ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ராமநாதபுரம் நகராட்சி
கான்சாஹிப் தெரு பகுதிகளுக்கு நகராட்சி ஆணையாளர் மற்றும் முனிசிபல்
பொறியாளருடன் நேரடியாக சென்று கள ஆய்வு !
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி, ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட
வெளிப்பட்டிணம் கான்சாஹிப் தெரு, மற்றும் நாகநாதபுரம் புதுத்தெரு
பகுதிகளுக்கு தொடர் மழை காரணமாக வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளை காண்பதற்காக
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹி ருல்லா MLA
அவர்கள் சென்றபொழுது முறையான வடிகால் அமைக்கப்படாததால் மழைநீர் குளம்போல்
தேங்கியிருந்தது, அதை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் இப்பகுதி பொதுமக்களிடம் குறைகள் கேட்டறியப்பட்டது. இப்பகுதியில் ஐநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன இதில் குறைந்த மின் விநியோகம் காரணமாக மின்விளக்குகள் குறைந்த வெளிச்சத்தில் எரிவதாகவும், மின்மோட்டார் இயக்க முடியவில்லை அதனால் அன்றாட தேவைகளை சரியாக நிறைவேற்ற முடியவில்லை எனவும், கூடுதல் குறைவாக மின்சாரம் வந்து வந்து செல்வதால் மின்சாதனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும்,
அறிவிக்கப்படாத மின்வெட்டினால் மாணவர்கள் முதியோர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும் இந்த நிலையை போக்க கூடுதல் மின்மாற்றி அமைத்துத்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது சம்பந்தமாக மின்சார வாரிய முதுநிலை அதிகாரியை உடன் தொடர்புகொண்டு குறைகளை சரிசெய்ய ஆவண செய்யப்பட்டது.
மேலும் இப்பகுதியில் சில இடங்களில் தெரு விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை எனவும், கொழும்பு ஆலிம் உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் பகுதியில் நாய், பன்றிகளால் மிகுந்த சுகாதாரக்கேடு இருப்பதாகவும், குப்பைகளை அவ்வப்பொழுது அகற்றாததால் நோய் பரவும் அபாயமும் உள்ளதாக தெரிவித்தனர். நகராட்சி ஆணையாளர் உடன் இருந்து பொதுமக்களின் அனைத்து குறைகளையும் நேரடியாக பார்த்ததால் அவ்வப்பொழுது அந்தந்த துறை அலுவலர்களுக்கு பொதுமக்கள் குறை சம்பந்தமான நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார்.
வார்டு கவுன்சிலர் திருமதி.ஐனுல் சரிபா அவர்கள் கூறும்பொழுது மழைகாலத்தில் குப்பை மற்றும் வாறுகால் பிரச்சினை காரணமாக பாம்பு போன்ற விஷ உயிரினங்கள் தெருக்களில் நடமாடுவதால் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே இப்பகுதியில் தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றார்.
நகராட்சி கமிஷனர் திரு.சிராஜ் மற்றும் முனிசிபல் இஞ்சினியர் திரு.சேர்மக்கனி அவர்கள் கூறும்பொழுது சாலையில்லாத தெருக்களுக்கு சாலை அமைக்க அரசுக்கு Proposal அனுப்பப்பட்டுள்ளதாகவும் விரைவில் அனுமதிபெற்று சாலைகள் அமைக்கப்படும் எனவும், நகராட்சி சம்பந்தமான அனைத்து குறைபாடுகளுக்கும் படிப்படியாக தீர்வு காணப்படும் எனவும் கூறினார்கள்.
இந்த ஆய்வின் பொழுது சட்டமன்ற உறுப்பினருடன் மாவட்ட நிர்வாகிகள் அன்வர் அலி, முஹம்மது சித்திக், ஒன்றிய நிர்வாகிகள் பாக்கர் அலி, அகமது இப்ராஹீம், சுல்தான், நகர் நிர்வாகிகள் பஷீர்அகமது, பரக்கத்துல்லா, மன்சூர் ஆகியோர் உடனிருந்தனர்.
இணைப்பு படங்கள் விபரம் : -
1 . அரசு அதிகாரிகளுடன் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அறியப்பட்டது.
2 . பொதுமக்கள் நடமாட முடியாத வண்ணம் குடியிருப்பு வீடுகளுக்கு மத்தியில் மழைநீர் வெளியேற வாறுகால் இல்லாததால் குப்பைகள் கலந்து குளம்போல் தேங்கிநிற்கும் மழைநீர்.
3 . குறைவான மின்சாரம், நாய் மற்றும் பன்றி தொல்லைகள், குப்பைகளை அகற்ற கால தாமதம் பற்றி முறையிடும் பொதுமக்கள்.
4 . தேங்கிநிற்கும் மழைநீரை அகற்ற உத்தரவிடும் ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுடன் சட்டமன்ற உறுப்பினர்.
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹி