திங்கள், 22 செப்டம்பர், 2014
16 வருடங்களுக்கு முன் ரியாத்தில் தவறிய தமிகபணிப்பெண் தமுமுக மற்றும் சமூகஆர்வலரின் முயற்சியால் மீட்பு:
ஏக இறைவனின் திருப்பெயரால்...
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைபேட்டையைச் சேர்ந்த சகோதரி நஜீமுனிஸா தனியார் ஏஜென்ஸி மூலம் 1998 ஆம் ஆண்டு தன் குடும்பத்தின் வருமையை போக்க பணிப்பெண் வேலைக்கு சவுதிஅரேபியாவின் ரியாத் நகருக்குவந்துள்ளார்.
வேலைக்குவந்த இடத்தில் அவருக்கு பலபிரச்சனைகள் ஏற்பட்டு கடந்த 16 வருடங்களாக தன் குடும்பத்தாருடன் எந்தவிததொடர்பும் இல்லாமல் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஊரில் உள்ள உறவினர்களும் சரியான தொடர்பு இல்லாதகாரணத்தால் குழப்பமான நிலையில் பத்தரிக்கைகள்இதொலைக்காட்சிகள் மற்றும் மாவட்டஆட்சிரியர் அலுவலகம் வழியாக தேடிக் கொண்டே இருந்தார்கள். மேலும் இப்பெண்ணின் சகோதரர் நஜீர் பலவருடங்களாக ரியாத் வந்துஇவேலை செய்துகொண்டேதேடிக் கொண்டு இருந்தார்கள்.
இந்தசூழ்நிலையில் தான் இறைவனின் நாட்டத்தால் அப்பெண்ணின் நிலையில் சிலமாறுதல்கள் ஏற்பட்டது. அதாவது கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இப்பணிபெண் வேலைசெய்யும் சவுதிவீட்டிற்குஇ இவரின் உறவினர் விருந்திளர்களாக சென்றார்கள். அப்போது அவர்களுடன் அந்தவீட்டில் வேலைசெய்த இலங்கைநாட்டைச் சேர்ந்த தமிழ் பேசும் பணிப் பெண்ணும் சென்றார். அப்போது இருவரும் சந்திக்கநேரிட்டது. சகோதரி நஜீமுனிஸா தன்னுடைய நிலையை எடுத்துக் கூறினார். சில மாதங்களுக்கு பிறகு இலங்கையைச் சோந்த பணிப்பெண் இலங்கை நாட்டிற்கு சென்றுவிட்டார்கள். அங்கு திருவண்ணாமலையைச் சேர்ந்த சகோதர் ஒருவரிடம் இக்கதையை கூறியதோடுஇசகோதரி நஜீமுனிஸா அவர்கள் வேலைசெய்யும் இடத்தின் சிலஅடையhளங்களையும் கூறினார். இந்த அடையாளங்களை வைத்துக் கொண்டு தன்னுடைய தாயைதேட மூத்தமகன் நஜீமுதீன் ரியாத்திற்கு வந்துதேடியும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநேரத்தில் தமுமுக மத்தியமண்டலத்தின் கீழ் செயல்படும் நஸீம் கிளையின் துணைத்தலைவர் மௌலவி முஸ்தாகஅஹமதுஅவர்களுக்கு இச்செய்திசென்றது. இதை அவர் தமுமுக மத்திய மண்டலத்திற்கு தெரியப்படுத்தினார். மண்டலத்தின் பொதுச்செயலாளர் மீமிசல் நூர் முஹம்மதுஇசமூகஆர்வலர் கோட்டார் பாரூக் மற்றும் கேரளவைச் சேர்ந்த சமூகஆர்வலர் ரஃபீக் இவர்களின் முயற்சியால் சில அடையாளங்களை வைத்துக் கொண்டு இறுதியாக சகோதரி நஜீமுனிஸா வேலையும் செய்யும் வீட்டை கண்டுபிடித்தார்கள். இருந்தபோதிலும் அங்குசகோதரிநஜீமுனிஸா இருக்கிறார் என்பதைஉறுதிபடுத்தமுடியவில்லை.
