்பு தினமாம் டிசம்பர் 6ல்  மாவட்ட தலைநகரங்களில் மாலை 3மணிக்கு தமுமுக தலைமையில் மக்கள் திரல் போராட்டம் நடைபெறும் என்றார். இந்நிகழ்சிகளில் மாவட்டத் தலைவர் சகோ.சாதிக்பாட்ஷா, மாவட்டச் செயலாளர் சகோ.அன்வர்  உட்பட ஏனைய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

களத்தகவல் சகோ.அக்பர் சுல்தான்

புதன், 20 நவம்பர், 2013

13.11.2013 புதுப்புது அர்த்தங்கள் - பேரா.ஜவாஹிருல்லா

ஜமாத் நிர்வாகிகளை முகவை தமுமுக நிர்வாகிகள் அழைப்பு


அஸ்ஸலாமு அலைக்கும்



உலகரங்கில் நம் நாட்டை தலைகுனிய வைத்த கருப்பு நாளாம் டிசம்பர் 6ல் தமுமுக நடத்தும் நியாயப் போராட்டத்தில் கலந்து கொள்ள ஜமாத் நிர்வாகிகளை முகவை தமுமுக நிர்வாகிகள் அழைப்பு.

சட்டபேரவை கூட்டத்தொடரில் மமக உறுப்பினர்கள் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானங்களும் அதற்கு அமைச்சர்களின் அளித்துள்ள பதில்களும்

23.10.2013 முதல் 30.10.2013 வரை நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தொடரில் மமக உறுப்பினர்கள் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானங்களும் அதற்கு அமைச்சர்களின் அளித்துள்ள பதில்களும்



















உரிமை முழக்க பொதுக் கூட்டம்


சவூதியில் பணிபுரியும் தமிழர்களே உஷார்...உஷார்!




சவூதி: சவூதியில் நிதாகத் சட்டப் பிரச்சனையையொட்டி பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது.
சமீபத்திய நிதாகத் சட்டப் பிரச்சனையை ஒட்டி சவூதியில் பல்வேறு இடங்களிலும் கொள்ளை சம்பவங்களும், வழிப்பறிகளும் அதிக அளவில் நடந்து வருகின்றன என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் வழிப்பறி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தமிழர் கூறுகையில்,
நேற்று இரவு 8 மணி அளவில் நான் தம்மாமில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது வழியில் நான்கு கொள்ளையர்களால் மடக்கப்பட்டு கழுத்தில் கூரிய கத்தி வைக்கப்பட்ட நிலையில் என்னிடமிருந்த இரண்டு மொபைல் போன்களையும் பிடுங்கி கொண்டு ஓடிவிட்டனர். இது போன்று பலரிடமும் போன்களும், மணிபர்ஸுகளும் கத்தி முனையில் துணிகரமாக கொள்ளையடிக்கப்பட்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
தயவு செய்து எந்த சூழ்நிலையிலும் வெளிச்சமில்லாத பகுதிகளில் தனி நபராக செல்ல வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். இரண்டு போனையும் பறி கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் இருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 19 நவம்பர், 2013

பெண்னைப் பெற்றோரே!!!!!!



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லஹி வ பரகாத்துஹு..

முகனூலில் கண்டெடுத்த முத்தான சில உபதேசங்கள். காலத்தின் தேவை பெண்ணை பெற்ற பெற்றோரே!

பதிந்தவரின் அறிவை படைத்த ரஹ்மான் மேலும் அதிகரித்து சிறப்பானாதாக்குவானாக. 

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!!
எச்சரிக்கை கவனம் உஷார்.

மார்க்கம் அறியாத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை கற்றுக்கொடுக்காமல். வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல். தங்களின் பொறுப்பை மறந்து..,. தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம்” ”பாசம்” ஃபேஷன்என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாகிறார்கள். ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம்  என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும். என்ற  அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல். ஹிஜாப் முறையை சரிவர பேணாமல்,,
அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய
சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி,
பள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல்,
இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்- டூர், என்று போகும் இடங்களில், மாற்று மத
பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும்,
ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும். பின்பற்ற
ஆரம்பிக்கிறார்கள். 

இதன் காரணமாக சில மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் தீன் குலப்பெண்களுக்கு அண்ணன்களாகவும். நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு அண்ணன்களாகவும்,
நண்பர்களாகவும், பழகும் மாற்றுமத இளைஞர்கள். காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.

இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில்
சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக சினிமா
முதல் காரணமாக இருக்கிறது. 

