திங்கள், 30 செப்டம்பர், 2013

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தமுமுக நிர்வாகிகள் நல் ஒழுக்க பயிற்சி முகாம் !







பத்திரிக்கை செய்தி !

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமுமுக திருவாடானை தாலுகா நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா தலைமையில் நடந்தது இந்தநிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மாநில செயலாளர் கோவை செய்யது,மமக அமைப்பு செயலாளர் மண்டலம் ஜெயினுலாபுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாவட்ட செயலாளர் அன்வர் அலி ,மாவட்ட பொருளாளர் வாணி சித்திக் ,மமக மாவட்ட செயலாளர் ஜாஹிர் ஹுசைன்,துணைசெயலாளர் அஸீஸ் ரகுமான்,மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் கலந்தர் ஆஸிக்,திருவாடனை ஒன்றிய செயலாளர் அக்பர் சுல்தான் மற்றும் மாவட்ட,ஒன்றிய.நகர நிர்வாகிகள், ஜமாத்தார்கள் என சுமார் 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர் நிர்வாகிகள் பரக்கத்அலி,மீரான்,ஜகுபர்சாதிக் ஆகியோர் செய்திருந்தனர். இந்தநிகழ்ச்சியில் நிர்வாகிகள் எப்படி இருக்கவேண்டும் என சுய பரிசோதனை மற்றும் சமுதாயப்பணிகள் ஆர்வமாக செய்வது சம்பந்தமாகவும், முஸ்லிம்களை இழிவுபடுத்த முயற்சி செய்பவர்களுக்கு மத்தியில் நாம் எப்படி சமுதாயத்தை பாதுகாப்பது என்பன போன்ற கருத்துக்கள் கூறப்பட்டது . முடிவில் கீழ்க்கண்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
1 . கடற்கரை சாலைகளில் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் தினமும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது எனவே கடற்கரை சாலைகளில் அமைந்துள்ள அரசின் சாராயக்கடைகளை போர்க்கால அடிப்படையில் மூடவேண்டும்.
2 . இரவு நேரங்களில் கடற்கரை சாலைகளில் செல்லும் லாரிகளில் பின்புறம் ஓட்டப்படவேண்டிய சிகப்பு விளக்கு ஸ்டிக்கர்கள் இல்லாததாலும், இரவு நேரங்களில் கடற்கரைசாலைகளில் செல்லும் மாட்டுவண்டிகளிலும் இதேபோன்று ஸ்டிக்கர்கள் இல்லாததாலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன ஆகவே கடற்கரைசாலைகளில் இரவு நேரங்களில் காவல்துறை கண்காணிப்பு ஏற்படுத்தி விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் .
3 . தொண்டியில் பொறியியல் கல்லூரி தொடங்க மாநில அரசு வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்து விரைவாக இங்குள்ள மாணவர்களின் இந்த நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும். 

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஒன்றிய தலைவர் சாகுல் ஹமீது நன்றி கூறினார்.

நரேந்திர மோடியின் உண்மை நிலை; முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியின் பேட்டி



வேதனையோடும் வெட்கத்துடனும் இதை பகிர்கின்றேன் ...
************************************************* 
ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர்.

குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன்போலீசும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.

பயங்கரமும் படுகொலையும் தாண்டவமாடிய குஜராத்திலிருந்து வருகிறேன். வெறுப்பாலும் அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன். என் இதயம் நோயுற்று ஆன்மா நைந்து விட்டது. குற்றவுணர்வையும் அவமானத்தையும் சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள் வலிக்கின்றன.

அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக் கூரைகளின் கீழே ஒண்டிக்கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்…. அவர்களது முகத்தில் ததும்பும் துயரம்இப்படியொரு துக்கத்தை நான் இதுவரை கண்டதில்லை. வறண்டு போன கண்கள்; நிவாரணப் பொருட்களை இறுகப் பற்றிய அவர்களது கைகள்; இனி இந்த உலகத்தில் இது மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும்உடைமை.

அச்சம் படர்ந்த தணிந்த குரலில் சிலர் பேசிக் கொள்கிறார்கள்; சமையல் வேலை, பிள்ளைகளுக்குப்பால், காயம் பட்டவர்களுக்கு மருந்துஎன்று ஆக வேண்டிய வேலைகளைக் கவனிக்கிறார்கள்மற்றவர்கள்.

ஆனால் ஏதாவது ஒரு முகாமில் நீங்கள் உட்கார்ந்தால் உடனே அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள். புரையோடிய புண்ணிலிருந்து பீய்ச்சியடிக்கும் சீழ் போல, சொற்கள் நம் முகத்தில் பட்டுத் தெறிக்கின்றன. அந்தக் கோரங்களை எழுதவே என் பேனா தடுமாறுகிறது…..