இது தொடர்பாகஅனைத்துஆதாரங்களை வைத்துக் கொண்டுஇசகோதரியின் சகோதரர் நஜீர்மூலமாக இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டார்கள். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு துரிதமாக இந்திய தூதரக அதிகாரிகள் சகோதரி நஜீமுனிஸா வேலை செய்யும் பகுதியில் கீழ் உள்ளகாவல் நிலையத்தை தொடர்பு கொண்டார்கள். நல்ல எண்ணம் கொண்ட அந்த காவல்துறையை சேர்ந்தவர்கள் உடனடியாக சகோதரி நஜீமுனிஸா வேலைச் செய்யும் சவுதிவீட்டிற்கு சென்று மீட்டனர். மேலும் உடனடியாக 16 வருடங்களுக்கு உரிய சம்பளத்தை கொடுத்துஇ இந்தியாவிற்கு இரண்டொருநாட்களில் அனுப்பிவைக்க உத்தரவிட்டனர்கள்.. எல்லாபுகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. மத்தியமண்டலத்தின் சார்பாக மீமிசல் நூர் முஹம்மது இந்நற்காரியத்திற்கு துணைப்புரிந்த ஏக இறைவன்இஇலங்கைசகோதரிஇஅனைத்துசமூகஆர்வலர்கள்இ இந்தியதூதரகஅதிகாரிகள் மற்றும் சவுதிஅரேபியாகாவல்துறைஅதிகாரிகள் அனைவருக்கும் தன்னுடையநன்றியைதெரிவித்துகொண்டார்.
மேலும் சகோதரி நஜீமுனிஸா அவாகளின் எதிர்கால வாழ்க்கை எந்தவித சோகமின்ற சிறப்பாகஅமைய நாம் அனைவரும் துவா செய்யுமாறுகேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வின் மூலமாகவெளிநாடு செல்லும் பணிப்பெண்களுக்கு தெரியப்படுத்துவதுஇமுடிந்தவரை வெளிநாடு செல்லும் வாய்ப்பை தவிர்த்து கொள்ளுங்கள். வேறு வழியின்றி செல்ல நேரிடும் போதுஇஅரசு அங்கீகாரம் பெற்ற டிராவல் ஏnஐன்சி மூலமாக செல்வதோடுஇஅவர்களிடமிருந்து தங்களின் வேலைக்கான அக்ரிமண்டை பெற்றுக் கொள்ளுங்கள். தாங்களின் அனைத்து ஆவணங்களின் நகல்களை தங்களின் குடும்பஉறவினரிடம் கொடுத்துவிட்டு செல்லுங்கள். மேலும் சமுதாய அமைப்பினர் அல்லது சுயதொழில் செய்யும் வல்லுணர்களிடம் உரிய ஆலோசனை பெற்றுசெல்லவேண்டும் என்பதைதெரியப்படுத்துகிறோம்.

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014
இந்துத்துவா வேறு; இந்தியத்துவா வேறு !!!!
அகில
இந்திய அளவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு நடந்த
இடைத்தேர்தலின் முடிவுகள் சில நல்ல செய்திகளைச்
சொல்லியுள்ளன. அதிலும் குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் நடந்த
இடைத்தேர்தலின் முடிவுகள் தேசிய அரசியலின் எதிர்கால அணுகுமுறைகளில் சில
அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை.
அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு மக்களின் ஆதரவை அணிதிரட்டுவதே ஜனநாயக அரசியல். பெரும்பான்மை மக்களின் ஆதரவை
யார் தங்களுக்குச் சாதகமாக அணிதிரட்டுகிறார்களோ அவர்கள் ஆட்சியையும் அதிகாரத்தையும் கைப்பற்றுகிறார்கள்.
