புனே: இந்து மன்னன் சிவாஜியையும் சிவசேனா தலைவராக இருந்த பால்தாக்கரேயையும் அவமதிக்கும் விதத்தில்
முகநூலில் வெளியான படத்தின் பெயரால் புனேவில் இந்துராஷ்ட்ரியசேனா என்ற உள்ளூர்க் கும்பல் கலவரம் நடத்தியது. அக்கலவரத்தின்போது தகவல் தொழில்நுட்பவியலாளரான முஹ்ஸின் சாதிக் ஷேக் என்ற 28 வயது வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டார். இக்கொலை மற்றும் கலவரம் தொட்ரபாக இந்துராஷ்ட்ரியசேனாவைச் சேர்ந்த 19 பேர் கைது செயப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்துராஷ்ட்ரிய சேனா தலவர் தனஞ்ஜெய் தேசாய் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட்டுள்ளார்.
மதக்கலவரத்தைத் தூண்டிய வன்முறைப் பேச்சுக்கும் அத்தகைய வன்முறைப் பிரசுரங்களை வினியோகித்ததற்கும் புனே காவல்துறை தேசாய் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. தனஞ்ஜெய் தேசாய் ஜாமீனில் செல்லாமல் காவலில் இருக்கிறார்.
இவர்மீது ஆட்கடத்தல், பணம் பறித்தல் மற்றும் கலவரங்களில் ஈடுபட்டது உட்பட 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் பிற வன்முறை அமைப்புகளான ராம்சேனாவின் ப்ரமோத் முத்தாலிக், அபிநவ்பாரத்தின் ஹிமானி சவர்க்கார் ஆகியோருடன் தொடர்புடையவர்.
இந்துராஷ்ட்ரியசேனாவைத் தடை செய்வதற்குரிய ஆவனங்களை தயார் செய்து வருவதாக புனே நகரக் காவல்துறை ஆணையர் சதீஷ் மாத்துர் தெரிவித்துள்ளார்.
SOURCE : INNERAM