இருப்பினும், கண்டவை கேட்டவைகளில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.

ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து,அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். இதற்கென்ன சொல்கிறீர்கள்?

19 பேர் கொண்ட ஒரு குடும்பம். அந்த வீட்டிற்குள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து, பிறகு உயர் அழுத்த மின் கம்பியை உள்ளே தூக்கிப் போட்டு அத்தனை பேரையும் கொன்றிருக்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள்?

தன்னுடைய அம்மாவும், அக்காள்கள், அண்ணன்கள் ஆறு பேரும் தன் கண் முன்னால் அடித்தே கொல்லப்பட்டதை விவரிக்கிறான் ஜுகாபரா முகாமில் இருக்கும் ஒரு ஆறு வயதுச் சிறுவன். அடித்த அடியில் அந்தப் பையன் செத்துவிட்டதாக நினைத்து விட்டிருக்கிறார்கள்.

மிக மோசமாகத் தாக்கப்பட்ட நரோடா பாட்டியா பகுதியிலிருந்துஒரு குடும்பம் தப்பி ஓடியிருக்கிறது.3 மாதக் கைக்குழந்தையுடனிருந்த மகளால் ஓட முடியவில்லை. எந்தப் பக்கம் போனால் தப்பிக்கலாம்என்று அங்கிருந்த போலீசுக்காரனிடம் அவள் வழி கேட்டாள். அவன் காட்டிய திசையில் நம்பிக்கையோடு சென்றாள். அங்கே தயாராகக் காத்திருந்த கும்பல் அவளையும் குழந்தையையும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியது.

பெண்களின் மீதான பாலியல் வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும் இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை. குடும்ப உறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின் கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக் கற்பழித்திருக்கிறார்கள். கற்பழிப்பு முடிந்தவுடன் அந்தப் பெண்களை எரித்துக் கொன்றிருக்கிறார்கள்; சுத்தியலால் மண்டையில் அடித்தே கொன்றிருக்கிறார்கள்; ஒரு இடத்தில் ஸ்குரூ டிரைவரால் குத்தியே கொன்றிருக்கிறார்கள்.

அமன் சௌக் முகாமிலிருந்த பெண்கள் கூறியவற்றைக் கேட்கவே குலை நடுங்குகிறது. திடீரென வீடு புகுந்த கும்பல், பெண்களின் முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க் களைந்து விட்டு கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் அம்மணமாக நின்று பெண்களை நடுங்கச் செய்து பணியவைத்திருக்கிறது.

அகமதாபாத்தில் நான் சந்தித்த பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர் பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும் கூறுவது இதுதான். குஜராத்தில் நடந்தது கலவரமல்ல; ஒரு பயங்கரவாதத் தாக்குதல், திட்டமிட்ட இனப் படுகொலை”. ஒரு இராணுவத் தாக்குதலைப் போல எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது.

வெறியூட்டும்படியான கோஷங்களை ஒலிபரப்பியபடியேமுதலில் ஒரு லாரி வரும். பின்னாலேயே வரிசை வரிசையாக வரும் லாரிகள் காக்கி டவுசரும், நெற்றியில் காவித்துணியும் கட்டிய ஆட்களைக் கும்பல் கும்பலாக இறக்கிவிடும். வெடி பொருட்கள், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களுடன் களைப்பைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில்களையும்அவர்கள் கையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் செல்போன். உத்திரவுகள் போனில் வந்து கொண்டிருந்தன…. கைகளில் முசுலீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள்இந்து முசுலீம் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார், அவர்களில் யாரைத் தாக்க வேண்டும் என்பது வரை துல்லியமான விவரங்கள் அவர்கள் கையில் இருந்தன…. இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை.

வசதியான முசுலீம்களின் வீடுகள் கடைகள் முதலில் சூறையாடப்பட்டன.பிறகு லாரிகளில் கொண்டு வந்த காஸ் சிலிண்டர்களை கட்டிடத்திற்குள் வைத்துத் திறந்து விடுவார்கள். பிறகு பயிற்சி பெற்ற ஒரு நபர் நெருப்பைக் கொளுத்திப் போடுவான். கட்டிடம் தீப்பிடித்து எரியும்….

மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன. அகமதாபாத் நகரின் சாலை சந்திப்புகளில் இருந்த சில பிரபலமான தர்காக்கள் ஒரே இரவில் இடிக்கப்பட்டுஅதன்மீது சாலையும் போடப்பட்டு விட்டது. இதற்கு முன் அந்த இடத்தில் ஒரு தர்கா இருந்ததே இல்லை என்பது போல அந்தப் புதிய சாலை மீது இப்போது வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

போலீசு மற்றும் அரசு எந்திரத்தின் பழிக்கு அஞ்சாத அலட்சியத்தையும், நேரடியான கூட்டுக் களவாணித்தனத்தையும் எல்லோரும் குற்றம் சாட்டுகிறார்கள். பெண்கள் குழந்தைகளின் கதறலுக்குக் கூட அவர்கள் மனமிரங்கவில்லை.கொலை, கொள்ளை, கற்பழிப்புக்குத்தான் அவர்கள் பாதுகாப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

யார் கலவரக் கும்பலின் தாக்குதலுக்குப்பலியானார்களோ அந்த முசுலீம் மக்கள் மீதுதான் போலீசும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. பல செய்திகள் இதைத்தான் கூறுகின்றன. கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினரும் முசுலீம்கள்தான்.

இருபது ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவன் என்ற முறையில் என்னுடைய சகாக்களான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்கள் கடமைக்கு இழைத்த துரோகத்தை எண்ணி நான் வெட்கப்படுகிறேன். அரசியல்வாதிகளின் உத்தரவுக்குக் காத்திருக்க வேண்டும் என்று எந்தச் சட்டமும் அவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. சுயேச்சையாகவும், நடுநிலையாகவும்,அச்சமின்றியும் செயல் பட வேண்டுமென்றுதான் சட்டம் அவர்களைக் கோருகிறது….

அகமதாபாத்தில் ஒரே ஒரு அதிகாரியாவது நேர்மையாக நடத்து கொண்டிருந்தால்இராணுவத்தை அழைத்து வன்முறையை நிறுத்தியிருக்கமுடியும். உள்ளூர்ப் போலீசு மற்றும் அதிகாரிகளின் உதவியில்லாமல் எந்த ஒரு கலவரமும் சில மணி நேரத்திற்கு மேல் நீடிக்க முடியாது.

கொலையுண்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தம் குஜராத் அதிகாரிகளின் கையில் படிந்திருக்கிறது. அவர்கள் மட்டுமல்ல, இதைக் கண்டும் காணாதது போல சதிகாரத்தனமாக மவுனம் சாதிக்கும் இந்த நாட்டின் உயர் அதிகாரிகள் அனைவருமே இந்தப் படுகொலையின் குற்றவாளிகள்தான்….

இனப்படுகொலை உச்சத்தில் இருந்த போது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சபர்மதி ஆசிரமத்தின் வாயிற்கதவுகள் மூடப்பட்டிருந்ததாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன. அந்த ஆசிரமமல்லவா மக்களுக்கு முதல் புகலிடமாக இருந்திருக்க வேண்டும்! கொலைக் கும்பல்களைத் தடுத்து நிறுத்த எந்தக் காந்தியவாதி தன் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் நின்றார்?

இந்த நாட்டின் குடிமக்கள் என்ற முறையில் ஏற்கனவே நாம் பல அவமானங்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கிறோம். இதோஇன்னொரு பெருத்த அவமானம்! பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களுக்காக அகமதாபாத் நகரில் நடத்தப்படும் அகதி முகாம்களெல்லாம்இசுலாமிய அமைப்புகளால்தான் நடத்தப்படுகின்றன.

முசுலீம் மக்கள் அனுபவித்த துன்பம், இழப்புகள், துரோகம், அநீதி ஆகியவை பற்றியெல்லாம் சக முசுலீம்கள்தான்கவலைப்படவேண்டும்; அவர்களுக்கு ஆறுதலளிக்கவும் அவர்களுடைய வாழ்க்கையை புனரமைத்துத் தரவும் நமக்கு எவ்விதப் பொறுப்புமில்லைஎன்று சொல்வது போல இருக்கிறது இந்த அணுகுமுறை

குஜராத்தின் கொலைகாரக் கும்பல் எதையெல்லாமோ என்னிடமிருந்து திருடிச்சென்றுவிட்டது. அவற்றில் ஒன்று இந்தப் பாடல். நான் பெருமிதத்துடனும் நம்பிக்கையுடனும் பாடி வந்த பாடல். அந்தப் பாடலின் சொற்கள் இவை:

சாரே ஜஹா ஸே அச்சா
இந்துஸ்தான் ஹமாரா

இந்தப் பாடலை இனி ஒரு போதும் என்னால் பாட முடியாது.

குஜாரத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து 13 ஆண்டுகள் முடிந்துவிட்டன.கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு, வன்முறை செய்த இந்து மதவெறியர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இந்தியா ஒரு மதச்சார்பின்மை கொண்ட நாடல்ல, இது இந்துத்துவ நாடு என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? முசுலீம் என்பதற்காகவே இங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதற்கு இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் வெட்கப்படவேண்டும், வேதனைப் படவேண்டும்.