சினிமாஎன்றவுடன் தியேட்டர்தான் ஞாபகம் வரும். ஆனால் இன்று ஒவ்வொரு முஸ்லிம்
வீடும் தியேட்டராகவே இருக்கிறது. அதுதான் ( T.V ) தொலைக்காட்சி. (எல்.சி.டி – 20 இன்ச் முதல் 60 இன்ச் வரை திரைகள் வசதிக்கு ஏற்றவாறு) கேபில் கனெக்சன் போதாது என்று டிஷ்கள்.  மற்றும் DVD பிளேயர்கள் with USB-PORT. வீடியோ-மொபைல்கள்@இண்டெர்னெட்,. >>>
DESK-TOP கம்ப்யூட்டர்@இண்டெர்நெட். வசதி இருப்பின் >>> லேப்டாப் கம்ப்யூட்டர் @USB
இண்டெர்நெட்மோடம். என்று இந்த சினிமா’” அனாச்சாரங்களும் ஆபாசங்களும் நமது வீட்டிலிருந்து –  பாக்கெட்டு வரை கிடைக்க >> பெண்களின் பெற்றோர்களும், பெண்ணின் கணவனும். உழைக்கிறார்கள்.

கேட்டதை வாங்கி கொடுப்பவர்களே!!

மேற்கண்ட சாதனங்களை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள். யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்.  எத்தனை சிம் கார்டுகள் உபயோகிக்கிறார்கள். மாற்று மத தோழிகள் வீட்டுக்கு சென்று என்ன செய்கிறார்கள். அவர்களது வீட்டில் ஆண்களோடு பழகுகிறார்களா?

தனி அறையில் இருந்து T.V யில் எந்தெந்த சேனல்கள் பார்க்கிறார்கள். என்ன  சி.டி.பார்க்கிறார்கள். கம்ப்யூட்டரில் (இண்டெர்நெட்டில்) தனிமையில் இருந்து என்ன பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள். இ-மெயிலில், சாடிங்கில் யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்… என்பதை கேட்டு தெறிந்து கொள்கிறீர்களா?

அல்லது எச்சரிக்கை உணர்வோடு கண்காணிக்கிறீர்களா

என்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா?

சந்தேகப்படுவதாக ஆகாதா? என்று கருதாமல். என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப
மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க
வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இது விசயத்தில் சிந்தித்து செயல் பட வேண்டியது. ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் பெற்றோருக்கும். ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின்
கணவனுக்கும். மிக மிக அவசியம். என்பதை மேற்காணும் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.

முஸ்லிம் பெண்களின் வாழ்வை நாசமாக்க வேண்டும். கற்பை சூரையாட வேண்டும்,
என்று திட்டமிட்டு செயல்படும் நாசகார கும்பல்கள். ஹிந்து மாணவர்களுக்கும்
மாணவிகளுக்கும் பயிற்சி கொடுத்து வருகின்றன. முஸ்லிம் பெண்களை கவர்வது எப்படி,
நல்லவர்களாக அன்பை பொழிபவர்களாக நடித்து வலையில் சிக்கவைப்பது எப்படி,
மயக்க மருந்துகள் கொடுத்து வீடியோ பிடித்து மிரட்டி பணிய வைப்பது. இந்த காரியங்களுக்கு தோழிகளாக  இருந்து எப்படி செயல்பட வேண்டும் என்று பயிற்சிகளும் கொடுக்கிறார்கள்.

ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் முடித்தாலோ. அல்லது திருமணமான பெண்ணை தன் வலையில் சிக்க வைத்தாலோ – அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் அன்பளிப்பும்.  வழங்கப்படுகிறது. இந்த செய்தியை (எச்சரிக்கையை) பலமுறை இந்த குழுமத்தில்
பார்த்து இருக்கிறோம்.  நம் சமுதாய பெண்களின் பெற்றோர்களிடமும்,  கணவன்மார்களிடமும்விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். ஈமானுக்கு சோதனையான காலம் இது. விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும்பாக்கெட்டுக்குள்ளும், வந்துவிட்டது,
முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின்
மூலமும் நேரடியாகவும்  அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள்.
இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள்,
ஈமானை உறுதிப்படுத்துங்கள். முஸ்லிம் பெண்களிடத்தில் தொழுகையை நிலைநிருத்தும்படி ஏவுங்கள்.

முஸ்லிம் சகோதரர்களே!! மணப்பெண் தொழுகையாளிதான் என்பதை உறுதி செய்த
பின் மணமுடியுங்கள்.  தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் பாதுகாக்கும்.இது அல்லாஹ்வின் வாக்கு.  பெற்றோர்களே!! உங்கள் பிள்ளைகளை நரகத்தின் தீயிற்கு இறையாக
வளர்க்காதீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் நிலைக்கு ஆகிவிடாதீர்கள். பெண்கள் உங்கள் அமானிதம் பேணி வளருங்கள். 

இவ்வுலகில் நாகரிகத்தையும்கவுரவத்தையும், அந்தஸ்தையும் விட. மானம், மரியாதையும். ஈமானும் இறையச்சமும்தான் முக்கியம்.

அல்லாஹ். அர்ரஹ்மான் நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில்
இருந்து பாதுகாத்துஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக
மரணிக்க செய்வானாக! ஆமீன்.