செவ்வாய், 20 மே, 2014

2014 அரசும் மூஸாநபியின் காலத்து அரசும்!!!!!!!




அல்லாஹ்வின் திருப்பெயரால்.....




நம்மிடம் சில வாய்மொழிப் பழக்கம் உண்டு ஏதேனும் பழைய பொருளையோ அல்லது பழைய செய்தியையோ பார்த்தால் கேட்டால் இது மூஸாநபி காலத்து செய்தி இது மூஸாநபிகாலத்துப் பொருள் என்று நகைச்சுவைக்குச் சொல்வோம்.

ஆனால் இன்று அந்த வழக்குமொழி உண்மையாகி விட்டது, ஆம் இன்று இந்தியாவில் உள்ள ஆட்சி முஸாநபி காலத்து ஆட்சி. முஸாநபி காலத்து ஃபிர்அவ்னைப் ஒத்தவர் இன்று நம் தாய்நாட்டை ஆளப்போகிறார். இதனால் முஸ்லிம்கள் கலங்கி நிற்கின்றனர். நம்மை யார் காப்பது என்று கரைகின்றனர். இதற்கு என்னத் தீர்வு அதை நாம் மூஸாநபியின் வாழ்க்கையில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம்.

ஃபிர்அவ்ன் முஸாநபியையும் அவர்களை ஏற்றவர்களையும் துரத்தியபோது கடல் குறுக்கிடுகிறது அப்போது மூஸாநபியுடன் இருந்தவர்கள் நாம் வசமாக மாட்டிக் கொண்டோம் நம்மை யார் காப்பது என்று கலங்கிய போது மூஸாநபி சொன்னார்களே

'அதற்கு (மூஸா)இ 'ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்' என்று கூறினார்;.' அல்குர்ஆன் 26:62.

நாம் உன்மை முஃமீன்களாக இருந்தால் இந்த வசனமே நமக்குப் போதுமானது. ஆட்சி அவர்களிடம் இருந்தால் என்ன நம்முடன் இறைவன் இருக்கிறான்.

இவர்கள் கையில் பரசே இருந்தாலும் நம் சிரசு வல்ல ரஹ்மானுக்கு பணியுமே தவிர அழியும் இவர்களின் ஆட்சிக்கில்லை.

இந்தியாவில் இந்த அரசியல் மாற்றம் நம் சமுதாய ஒற்றுமைக்கு ஏற்றமாக அமையும் இன்ஷாஅல்லாஹ்.