இந்த இனப்படுகொலையின்நாயகனான நரேந்திர மோடி வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமராக நிற்பதற்கு கடும் பிரயத்தனம் செய்து வருகிறார். குஜராத் மாநிலத்தை ஆஹா .ஓஹோ ..என்று வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று உள்ளார் என்ற வெறும் மாய கருத்தை மட்டும் வைத்துக்கொண்டு இவர் ததியானவர் என்று சிலர் கூவிக்கொண்டு திரிகிறார்கள்.ஆனால் உண்மை என்னவெனில் நாட்டிலேயே அதிகமாக வறுமையில் வாடுபவர்கள் குஜராத் மாநிலத்தில் வசிக்கிறார்கள் என்பதை சமிபத்திய ஆய்வு ஒன்று தெளிவுபடுத்தியது. குஜராத்தில் நர்மதா பள்ளத்தாக்கில் இருந்த 2 இலட்சம் நபர்கள் அரசால் வெளியேற்றப்பட்டதால் இன்று மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் பிச்சை எடுத்து கொண்டு பிளாட்பாரங்களில் தூங்கி கொண்டு உள்ளனர். இவரை போன்றவர்கள் நாட்டை ஆண்டால் என்னவாகும்! நாட்டின் பிரதமர் பதவிக்கு இவர் தகுதியானவரா என்பதை மக்களே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.ஆகவே வருங்கால பிரதமர் போட்டிக்குரியவரின் கடந்த கால தகுதிகளை சீர்தூக்கி பார்ப்பது அவசிய

திங்கள், 16 செப்டம்பர், 2013

தடையை மீறி தமுமுக ஆர்ப்பாட்டம்!


ஆம்பூர், செப்.14: உ.பி.மாநிலம், முசப்பர் நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து வரும் கலவரத்தில் பலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆம்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,


இந்த ஆர்ப்பாட்டம் நடத்த நேற்று இரவு வரை அனுமதி அளித்த காவல்துறை, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, இன்று அதிகாலை 2:15மணியளவில், ஆய்வாளர் சுரேஷ் உள்ளிட்ட காவல்துறையினர், தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ் மற்றும் மமக மாவட்ட செயலாளர் நசீர் அஹ்மத் வீட்டிற்கு வந்து , ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட கடிதத்தை அளித்தனர்,ஆர்ப்பாட்டம் செய்தால் அமைதியாக உள்ள ஆம்பூர் நகரில் சட்ட ஒழுங்கு பாதிக்கும் என்று எழுதப்பட்டு இருந்தது,
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு, வீரியத்தோடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ் தலைமை தாங்கினார், மாவட்ட தலைவரும், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அ.அஸ்லம் பாஷா MLA கண்டன உரை நிகழ்த்தினார், மமக மாவட்ட செயலாளர் நசீர் அஹ்மத், மாவட்ட து.தலைவர் மன்னான், மாவட்ட து.செயலாளர் சனாவுல்லாஹ், மமக நகர செயலாளர் ஹமீத், து.தலைவர் சாதிக், து.செயலாளர் அப்ரோஸ உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்,

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

கடன் அட்டை (Credit Card) பாவனை - பொருளியல் பார்வையும் ஷரீஆ நோக்கும்





அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
கடன் அட்டை (Credit Card) பாவனை - பொருளியல் பார்வையும் ஷரீஆ நோக்கும்

வட்டியை அடிப்படையாகக் கொண்ட இன்றைய உலகப் பொருளாதாரம் எந்தளவுதூரம் உலக மக்களின் பொருளாதார வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது என்பதை ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. வட்டி பூச்சிய நிலைக்குச் செல்லாதவரை உலகப் பொருளாதாரம் சீர்பெற முடியாது என்பது பொருளியல் ஆய்வாளர்கள் பலரின் கருத்தாகும். அதாவது வட்டி அமைப்பு முற்றாக ஒழிக்கப்படுவதன் ஊடாகவே உலகில் ஆரோக்கியமான ஒரு பொருளாதார ஒழுங்கு உருவாக முடியும் என்பதே உண்மையாகும்.

ஒரு பொருளியல் அறிஞர் வட்டியை 'வாழ்வின் எய்டஸ் என வர்ணித்துள்ளார். வட்டியானது பொருளாதாரம் எனும் உடலின் பலத்தைக் குன்றச் செய்து அழித்துவிடும் எய்ட்ஸாகவே இருக்கிறது. இதனையே அல்குர்ஆன், 'அல்லாஹ் வட்டியை அழிக்கிறான் எனக் கூறுகிறது.

