ஆம்பூர், செப்.14: உ.பி.மாநிலம், முசப்பர் நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து வரும் கலவரத்தில் பலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆம்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
இந்த ஆர்ப்பாட்டம் நடத்த நேற்று இரவு வரை அனுமதி அளித்த காவல்துறை, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, இன்று அதிகாலை 2:15மணியளவில், ஆய்வாளர் சுரேஷ் உள்ளிட்ட காவல்துறையினர், தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ் மற்றும் மமக மாவட்ட செயலாளர் நசீர் அஹ்மத் வீட்டிற்கு வந்து , ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட கடிதத்தை அளித்தனர்,ஆர்ப்பாட்டம் செய்தால் அமைதியாக உள்ள ஆம்பூர் நகரில் சட்ட ஒழுங்கு பாதிக்கும் என்று எழுதப்பட்டு இருந்தது,
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு, வீரியத்தோடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ் தலைமை தாங்கினார், மாவட்ட தலைவரும், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அ.அஸ்லம் பாஷா MLA கண்டன உரை நிகழ்த்தினார், மமக மாவட்ட செயலாளர் நசீர் அஹ்மத், மாவட்ட து.தலைவர் மன்னான், மாவட்ட து.செயலாளர் சனாவுல்லாஹ், மமக நகர செயலாளர் ஹமீத், து.தலைவர் சாதிக், து.செயலாளர் அப்ரோஸ உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்,