திங்கள், 30 செப்டம்பர், 2013

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தமுமுக நிர்வாகிகள் நல் ஒழுக்க பயிற்சி முகாம் !







பத்திரிக்கை செய்தி !

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தமுமுக திருவாடானை தாலுகா நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா தலைமையில் நடந்தது இந்தநிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மாநில செயலாளர் கோவை செய்யது,மமக அமைப்பு செயலாளர் மண்டலம் ஜெயினுலாபுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாவட்ட செயலாளர் அன்வர் அலி ,மாவட்ட பொருளாளர் வாணி சித்திக் ,மமக மாவட்ட செயலாளர் ஜாஹிர் ஹுசைன்,துணைசெயலாளர் அஸீஸ் ரகுமான்,மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் கலந்தர் ஆஸிக்,திருவாடனை ஒன்றிய செயலாளர் அக்பர் சுல்தான் மற்றும் மாவட்ட,ஒன்றிய.நகர நிர்வாகிகள், ஜமாத்தார்கள் என சுமார் 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர் நிர்வாகிகள் பரக்கத்அலி,மீரான்,ஜகுபர்சாதிக் ஆகியோர் செய்திருந்தனர். இந்தநிகழ்ச்சியில் நிர்வாகிகள் எப்படி இருக்கவேண்டும் என சுய பரிசோதனை மற்றும் சமுதாயப்பணிகள் ஆர்வமாக செய்வது சம்பந்தமாகவும், முஸ்லிம்களை இழிவுபடுத்த முயற்சி செய்பவர்களுக்கு மத்தியில் நாம் எப்படி சமுதாயத்தை பாதுகாப்பது என்பன போன்ற கருத்துக்கள் கூறப்பட்டது . முடிவில் கீழ்க்கண்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
1 . கடற்கரை சாலைகளில் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் தினமும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது எனவே கடற்கரை சாலைகளில் அமைந்துள்ள அரசின் சாராயக்கடைகளை போர்க்கால அடிப்படையில் மூடவேண்டும்.
2 . இரவு நேரங்களில் கடற்கரை சாலைகளில் செல்லும் லாரிகளில் பின்புறம் ஓட்டப்படவேண்டிய சிகப்பு விளக்கு ஸ்டிக்கர்கள் இல்லாததாலும், இரவு நேரங்களில் கடற்கரைசாலைகளில் செல்லும் மாட்டுவண்டிகளிலும் இதேபோன்று ஸ்டிக்கர்கள் இல்லாததாலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன ஆகவே கடற்கரைசாலைகளில் இரவு நேரங்களில் காவல்துறை கண்காணிப்பு ஏற்படுத்தி விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் .
3 . தொண்டியில் பொறியியல் கல்லூரி தொடங்க மாநில அரசு வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்து விரைவாக இங்குள்ள மாணவர்களின் இந்த நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றவேண்டும். 

ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஒன்றிய தலைவர் சாகுல் ஹமீது நன்றி கூறினார்.