வட்டி என்பது ஒரு வகையில் நவீன காலனித்துவமாகும். கடனின் கோரப் பிடியில் எவ்வாறு மூன்றாம் உலக நாடுகள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். மூன்றாம் உலக நாடுகள் பலவற்றில் நாளை பிறக்க இருக்கும் குழந்தையும் கூட பெருந்தொகைக் கடனுடன்தான் பிறக்கிறது. இதற்கு நமது நாடும் விதிவிலக்கல்ல. பல நாடுகளால் செல்வந்த நாடுகளினதும், உலக நிதி நிறுவனங்களினதும் கடன்களை அடைக்க முடிவதில்லை.

வருடா வருடம் குட்டிபோடும் வட்டியைக் கட்டுவதே இந்த நாடுகளுக்குப் பெரும்பாடாக இருக்கிறது. பழைய கடனை அடைப்பதற்கே பல நாடுகள் புதிய கடன் வாங்கும் அவலமும் உலகில் தொடர்கிறது. சிலபோது புதிதாகப் பெற்ற கடனால் பழைய கடனை அடைக்க முடிவதில்லை. மாறாக, அதற்கான வட்டியைச் செலுத்துவதில் குறித்த தொகை தீர்ந்து விடுகிறது. உதவி என்ற பெயரில் வழங்கும் இத்தகைய கடன்கள் மூலமே மூன்றாம் உலக நாடுகளில் செல்வந்த நாடுகளின் ஆதிக்கம் நிறுவப்படுகிறது. அவர்களின் விருப்பு வெறுப்புகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவ்வாறுதான் வட்டி அமைப்பானது கலியுக காலனித்துவத்திற்கு வழியமைத்துக் கொடுக்கிறது.

வட்டியின் பயங்கர விளைவுகளை கவனத்திற் கொண்டு அதனை ஹராமாக்கியுள்ள இஸ்லாம் அதற்குப் பிரதியீடாக பல்வேறு வர்த்தக, வாணிப ஒழுங்குகளையும் அமைப்புக்களையும் தந்துள்ளது. வட்டிக்கு மற்றுமொரு பதிலீடாக ஸதகா அமைப்பை இஸ்லாம் அறிமுகப்படுத்தியுள்ளது. இஸ்லாம் கூறும் ஸதகா சார்ந்த ஓர் அம்சம்தான் 'கர்ளுல் ஹஸன் எனும் வட்டியில்லா அழகிய கடனாகும். வர்த்தக, வாணிப, வியாபார நோக்கங்களுக்காக வட்டியை நாடவேண்டியுள்ளவர்களுக்கு இஸ்லாம் பல்வேறு பொருளீட்டல் முயற்சிகளை பிரதியீடாக வழங்கியிருக்கின்றது. தனது உணவுக்காக, அன்றாட அடிப்படை தேவைகளுக்காக வட்டியை நாட வேண்டி உள்ளவர்களுக்கு அது ஸதகாவையும், வட்டியில்லா அழகிய கடன் அமைப்பையும் பதிலீடாக வழங்கியிருக்கிறது.

கடன் வழங்குவது ஒருவகை உதவியும், ஒத்துழைப்புமே அன்றி உழைப்புக்கான வழியல்ல என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். எனவே, கடன் கொடுத்தவர் தான் கொடுத்த அளவையே கடன் வாங்கியவரிடமிருந்து திருப்பிப் பெற வேண்டும். கொடுத்த தொகையை விட கூடியதாக திருப்பித் தர வேண்டும் என எதிர்பார்ப்பதும் ஹராமாகும். இதனையே இஸ்லாம் வட்டி என்கிறது.

கடன் கொடுப்பது இஸ்லாத்தில் ஒரு பெரும் சமூகநலப் பணியாகக் கொள்ளப்படுகிறது. ஒருவர் கடன் வழங்கி செய்கின்ற உதவி அடுத்த சகோதரனின் கஷ்டங்களில் பங்கேற்கும் புண்ணிய காரியமாக இஸ்லாம் கருதுகிறது. இதுபற்றி கூறும் சில நபிமொழிகளை கீழே கவனிப்போம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா றழியல்லாஹு அன்ஹு குறிப்பிடுகிறார்கள்.

