சனி, 29 நவம்பர், 2014
வெள்ளி, 28 நவம்பர், 2014
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் நகராட்சி கான்சாஹிப் தெரு பகுதிகளில் கள ஆய்வு !
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ராமநாதபுரம் நகராட்சி
கான்சாஹிப் தெரு பகுதிகளுக்கு நகராட்சி ஆணையாளர் மற்றும் முனிசிபல்
பொறியாளருடன் நேரடியாக சென்று கள ஆய்வு !
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி, ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட
வெளிப்பட்டிணம் கான்சாஹிப் தெரு, மற்றும் நாகநாதபுரம் புதுத்தெரு
பகுதிகளுக்கு தொடர் மழை காரணமாக வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளை காண்பதற்காக
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹி ருல்லா MLA
அவர்கள் சென்றபொழுது முறையான வடிகால் அமைக்கப்படாததால் மழைநீர் குளம்போல்
தேங்கியிருந்தது, அதை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் இப்பகுதி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறியப்பட்டது. இப்பகுதியில் ஐநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன இதில் குறைந்த மின் விநியோகம் காரணமாக மின்விளக்குகள் குறைந்த வெளிச்சத்தில் எரிவதாகவும், மின்மோட்டார் இயக்க முடியவில்லை அதனால் அன்றாட தேவைகளை சரியாக நிறைவேற்ற முடியவில்லை எனவும், கூடுதல் குறைவாக மின்சாரம் வந்து வந்து செல்வதால் மின்சாதனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும்,
அறிவிக்கப்படாத மின்வெட்டினால் மாணவர்கள் முதியோர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும் இந்த நிலையை போக்க கூடுதல் மின்மாற்றி அமைத்துத்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது சம்பந்தமாக மின்சார வாரிய முதுநிலை அதிகாரியை உடன் தொடர்புகொண்டு குறைகளை சரிசெய்ய ஆவண செய்யப்பட்டது.
மேலும் இப்பகுதியில் சில இடங்களில் தெரு விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை எனவும், கொழும்பு ஆலிம் உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் பகுதியில் நாய், பன்றிகளால் மிகுந்த சுகாதாரக்கேடு இருப்பதாகவும், குப்பைகளை அவ்வப்பொழுது அகற்றாததால் நோய் பரவும் அபாயமும் உள்ளதாக தெரிவித்தனர். நகராட்சி ஆணையாளர் உடன் இருந்து பொதுமக்களின் அனைத்து குறைகளையும் நேரடியாக பார்த்ததால் அவ்வப்பொழுது அந்தந்த துறை அலுவலர்களுக்கு பொதுமக்கள் குறை சம்பந்தமான நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார்.
வார்டு கவுன்சிலர் திருமதி.ஐனுல் சரிபா அவர்கள் கூறும்பொழுது மழைகாலத்தில் குப்பை மற்றும் வாறுகால் பிரச்சினை காரணமாக பாம்பு போன்ற விஷ உயிரினங்கள் தெருக்களில் நடமாடுவதால் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே இப்பகுதியில் தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றார்.
நகராட்சி கமிஷனர் திரு.சிராஜ் மற்றும் முனிசிபல் இஞ்சினியர் திரு.சேர்மக்கனி அவர்கள் கூறும்பொழுது சாலையில்லாத தெருக்களுக்கு சாலை அமைக்க அரசுக்கு Proposal அனுப்பப்பட்டுள்ளதாகவும் விரைவில் அனுமதிபெற்று சாலைகள் அமைக்கப்படும் எனவும், நகராட்சி சம்பந்தமான அனைத்து குறைபாடுகளுக்கும் படிப்படியாக தீர்வு காணப்படும் எனவும் கூறினார்கள்.
இந்த ஆய்வின் பொழுது சட்டமன்ற உறுப்பினருடன் மாவட்ட நிர்வாகிகள் அன்வர் அலி, முஹம்மது சித்திக், ஒன்றிய நிர்வாகிகள் பாக்கர் அலி, அகமது இப்ராஹீம், சுல்தான், நகர் நிர்வாகிகள் பஷீர்அகமது, பரக்கத்துல்லா, மன்சூர் ஆகியோர் உடனிருந்தனர்.