‘தங்களவர்’
அல்லது
‘தங்களுக்கு நெருக்கமானவர்’
என்று மக்கள் யாரைக் கருது கிறார்களோ,
அவர்களின் பின்னால் அணிதிரள்கிறார்கள்.
அடையாள அரசியலின் அபாயங்களை இந்தத் தலைமுறை எவ்வளவு தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறது என்பதற்கு உத்தரப் பிரதேச
இடைத்தேர்தல் முடிவுகள் அருமையான எடுத்துக்காட்டு. “வளைகுடா நாடுகளிலிருந்து திரட்டப்படும் பெரும் பணத்தை
முதலீடாகக் கொண்டு இஸ்லாமிய இளைஞர்கள்,
விவரம் தெரியாத இந்துப் பெண்களை வசியப்படுத்தித் திருமணம் செய்துகொண்டு,
பாலியல்
பலாத்காரம் செய்து பின்பு மதமாற்றமும் செய்கிறார்கள். இந்த லவ் ஜிகாதை
முறியடிப்பதற்கு இந்துக்களே அணிதிரண்டு பாஜகவுக்கு வாக்களியுங்கள்”
என்று
அறைகூவல் விடுத்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் யோகி ஆதித்யாநாத்தைத் தங்கள்
தேர்தல் பிரச்சாரத்தின் தளபதியாக நியமித்துத் தேர்தலைச் சந்தித்தது பாஜக.
“இந்த லவ் ஜிகாதை அரங்கேற்றும் இஸ்லாமியர்கள் இருக்க வேண்டிய இடம் ஒன்று பாகிஸ்தான் அல்லது கபுருஸ்தான்
(கல்லறை)”
என்ற கோஷம்தான் தேர்தல் பிரச்சாரம் எங்கும் எதிரொலித்தது.
புறக்கணித்த மக்கள்
பல நிலைகளில் பலவீனமாகி நின்ற அகிலேஷ் யாதவின் அரசு,
லவ்
ஜிகாதை அரங்கேற்றும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்ற
சங்க பரிவார நிறுவனங்களின் பிரச்சாரத்தால் தேர்தல் வெற்றி உறுதி என்று பாஜக
ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர்.
சட்டம்-ஒழுங்கு,
ஊழல்,
அரசு இயந்திரத்தின் மந்தம்,
பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல பிரச்சினைகளில் தோற்றுப்போன சமாஜ்வாதி கட்சிக்கு மக்கள் அமோகமாக வாக்களிக்க
என்ன காரணம்? “என்ன நடந்தாலும் ஏற்றுக்கொள்வோம்,
இந்தியா என்னும் தத்துவத்தை உடைக்க அனுமதிக்க மாட்டோம்”
என்று இந்தத் தலைமுறை சொன்னதுதானே உண்மை!
வளர்ச்சி,
முன்னேற்றம்,
ஊழலற்ற-திறந்த நிர்வாகம்,
எல்லோருக்கும்
நல்ல காலம் என்று நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குக் கேட்டவர்கள்
இடைத்தேர்தலில் அடையாள அரசியலை முன்னெடுத்துச் சென்றதை மக்கள் ஏற்றுக்கொள்ள
வில்லை. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட
நிதிநிலை அறிக்கையில் மதரஸாக்களை விரிவாக்க 100 கோடி ரூபாயைத் தந்துவிட்டு,
மதரஸாக்கள்
தீவிரவாதிகளின் கூடாரம் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜ்
பிரச்சாரம் செய்த பாஜகவின் முரண்பட்ட அரசியல் நிலைப்பாட்டை மக்கள்
நிராகரித்தார்கள்.
