வியாழன், 29 மே, 2014

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை வாய்ப்பு ............




ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கிளார்க் பதவிகளுக்காக வேலை வாய்ப்பு பற்றி விளம்பரம் வெளியிடப் பட்டுள்ளது.
மொத்த பணியிடங்கள் : 5092. இதில் தமிழகத்திற்கு 373 இடங் களும், புதுச்சேரிக்கு 3 இடங்கள். வயது வரம்பு: 1.5.2014 அன்று 20வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருத்தல் வேண் டும்.
28வயதை கடக்காதவராக இருப் பது அவசியம். எஸ்.சி, எஸ்.டி பிரிவின ருக்கு 5ஆண்டுகளும்,அதாவது 33 வயது வரையிலும், ஓ.பி.சி. பிரிவினர்க்கு 3 ஆண்டுகளும், அதாவது 31 வயது வரை யிலும், அனுமதிக்கப்படும்.
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு நிறைவு செய் தவர்கள், மற்றும் பட்டப்படிப்பு இறுதி பருவத்தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்: எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கும், முன்னாள் படை வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் : ரூபாய். 100 பொது மற்றும் ஓ.பி.சி: ரூ.450.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.6.2014. விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு :www.sbi.co.in

செவ்வாய், 20 மே, 2014

தோல்வியை தோற்கடித்த மனிதநேய மக்கள் கட்சி!!!!!

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

தோல்வியை தோற்கடித்த மனிதநேய மக்கள் கட்சி!!!!!



நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்து என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மாநில தேசியக் கட்சிகள் மத்தியில் தோல்வியை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் தோல்வியை தோற்கடித்து முன்பைவிட முனைப்புடன் தஃவா மற்றும் சமுதாயப் பணிகளை  செய்து கொண்டிருக்கிறார்கள்.

தோல்வியால்  தன் தோற்றத்தை வெளியில் காட்ட வெட்கப்படும் தலைவர்கள் மத்தியில் பதவி வெறி இல்லாத நம் தலைவர்கள் தோல்வியை தோரணமாக்கி எப்பொழுதும் போல் திருமண நிகழ்ச்சிகள், இறையடி சேர்ந்தவர்கள் இல்லத்தில் துக்கம் விசாரிப்பது, மார்க்க விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்துவது இரத்ததான முகாம்கள், இலவச ஆம்புலன்ஸ் சேவை போன்ற அன்றாட பணிகளை பரவசத்துடன் செய்து கொண்டிருக்கிறார்கள்.

உஹதுக் களத்தையும் சந்தித்த சந்ததியல்லவா!!!!  

2014 அரசும் மூஸாநபியின் காலத்து அரசும்!!!!!!!




அல்லாஹ்வின் திருப்பெயரால்.....




நம்மிடம் சில வாய்மொழிப் பழக்கம் உண்டு ஏதேனும் பழைய பொருளையோ அல்லது பழைய செய்தியையோ பார்த்தால் கேட்டால் இது மூஸாநபி காலத்து செய்தி இது மூஸாநபிகாலத்துப் பொருள் என்று நகைச்சுவைக்குச் சொல்வோம்.

ஆனால் இன்று அந்த வழக்குமொழி உண்மையாகி விட்டது, ஆம் இன்று இந்தியாவில் உள்ள ஆட்சி முஸாநபி காலத்து ஆட்சி. முஸாநபி காலத்து ஃபிர்அவ்னைப் ஒத்தவர் இன்று நம் தாய்நாட்டை ஆளப்போகிறார். இதனால் முஸ்லிம்கள் கலங்கி நிற்கின்றனர். நம்மை யார் காப்பது என்று கரைகின்றனர். இதற்கு என்னத் தீர்வு அதை நாம் மூஸாநபியின் வாழ்க்கையில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம்.

ஃபிர்அவ்ன் முஸாநபியையும் அவர்களை ஏற்றவர்களையும் துரத்தியபோது கடல் குறுக்கிடுகிறது அப்போது மூஸாநபியுடன் இருந்தவர்கள் நாம் வசமாக மாட்டிக் கொண்டோம் நம்மை யார் காப்பது என்று கலங்கிய போது மூஸாநபி சொன்னார்களே

'அதற்கு (மூஸா)இ 'ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்' என்று கூறினார்;.' அல்குர்ஆன் 26:62.

நாம் உன்மை முஃமீன்களாக இருந்தால் இந்த வசனமே நமக்குப் போதுமானது. ஆட்சி அவர்களிடம் இருந்தால் என்ன நம்முடன் இறைவன் இருக்கிறான்.

இவர்கள் கையில் பரசே இருந்தாலும் நம் சிரசு வல்ல ரஹ்மானுக்கு பணியுமே தவிர அழியும் இவர்களின் ஆட்சிக்கில்லை.

இந்தியாவில் இந்த அரசியல் மாற்றம் நம் சமுதாய ஒற்றுமைக்கு ஏற்றமாக அமையும் இன்ஷாஅல்லாஹ்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை: ஜவாஹிருல்லா!



சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில், தேர்தல் ஆணையத்தில் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்று மமக ராமநாதபுரம் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிபிசிக்கு அவர் அளித்த தொலைபேசி நேர்காணலில் தெரிவித்ததாவது:

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆரம்பத்தில் அப்பாவி மக்கள் கொண்டு சென்ற பணங்களை பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம், கடைசி நேரத்தில் நடந்த ஆளுங்கட்சியின் பண பட்டுவாடாவை தடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை" என்று தெரிவித்தார்.

மேலும் "தேர்தலுக்கு முதல்நாள் 144 தடை உத்தரவு பிறப்பித்ததில் உள் நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. பண பட்டுவாடாவை தடுக்க இந்த தடை உத்தரவு பிறப்பித்ததாக் கூறப்பட்டாலும், அந்த நேரத்தில் பணபட்டுவாடா நடைபெற்றதையும் தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. ஆக இந்த தேர்தலில் பண பலமே வெற்றி பெற்றுள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும் தேர்தல் முடிவுகளை ஏற்பதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
Source : INNERAM