'எவர் ஒரு முஸ்லிமுடைய உலகக் கஷ்டங்களில் ஒன்றை நீக்க உதவுகின்றாரோ அவரின் மறுமைநாள் கஷ்டங்களில் ஒன்றை அல்லாஹ் நீக்கிவிடுவான். மேலும் எவர் கஷ்டத்தில் இருக்கும் ஒருவருக்கு (உதவி செய்து) அவருக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கின்றாரோ அல்லாஹ் உலகிலும், மறுமையிலும் அவருடைய (கஷடங்களை) இலேசாக்கிக் கொடுப்பான்.(முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக இப்னு மஸ்ஊத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். 'ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு இரு தடவைகள் கடன் வழங்கினால் அதில் ஒரு தடவை அவர் ஸதகா- தர்மம் செய்தவரைப் போன்றவராவார்.' (இப்னு மாஜா, இப்னு ஹிப்பான்)

அல்குர்ஆன் பின்வருமாறு தூண்டுகின்றது.
'அல்லாஹ்வுக்கு நீங்கள் அழகிய முறையில் கடன்கொடுப்பீர்களாயின் அதை அவன் உங்களுக்கு பன்மடங்காக்கி கொடுத்துக்கொண்டே செல்வான். உங்களு டைய பாவங்களையும் மன்னிப்பான்.' (அத்தகாபுன் : 17)

கடன் தொடர்பான ஷரீஆ வரையறைகள்:

கடன் தொடர்பான சில இஸ்லாமிய வரையறைகளும் சட்டதிட்டங்களும் இருக்கின்றன.

பொதுவாக கடனாகக் கொடுத்த தொகையை விட கூடுதலாகப் பெறப்படும் தொகை தடைசெய்யப்பட்ட வட்டியாக கொள்ளப்படுகின்றது. வட்டிக்கான வரை விலக்கணங்களும் அவ்வாறுதான் அமைந்துள்ளன. ஏதாவது ஒரு பயன்பாட்டைப் பெற்றுத்தரும் எந்தவொரு கடனும் வட்டியாகும் என்றே இஸ்லாமிய அறிஞர்கள் வரைவிலக்கணப்படுத்துகின்றார்கள். கொடுத்த தொகையை விட கூடுதலாகத் திருப்பித் தரவேண்டும் என நிபந்தனை இடுவதே ஹராமாகும்.

ஆனால் நிபந்தனை இடப்படாத நிலையில் கடன்பெற்றவர் சுய விருப்பத்தின் பேரில் கடனைத் திருப்பிச் செலுத்தும்போது பெற்ற தொகையைவிட கூடுதலாக கொடுக்க முடியும். அந்த மேலதிக தொகையை கடன் கொடுத்தவர் பெற்றுக் கொள்வது பிழையானதல்ல. இவ்வாறு கடனை திருப்பி அடைக்கும்போது ஒரு தொகையைக் கூடுதலாகக் கொடுப்பது வரவேற்கத்தக்கதாகும்.

ஜாபிர் இப்னு அப்தில்லா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.'அல்லாஹ்வுடைய தூதர் எனக்குத் தரவேண்டிய ஒரு கடன் இருந்தது. அன்னார் அதனை திருப்பிச் செலுத்தியதோடு தொகையைக் கூட்டியும் தந்தார்.' (புகாரி, முஸ்லிம்)

அபூ ராபி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். ஒருமுறை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவரிடம் ஓர் இளம் ஒட்டகத்தைக் கடனாகப் பெற்றார்கள். அவர்களுக்கு ஸதகாவாக சில ஒட்டகங்கள் கிடைத்தபோது என்னை அழைத்து அந்த மனிதருக்கு ஓர் இளம் ஒட்டகத்தை கொடுத்து கடனை அடைக்குமாறு என்னை வேண்டினார்கள். அதற்கு நான் ஆறு வயதைப் பூர்த்தி செய்த நல்ல தரமான ஓர் ஒட்டகமே இருக்கிறது எனக் கூறினேன். அப்போது அன்னார், அதை அவருக்கு கொடுத்து விடும். உண்மையில் உங்களில் சிறந்தவர் தான் பெற்ற கடனை சிறந்த முறையில் திருப்பிச் செலுத்தியவரே என்றார்கள்.(முஸ்லிம், அஹ்மத்)

பொருளாதார நோக்கில் கிரடிட் கார்ட்:

வட்டிக்கு கடன் வழங்கும் முறை இன்று பல வடிவங்களைப் பெற்றுள்ளது. Mortgage, Finance, Leasing போன்றன அவற்றில் சில வடிவங்களாகும். அவற்றுள் ஒரு வடிவமேCredit Card என வழங்கப்படுகின்ற கடன் அட்டை ஒழுங்காகும். ஆரம்பத்தில் மேற்குலகில் அறிமுகமான கடன் அட்டை இப்போது உலக மயப்படுத்தப்பட்டு உலகின் மூலை முடுக்குகளிலும் சந்து பொந்துகளிலும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒன்றாக மாறியிருக்கின்றது. தேவையுடையோரும் தேவையற்றோரும் இதனை உபயோகிக்கும் நிலை இன்று உருவாகியுள்ளது.