அரசியல் போலித்தனம்
பாஜகவின் முன்னணித் தலைவர்கள் முக்தர் அப்பாஸ் நக்வி,
ஷா
நவாஸ் ஹுசைன் போன்றவர்களின் மனைவியர் ஆசாரமான இந்துக் குடும்பத்துப்
பெண்கள். இன்றும் இந்துக்களாகவே வாழ்கிறார்கள். பாஜகவின் மாநிலங்களவையின்
முன்னாள் தலைவர் சிக்கந்தர் பகத்தும்
இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டவர். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்
ஹேம மாலினியும்,
முன்னாள்
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மேந்திராவும் திருமணத்துக்காக
இஸ்லாமியர்களாக மதம் மாறிக்கொண்டவர்கள். இவர்களைத் தங்களது முன்னணித்
தேர்தல் பிரச்சாரகர்களாக வைத்துக்கொண்டு
‘லவ் ஜிகாத்’
என்று யோகி ஆதித்யாநாத் பிரச்சாரம் செய்ததை
‘கடைந்தெடுத்த அரசியல் போலித்தனம்’
என்பதை மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் இயக்கத் தலைவர் மோகன் பகவத்,
“இந்த தேசத்தில் இஸ்லாமியர்,
கிறிஸ்தவர்,
பெளத்தர்கள்,
சீக்கியர்கள் அனைவரையுமே இந்துக்கள் என்றே அழைக்க வேண்டும்”
என்று சொன்னபோதும்,
ஆதித்யாநாத்,
மேனகா காந்தி,
சாஷி மகராஜ் போன்ற பாஜகவின் முன்னணித் தலைவர்கள் வகுப்புவாதத்தைத் தூண்டிவிடும் வகையில் பகிரங்கமாகப் பேசியபோதும்,
பிரதமர்
வாய் திறக்கவில்லை என்பதை இந்தத் தலைமுறை கவனித்துக்கொண்டேதான் இருக்
கிறது. எப்போதும் பேசாத மன்மோகன் சிங் இப்போதும் பேசாமல் இருப்பதில்
வியப்பில்லை. ஆனால்,
பேச்சே மூச்சென்று இருக்கக்கூடிய பிரதமர் மோடி இதையெல்லாம்பற்றிப் பேசாமல் இருப்பதன் மர்மம் அவர்களுக்கு விளங்கவில்லை.
“லவ் ஜிகாத் என்றால் என்ன?”
என்று கேட்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இவர்கள் நம்பத் தயாராக இல்லை.
ஜாதி விட்டு மாற்று ஜாதியில் திருமணம் செய்துகொள்வதும்,
மாற்று
மதத்தில் திருமணம் செய்துகொள்வதும் தேசவிரோதக் குற்றம்போல் கருதப்படுவதை
இந்தத் தலைமுறை ஏற்றுக் கொள்வில்லை. தேசிய மனித உரிமை ஆணையம் தந்துள்ள
தகவலின்படி உத்தரப் பிரதேச மாநிலத்தில்,
மகராஜ்
கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் நடக்கும் திருமணங்களில் 75 சதவீதத்துக்கும்
அதிகமானது குழந்தைத் திருமணங்கள். இந்தக் குழந்தைத் திருமணங்களைக்
கண்டிப்பதற்கும் களைந்தெடுப்பதற்கும்
சங்க பரிவார நிறுவனங்கள் ஏன் முன்வருவதில்லை என்ற கேள்வியை இந்தத்
தலைமுறையினர் முன்வைக்கின்றனர்.
“பாரத் என்றோ - ஹிந்துஸ்தான் என்றோ உங்கள் விருப்பப்படி இந்த நாட்டை அழைத்துக்கொள்ளுங்கள். எங்கள் எதிர்காலம்
பிறந்துவிட்டது. எங்களைப் பொறுத்தவரை இது டிஜிட்டல் இந்தியா”
என்று அவர்கள் உரக்கச் சொன்னதை ஆட்சியாளர்கள
Thanks : Mohamed Ali Yousuf
சனி, 20 செப்டம்பர், 2014
வியாழன், 18 செப்டம்பர், 2014
நான் விரும்பிய எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை.
ஆனால் தேவையான எல்லாமும் எனக்கு இறைவனிடம் இருந்தது கிடைத்தது..
நான் எனக்கு பலம் வேண்டும் எனக் கேட்டேன்.
