புதன், 19 நவம்பர், 2014

பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களின் முயற்சியால் பாம்பனில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது !




ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டபம் ஒன்றியம், பாம்பன் ஊராட்சியில் பாம்பன்,தோப்புக்காடு, சின்னப்பாலம் மற்றும் K.K.நகர் பகுதிகளில் நீண்ட நாட்களாக குறைந்த மின் அழுத்தம் இருந்து வந்தது. இதனால் அப்பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கும்,வியாபாரிகளுக்கும், இல்லத்தரசிகளுக்கும், மாணவ,மாணவிகளுக்கும் முழுமையான மின்சாரம் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனடிப்படையில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர்.முனைவர்.M.H.ஜவாஹிருல்லா MLA அவர்கள் வழியாக இது சம்பந்தமாக கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பொதுமக்களின் கஷ்டங்களை எடுத்துக்கூறி இப்பகுதிக்கு புதிய மின்மாற்றி அமைத்துத்தர கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் புதிய மின்மாற்றி அமைக்க சிறு சிறு தடங்கல்கள் ஏற்பட்டு வந்தது. ஆகவே மின்சாரத்துறை அமைச்சரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட மின்சாரத்துறை அலுவலர்களிடமும் இது சம்பந்தமாக பலமுறை தொடர்ந்து தொலைபேசியிலும் நேரடியாகவும் பேசி முடிவில் அனுமதி பெறப்பட்டது.

அதன் பலனாக 100 KV திறன்கொண்ட புதியமின்மாற்றி பொதுமக்களின் சிரமங்களை போக்கும் விதமாக அதிகாரிகள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரின் நேரடி செயலாளர் அவர்களும், மின்சாரத்துறை உதவி கோட்டபொறியாளர் (ஊரகம்) அவர்களும்(ADE), மண்டபம் துணைமின்நிலைய உதவி பொறியாளர் அவர்களும், பாம்பன் ஊராட்சிமன்ற தலைவர் பேட்ரிக் அவர்களும், மற்றும் வார்டு உறுப்பினர் சுரேஷ், தோப்புக்காடு கிராம தலைவர் நம்புராஜன், சின்னப்பாலம் கிராம தலைவர் முருகேசன் உள்ளிட்ட பெருந்திரளான கிராம பொதுமக்கள் மற்றும் மனிதநேய மக்கள்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் இந்தபுதிய மின்மாற்றி அமைவதற்கு காரணமாக இருந்த ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு கிராமபொதுமக்கள் தங்களது நன்றியை தெரிவித்துகொண்டனர்.

குறிப்பு :மேலும் மின்சாரத்துறை சம்பந்தமான பல குறைபாடுகளுக்கு விரைவில் தீர்வு செய்யப்படும் என இத்துறையின் மூலம் நமக்கு கடிதம் வரப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.