நிதி நிறுவனங்களும் வங்கிகளும் வீட்டுக் கதவுகளைத் தட்டி கவர்ச்சியான விளம்பரங்களையும் சந்தைப்படுத்தும் உத்திகளையும் கையாண்டு இதற்கான வாடிக்கையாளர்களை பெற்று வருகின்றன. பலர் இதனால் ஏற்படும் மோசமான விளைவுகளை உணராத நிலையில் இதற்குப் பலியாகி வருகின்றனர். கடன் அட்டையை வைத்திருப்பதை ஒரு பெருமையாகவும் நாகரிகமாகவும் கருதும் நிலையும் தோன்றியுள்ளது.

உண்மையில் கடன் அட்டை என்பது நுகர்வோரை வீணாக கடன் காரராக மாற்றும் ஒரு நவீன கால சமூக கொடுமையாகும். கையில் பணம் இல்லாத நிலையிலும் உளரீதியாக ஒருவரை செலவு செய்யத் தூண்டும் ஒரு உத்தியாகவே இது காணப்படுகின்றது. பண அட்டையை வைத்திருக்காதவர் கையில் உள்ள காசை கொண்டு அவசியமான பொருட்களை மட்டுமே கொள்வனவு செய்வார். பண அட்டையை வைத்திருப்போரோ அத்தியவசியமற்ற பொருட்களையும் வாங்குவதற்கு தூண்டப்படுவார். அவ்வாறே கையிலுள்ள பணத்தை வைத்து பொருள் வாங்குபவர் ஏலவே திட்டமிட்ட பொருட்களையே கொள்வனவு செய்வார். கடன் அட்டை வைத்திருப்போரோ பலபோது அட்டையிலுள்ள பணத்தை தனது பணமாக நினைத்து செலவு செய்ய முற்படுவார். இத்தகைய உளநிலையை அது உருவாக்குகின்றது என்பது இன்று நிறுவப்பட்ட ஒரு உண்மையாகும். இதனால் தனது நுகர்வுச் சக்திக்கு மேல் செலவு செய்து கடன் பழுவினால் வாடும் பல மில்லியன் பேரை இன்று உலகில் காணமுடிகின்றது. கடன் அட்டைக்கு பலியான பலர் அதன் மோசமான விளைவுகளை உணர்ந்துள்ள போதிலும் அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வகையில் இது ஒருவகை அடிமைத் தளையாகும். அமெரிக்காவில் ஒருவர் தன்னிடம் இருந்த கடன் அட்டையின் தொல்லையிலிருந்து விடுபடும் நோக்குடன் அதனை தூக்கி எறிந்து விட்டு, இன்று நான் இந்த அடிமைத் தளையிலிருந்து விடுதலைப் பெற்றுவிட்டேன் என்றார்.

கடன் பெறுவது ஓர் ஆரோக்கியமான விடயமல்ல. ஒருவர் கடன்பெறும் நிலைக்குத் தள்ளப்படுவது ஒரு பெரும் அவலமாகும். இதனாலேயே நபி (ஸல்) அவர்கள் கூட கடன் சுமையில் இருந்து பாதுகாப்புத் தேடினார்கள். ஆனால் இன்று Credit Cardஉலகில் பல மில்லியன் கணக்கானோர் பெரும் கடன்காரர்களாக மாறியுள்ளனர்.

பெரும்தொகை பணத்தை கையில் வைத்திருப்பது ஆபத்தானது. அந்த வகையில் கடன் அட்டையை வைத்திருப்பது பாதுகாப்பானது என்பது அதனை பயன்படுத்தோரின் ஒரு முக்கியமான வாதமாகும். இது ஒரு நியாயமான வாதம் என்பதனை மறுப்பதற்கில்லை. ஆனால் குறித்த பிரச்சினைக்கான ஒரே பரிகாரம் கடன் அட்டை மட்டுமே என்பது பிழையான வாதமாகும். ஏன் காசோலைகளை பயன்படுத்த முடியாது.