இறைவன் எனக்கு கஷ்டங்களைக் கொடுத்து என்னை பலமுள்ளவன் ஆக்கினான்.
இறைவன் எனக்கு கஷ்டங்களைக் கொடுத்து என்னை பலமுள்ளவன் ஆக்கினான்.
நான் எனக்கு அறிவு வேண்டும் எனக் கேட்டேன்.
இறைவன் எனக்கு பிரச்னைகளைக் கொடுத்து அவைகளை தீர்க்கச் செய்தான்.
இறைவன் எனக்கு பிரச்னைகளைக் கொடுத்து அவைகளை தீர்க்கச் செய்தான்.
நான் எனக்கு முன்னேற்றம் வேண்டும் எனக் கேட்டேன்.
இறைவன் எனக்கு சிந்தனையையும் சக்தியையும் கொடுத்து உழைக்கச் செய்தான்.
இறைவன் எனக்கு சிந்தனையையும் சக்தியையும் கொடுத்து உழைக்கச் செய்தான்.
நான் எனக்குத் தைரியம் வேண்டும் எனக் கேட்டேன்.
இறைவன் எனக்கு ஆபத்துக்களை கொடுத்து அவைகளை எதிர்கொள்ளச் செய்தான்.
இறைவன் எனக்கு ஆபத்துக்களை கொடுத்து அவைகளை எதிர்கொள்ளச் செய்தான்.
நான் எனக்கு சாதகங்கள் புரிய வேண்டும் எனக் கேட்டேன்.
இறைவன் எனக்கு சந்தர்ப்பங்களைத் தந்தான்.
இறைவன் எனக்கு சந்தர்ப்பங்களைத் தந்தான்.
நான் விரும்பிய எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை.
ஆனால் தேவையான எல்லாமும் எனக்கு இறைவனிடம் இருந்தது கிடைத்தது... (யாரோ)..
ஆனால் தேவையான எல்லாமும் எனக்கு இறைவனிடம் இருந்தது கிடைத்தது... (யாரோ)..
Engr.Sulthan
புதன், 17 செப்டம்பர், 2014
செவ்வாய், 16 செப்டம்பர், 2014
உங்க ஏரியா போஸ்ட் மேன் யார்...?
அஞ்சல் துறையின் தேவை மிகவும் குறைந்து
விட்டாலும், இன்னமும் அரசு நிறுவனங்களில் இருந்து வரும் தபால்கள், அரசு
வேலைக்கான தபால்கள் போன்றவை தபால் துறை
மூலமாக மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மணியார்டரை இப்போதும் நிறைய
மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
அந்த வகையில், ஏதாவது ஒரு முக்கியமான தபால்
நமக்கு வந்து சேர வேண்டியிருக்கும் நிலையில், நாம் வீட்டில் இல்லாததால் அது
திருப்பி அனுப்பப்படுகிறது. அல்லது
வீட்டு வாசலிலோ, கதவிலோ வைத்து விட்டு செல்வதால் தவற நேரிடுகிறது.
இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க, தபால்காரர்களின்
முழு விலாசம், மொபைல் நம்பருடன் அவர்கள் எந்தெந்த ஏரியாக்களில் தபால்
பட்டுவாடா செய்வார்கள் என்ற தகவலோடு
www.chennaipost.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இதன் மூலம், பொதுமக்கள் தொலைபேசி மூலம் தபால்காரர்களை தொடர்பு கொண்டு, தங்களது தபால் குறித்த தகவலை தெரிந்து கொள்ளலாம்.
நன்றி: தினகரன்.
திங்கள், 15 செப்டம்பர், 2014
சனி, 13 செப்டம்பர், 2014
ஹாஜிகளுக்கான (2014) மாபெரும் இரத்ததான முகாம்...
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
கடல் கடந்தாலும் கடமையில் கண்ணாக இருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அல்கோபர் கிளை தாயகத்தில் செயல்படும் கழகத்தின் அனைத்து அணிகளையும் கனிகளாகச் சுவைக்கிறது என்றால் மிகையல்ல.
