அஞ்சல் துறையின் தேவை மிகவும் குறைந்து
விட்டாலும், இன்னமும் அரசு நிறுவனங்களில் இருந்து வரும் தபால்கள், அரசு
வேலைக்கான தபால்கள் போன்றவை தபால் துறை
மூலமாக மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மணியார்டரை இப்போதும் நிறைய
மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
அந்த வகையில், ஏதாவது ஒரு முக்கியமான தபால்
நமக்கு வந்து சேர வேண்டியிருக்கும் நிலையில், நாம் வீட்டில் இல்லாததால் அது
திருப்பி அனுப்பப்படுகிறது. அல்லது
வீட்டு வாசலிலோ, கதவிலோ வைத்து விட்டு செல்வதால் தவற நேரிடுகிறது.
இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க, தபால்காரர்களின்
முழு விலாசம், மொபைல் நம்பருடன் அவர்கள் எந்தெந்த ஏரியாக்களில் தபால்
பட்டுவாடா செய்வார்கள் என்ற தகவலோடு
www.chennaipost.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
இதன் மூலம், பொதுமக்கள் தொலைபேசி மூலம் தபால்காரர்களை தொடர்பு கொண்டு, தங்களது தபால் குறித்த தகவலை தெரிந்து கொள்ளலாம்.
நன்றி: தினகரன்.