அவ்வாறே Debit Card என்று அழைக்கப்படுகின்ற அட்டைகளும் Credit Card களுக்கு சிறந்த ஒரு மாற்றீடாகும். Debit Card என்பது ஒருவரது வங்கிக் கணக்கில் உள்ள வைப்பின் அளவுக்குப் பயன்படுத்தக் கூடிய ஓர் அட்டையாகும். ஒப்பீட்டு ரீதியில் பொருளாதார நோக்கிலும் சரி இஸ்லாமிய கண்ணோட்டத்திலும் சரி இது ஒரு பாதுகாப்பான ஒழுங்காகும். இன்று உலகில் உள்ள நுகர்வோர் நலன் காக்கும் அமைப்புக்கள் கடன் அட்டைக்குப் பதிலாக கையிலுள்ள பணம் (Cash), காசோலை (Cheque), பெறுகடன் அட்டை (Debit) முதலானவற்றைப் பயன்படுத்துமாறு நுகர்வோருக்கு ஆலோசனை கூறுகின்றன. இன்றும் அமெரிக்காவில் வளர்ந்தோரில் சுமார் 29% மானோர் கடன் அட்டையை பயன்படுத்துவதில்லை என்பது இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.

கிரடிட் கார்ட் பற்றிய ஷரீஆ நோக்கு

பொதுவாக வட்டியுடன் தொடர்புடைய எத்தகையதொரு கொடுக்கல் வாங்கலாக இருப்பினும் அது இஸ்லாமிய நோக்கில் ஹராமானது என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை என்பதை அனைவரும் அறிவர். ஆயினும் தற்கால வங்கிகள் வழங்கும் கடன் அட்டைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக சமகால அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. கடனட்டையைப் பெறும் ஒருவர் அதில் குறிக்கப்பட்டுள்ள தவணைக்கு முன்பாக தாம் பெற்ற கணக்கை செலுத்தி விட்டால் தாமதக் கட்டணத்தினால் விளையும் வட்டியின் பாதிப்பில் இருந்து விடுபட முடியும் என்பதை வைத்தே கருத்து வேறுபாடு தோன்றியுள்ளது.

இந்த வகையில் குறிக்கப்பட்டுள்ள தவணைக்கு முன்பாக கணக்கைச் செலுத்தி கால தாமதம் காரணமாக கொடுக்க வேண்டியிருக்கும் வட்டித் தொகையை தவிர்க்கும் நிலையில் ஒருவர் கடனட்டையைப் பயன்படுத்த முடியும் என சில அறிஞர்கள் கருதுகின்றனர். கடனட்டையைப் பெற்றவர் காலதாமதமின்றி கணக்கை செலுத்தி வட்டி கொடுக்கும் நிலையைத் தவிர்த்த போதிலும் காலதாமதம் ஏற்பட்டால் குறித்த வட்டித் தொகையை செலுத்துவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடுகின்றார் என்ற வகையில் இது ஹராமானதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் என்ற கருத்தை மற்றும் சில அறிஞர்கள் முன்வைக்கின்றனர்.

ஷரீஆ நோக்கில் மட்டுமன்றி ஏலவே விளக்கியது போல பொருளாதார நோக்கிலும் கடனட்டைப் பயன்பாடு பிரச்சினைக்குரிய ஒன்றாகவே விளங்குகின்றது. கடன் அட்டையைப் பயன்படுத்தும் ஒரு முஸ்லிம் ஆரம்பத்தில் வட்டி கொடுப்பதில் இருந்து விடுபடும் வகையில் உரிய தவணைக்கு முன்னர் கணக்கைச் செலுத்தினாலும் காலப் போக்கில் கவனக்குறைவினால் உரிய காலத்தில் பணத்தை செலுத்த முடியாமல் போய் வட்டி செலுத்தும் நிலைக்குத் தள்ளப்படும் ஆபத்து உண்டு என்பதை எவரும் மறுக்க முடியாது. மேலும் கடனட்டை அடிப்படையில் வட்டியை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஓர் ஒழுங்காகும்.

ஒரு சிலர் உரிய தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்தி வட்டியில் இருந்து விடுபட்டாலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் காலதாமதத்தின் காரணமாக ஒரு சிறு தொகை வட்டியையேனும் செலுத்துபவர்களாகவே இருப்பர். எனவே ஒரு முஸ்லிம் நேரடியாக இல்லாத போதிலும் மறைமுகமாக வட்டியை அடிப்படையாகக் கொண்ட ஒரு கொடுக்கல் வாங்கல் ஒழுங்கு வளர்வதற்கு துணை புரிகின்றார் என்ற வகையில் குற்றவாளியாக கருதப்படும் நிலை காணப்படுகின்றது.

எனவே, ஒரு பேணுதலான முஸ்லிம் கடனட்டைப் பாவனையை தவிர்த்துக் கொள்வதே பொருத்தமான நிலைப்பாடாக கொள்ளப்படுகின்றது. இதற்கு மாற்றீடாக காசோலையை (Cheque) அல்லது பெறுகடன் அட்டையை (Debit Card) பயன்படுத்துவதே பொருத்தமானதாகும்.


அல்லாஹ்வே யாவற்றையும் நன்கறிந்தவன்.