குறிப்பாகக் குருதிக் கொடையில் முன்னுதாரனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சவூதி அரேபியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் அவசரத் தேவைக்கான இரத்ததானம் முதல் வருடாந்தோறும் ஹாஜிகளுக்காகவும் இரத்ததான முகாம்களை நடத்திவருகிறது.
அதன் தொடர்ச்சியாக சவூதிஅரேபியா கிழக்குமாகண தமுமுகவின் அல்கோபர் கிளை 2014ஆம் ஆண்டிற்க்கான ஹஜ் பயணிகளுக்காக அக்ரபியாவில் அமைந்துள்ள தம்மாம் பல்கலைக்கழகத்துடன் (கிங் ஃபஹத் மருத்துவமனை) இணைந்து 12-9-2014 அன்று மாபெரும் இரத்தான முகாமை நடத்தியது. மதியம் சுமார் 12 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிவரை மக்கள் ஆர்வத்துடன் இரத்ததானம் செய்தார்கள். சுமார் 250 பேர் கலந்து கொண்ட இந்த இரத்ததான முகாமில் மருத்துவமனையின் வசதிக்கேற்ப சுமார் 120பேர் குருதிக் கொடையளித்தனர். குறிப்பாக தன்னலம் மற்றும் ஜாதிஇ மத பேதமற்ற தமுமுகவின் செயல்பாட்டால் கவரப்பட்ட மாற்று மத சகோதரர்களும் மிகவும் ஆர்வத்துடன் இரத்ததானம் செய்தனர்.
இந்த முகாமை அல்கோபர் கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மண்டல நிர்வாகிகள் உட்பட அனைவரும் கலந்து இந்த முகாமை சிறப்பித்தனர்.
முகவை சீனி முஹம்மது
விவகாரத்துறைச் செயலாளர் -- தமுமுக
கிழக்கு மாகாணம் சவூதிஅரேபியா
ஞாயிறு, 7 செப்டம்பர், 2014
அல்கோபர் தமுமுகவின் ஹாஜிகளுக்கான மாபெரும் இரத்ததான முகாம்....
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
இறைவனின் மாபெரும் கிருபையால் அல்கோபர் தமுமுகவின் ஹாஜிகளுக்கான மாபெரும் இரத்ததான முகாம்....
போலி சித்தாந்தத்தைப் பரப்பி அதன் மூலம் வருமானம் ஈட்டிவருபவர்களுக்கு மத்தியில் பல போராட்டக்களங்களில் இரத்தம் சிந்தி மேலும் இரத்தக் கொடைகொடுத்து ஒரு கட்டத்தில் உயிர் தியாகம் செய்து மக்கள் நலப்பணியில் இறைப்பொருத்தத்தை மட்டும் எதிர் நோக்கி உழைத்துக் கொண்டிருக்கும் ஒரே மாபெரும் பேரியக்கம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்றால் அது மிகையல்ல.
தமுமுகவின் மயில் கல்லாக விளங்கும் சவூதிஅரேபியா கிழக்கு மாகாண தமுமுகவின் உதயமாக விளங்கும் அல்கோபர் தமுமுக கிளை வருடாந்தோறும் ஹாஜிகளுக்காக இரத்ததானம் செய்து வருகிறது. இந்த சேவையை பாராட்டி சவூதிஅரேபியா அரசின் கிங் ஃபஹத் மருத்துவமனை பலமுறை அல்கோபர் தமுமுகவிற்கு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்ஷாஅல்லா அதன் தொடர்ச்சியாக 2014ஆம் ஆண்டு ஹஜ் பயணிகளுக்காக வரும் 12-9-2014 அன்று கிங் ஃபஹத் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை நடத்த உள்ளது.
இந்த முகாம் சிறப்பாக நடக்க பிரார்த்திப்பதோடு முகாமில் கலந்து குருதி கொடைகொடுக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறது அல்கோபர் தமுமுக

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)