இணைப்பு படங்கள் விபரம் : -
1 . அரசு அதிகாரிகளுடன் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அறியப்பட்டது.
2 . பொதுமக்கள் நடமாட முடியாத வண்ணம் குடியிருப்பு வீடுகளுக்கு மத்தியில் மழைநீர் வெளியேற வாறுகால் இல்லாததால் குப்பைகள் கலந்து குளம்போல் தேங்கிநிற்கும் மழைநீர்.
3 . குறைவான மின்சாரம், நாய் மற்றும் பன்றி தொல்லைகள், குப்பைகளை அகற்ற கால தாமதம் பற்றி முறையிடும் பொதுமக்கள்.
4 . தேங்கிநிற்கும் மழைநீரை அகற்ற உத்தரவிடும் ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுடன் சட்டமன்ற உறுப்பினர்.
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹி

வியாழன், 27 நவம்பர், 2014
வியாழன், 20 நவம்பர், 2014
புதன், 19 நவம்பர், 2014
இலங்கை சிறையில் வாடிய தமிழக சிறைவாசிகள் மமகவின் தொடர் முயற்சியால் விடுதலை!!!
இலங்கை வெலிக்கடை சிறையில் வாடிய தமிழகத்தை சேர்ந்த அனைத்து சமுதாய சிறைவாசிகள் எட்டுபேர் மனிதநேய மக்கள்கட்சியின் தொடர் முயற்சியால் விடுதலையடைந்தனர் !
இலங்கை சிறையில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த நபர்கள் தண்டனை அனுபவித்து வந்தனர். கடந்த 2010 ல் நடந்த இலங்கை மற்றும் இந்தியாவின் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை வெலிக்கடை சிறையில் இருந்து 16 கைதிகள் தமிழகம் கொண்டு வரப்பட்டு இங்குள்ள தமிழக சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர்.
இந்நிலையில் தண்டனை பெற்று தன் குடும்பத்தாருடன் திருந்திவாழ விருப்பப்படும் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த நபர்களின் நிலை அறிந்து சிறைவாசிகளின் விடுதலை தொடர்பாக மனிதநேய மக்கள்கட்சியின் சட்டமன்றகுழு தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹி
அதனடிப்படையில் கடந்தமாதம் திருச்சி சிறையில் இருந்த மஞ்சத்திடல் திருச்சியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிங்கராயர் 50/M, கண்ணன் 45/M, ராமநாதன் 48/M, ராஜகோபால் 49/M, முனியசாமி 50/M, காசீம் 50/M, இபுராஹீம் மகன் மீரா முஹைதீன் 50/M, மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த முஹைதீன் மகன் முஹைதீன் அபூபக்கர் 40/M ஆகிய எட்டு நபர்களும் தன் வாழ்நாளில் அதிகமான நாட்களை தன்னுடைய மனைவி மக்களை விட்டு பிரிந்து சுமார் 11 வருடங்களுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி தற்போது விடுதலையடந்துள்ளனர்.
மேலும் சிறையில் உள்ள மீதமுள்ள அனைத்து சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் உட்பட எட்டு நபர்களும் வரும் மாதங்களில் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
சிறையிலிருந்து விடுதலையான அனைவரும் தொலைபேசியிலும், நேரிலும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களை தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தனர். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முஹைதீன் அபூபக்கர் பேராசிரியர் அவர்களை நேரில் சந்தித்து அறிவுரை ஏற்றார்.
பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களின் முயற்சியால் பாம்பனில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது !
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டபம் ஒன்றியம், பாம்பன் ஊராட்சியில் பாம்பன்,தோப்புக்காடு, சின்னப்பாலம் மற்றும் K.K.நகர் பகுதிகளில் நீண்ட நாட்களாக குறைந்த மின் அழுத்தம் இருந்து வந்தது. இதனால் அப்பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கும்,வியாபாரிகளு
இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனடிப்படையில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹி
மேலும் புதிய மின்மாற்றி அமைக்க சிறு சிறு தடங்கல்கள் ஏற்பட்டு வந்தது. ஆகவே மின்சாரத்துறை அமைச்சரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட மின்சாரத்துறை அலுவலர்களிடமும் இது சம்பந்தமாக பலமுறை தொடர்ந்து தொலைபேசியிலும் நேரடியாகவும் பேசி முடிவில் அனுமதி பெறப்பட்டது.
