சனி, 13 செப்டம்பர், 2014

ஹாஜிகளுக்கான (2014) மாபெரும் இரத்ததான முகாம்...

அல்லாஹ்வின் திருப்பெயரால்....






கடல் கடந்தாலும் கடமையில் கண்ணாக இருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அல்கோபர் கிளை  தாயகத்தில் செயல்படும் கழகத்தின் அனைத்து அணிகளையும் கனிகளாகச் சுவைக்கிறது என்றால் மிகையல்ல.

குறிப்பாகக் குருதிக் கொடையில் முன்னுதாரனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சவூதி அரேபியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் அவசரத் தேவைக்கான இரத்ததானம் முதல் வருடாந்தோறும் ஹாஜிகளுக்காகவும் இரத்ததான முகாம்களை நடத்திவருகிறது.

அதன் தொடர்ச்சியாக சவூதிஅரேபியா கிழக்குமாகண தமுமுகவின் அல்கோபர் கிளை 2014ஆம் ஆண்டிற்க்கான ஹஜ் பயணிகளுக்காக அக்ரபியாவில் அமைந்துள்ள தம்மாம் பல்கலைக்கழகத்துடன் (கிங் ஃபஹத் மருத்துவமனை) இணைந்து 12-9-2014 அன்று மாபெரும்  இரத்தான முகாமை நடத்தியது. மதியம் சுமார் 12 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிவரை மக்கள் ஆர்வத்துடன் இரத்ததானம் செய்தார்கள். சுமார் 250 பேர் கலந்து கொண்ட இந்த இரத்ததான முகாமில் மருத்துவமனையின் வசதிக்கேற்ப சுமார் 120பேர் குருதிக் கொடையளித்தனர். குறிப்பாக தன்னலம்  மற்றும் ஜாதிஇ மத பேதமற்ற தமுமுகவின் செயல்பாட்டால் கவரப்பட்ட மாற்று மத சகோதரர்களும் மிகவும் ஆர்வத்துடன் இரத்ததானம் செய்தனர்.
 
இந்த முகாமை அல்கோபர் கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மண்டல நிர்வாகிகள் உட்பட அனைவரும் கலந்து  இந்த முகாமை சிறப்பித்தனர்.

முகவை சீனி முஹம்மது
விவகாரத்துறைச் செயலாளர் -- தமுமுக
கிழக்கு மாகாணம் சவூதிஅரேபியா