அதன் பலனாக 100 KV திறன்கொண்ட புதியமின்மாற்றி பொதுமக்களின் சிரமங்களை போக்கும் விதமாக அதிகாரிகள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரின் நேரடி செயலாளர் அவர்களும், மின்சாரத்துறை உதவி கோட்டபொறியாளர் (ஊரகம்) அவர்களும்(ADE), மண்டபம் துணைமின்நிலைய உதவி பொறியாளர் அவர்களும், பாம்பன் ஊராட்சிமன்ற தலைவர் பேட்ரிக் அவர்களும், மற்றும் வார்டு உறுப்பினர் சுரேஷ், தோப்புக்காடு கிராம தலைவர் நம்புராஜன், சின்னப்பாலம் கிராம தலைவர் முருகேசன் உள்ளிட்ட பெருந்திரளான கிராம பொதுமக்கள் மற்றும் மனிதநேய மக்கள்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் இந்தபுதிய மின்மாற்றி அமைவதற்கு காரணமாக இருந்த ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு கிராமபொதுமக்கள் தங்களது நன்றியை தெரிவித்துகொண்டனர்.
குறிப்பு :மேலும் மின்சாரத்துறை சம்பந்தமான பல குறைபாடுகளுக்கு விரைவில் தீர்வு செய்யப்படும் என இத்துறையின் மூலம் நமக்கு கடிதம் வரப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வியாழன், 13 நவம்பர், 2014
செவ்வாய், 11 நவம்பர், 2014
புதன், 5 நவம்பர், 2014
தந்தி டிவியில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை : அவசியமா? அரசியலா? -- பேரா.ஜவாஹிருல்லா
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று 5-11-2014 தந்தி டிவியில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை : அவசியமா?
அரசியலா? என்ற தலைப்பில் சட்டஉறுப்பினர் போரா.ஜவாஹிருல்லா (மமக).
சகோ.ரவீந்திரன் துரைசாமி (அரசியல் விமர்சகர்). சகோ.சித்தண்னன் (முன்னால்
காவல்துறை அதிகாரி). சகோ.சடகோபன் (ஆர்.எஸ்.எஸ்) ஆகியோர் கலந்து கொண்ட
விவாதம் சகோ.ரங்கராஜ் பாண்டே முன்னிலையில் நடைபெற்றது.
இந்த
நிகழ்ச்சியில் சமுதாயத் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேரா.ஜவாஹிருல்லா
அவர்கள் தன் வாதமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் பேரணி என்ற பெயரில்
மதக்கலவரத்தை தூண்டி மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துகிறது என்றும்
உதாரணமாக மண்டைக்காடு கலவரத்தை சுட்டிக்காட்டியதோடு மகாத்மா காந்தி படுகொலை
முதல் இன்று பல குண்டு வெடிப்புகளை ஆர்.எஸ்.எஸ் நடத்தி அதை முஸ்லிம்கள்
மீது பழியைப் போட்டு வருகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
பேச்சுரிமை இழந்து கிடந்த சமுதாயத்தை சமுதாயத்தின் குரலை இன்று பொது ஊடகங்களிலும் , சட்டமன்றத்திலும் ஒலிக்கச் செய்த பெருமை இறைவனின் கிருபையால் அது தமுமுகவையேச் சாரும்.
பேச்சுரிமை இழந்து கிடந்த சமுதாயத்தை சமுதாயத்தின் குரலை இன்று பொது ஊடகங்களிலும் , சட்டமன்றத்திலும் ஒலிக்கச் செய்த பெருமை இறைவனின் கிருபையால் அது தமுமுகவையேச் சாரும்.
SSM
ஞாயிறு, 2 நவம்பர், 2014
சனி, 1 நவம்பர், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)