செவ்வாய், 30 டிசம்பர், 2008

ராமநாதபுரத்தில் டிசம்பர் 6 ரயில் மறியல் போராட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டிரெயில்மறியல் செய்ய முயன்ற த.மு.மு.க.வினர் 1,300 பேர் கைது, கடைகள் அடைப்பு
ராமநாதபுரம்,டிச.7-
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரெயில் மறியல் செய்ய முயன்ற த.மு.மு.க.வினர் 1,300 பேர் கைது செய்யப்பட்டனர். கடைகள் அடைக்கப்பட்டன.
ரெயில் மறியல்:
ராமநாதபுரத்தில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கார்கள் மற்றும் வேன்களில் ஏராளமான த.மு.மு.க.வினர் ராமநாதபுரத்தில் திரண்டனர். பின்னர் உழவர் சந்தை அருகே மாவட்ட த.மு.மு.க. அலுவலகம் முன்பாக வடக்கு மாவட்ட தலைர் சாதிக் தலைமையில் கண்டன கூட்டம் நடந்தது. இதில் தமாம் மண்டல துணை தலைவர் அலாவுதீன் பாகவி, மாநில பேச்சாளர் கோவை ஜாகிர் ஆகியோர் பேசினர்.
இதைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அதே இடத்தில் மசூதி கட்டித்தர வேண்டும். கரசேவை போல முஸ்லிம்களும் அயோத்தி சென்று பாபர் மசூதியை கட்ட முயற்சி செய்வோம் என்று கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் த.மு.மு.க. மாவட்ட தலைவர் சலீமுல்லா கான், மாவட்ட செயலாளர் தஸ்பீக் அலி, மாவட்ட பொருளாளர் சல்மான், துணைத்தலைவர் ஹுமாயுன்கபீர், துணை செயலாளர் ரசூல்கான், ஒன்றிய செயலாளர் ருகைபு, செய்தி தொடர்பாளர் சாகுல், மாநில செயற்குழு உறுப்பினர் பாக்கர் உள்பட 500க்கும் மேற்பட்ட த.மு.மு.க.நிர்வாகிகளும், தொண்டர்களும் ஊர்வலமாக புறப்பட்டு ரெயில் மறியல் செய்ய ரெயில் நிலையம் நோக்கி சென்றனர். அதையறிந்த போலீசார் அரசு போக்குவரத்து கழக டெப்போ முன்பு அவர்களை வழி மறித்து 801 பேரை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நேற்று ராமநாதபுரத்தில் பெரும்பாலான முஸ்லிம் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
பரமக்குடி:
பரமக்குடியில் தெற்கு மாவட்ட த.மு.மு.க. சார்பில் ரெயில் நிலையத்தை முற்றுகையிட பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், அபிராமம், பார்த்திபனூர், பெரியபட்டினம், திருப்புல்லாணி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த த.மு.மு.க. வினர் பரமக்குடி காந்தி சிலையில் திரண்டு தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் சம்சுதீன் சேட், இஸ்லாமிய பிரச்சார பேரவை பொறுப்பாளர் வாணி சித்தீக், த.மு.மு.க. மாநில பேச்சாளர் மிட்பாவுல்கீதா ஆகியோர் தலைமையில் பரமக்குடி நகர் தலைவர் சாதிக்பாட்ஷா, செயலாளர் முகமது இஸ்மாயில், நிர்வாகிகள் அப்பாஸ், செய்யது இபுராகிம், மாவட்ட செயலாளர் சகுபர் சாதிக், மாவட்ட பொருளாளர் சாதிக் பாட்ஷா, மத்திய சங்க பொருளாளர் சல்மான், மாவட்ட துணை செயலாளர் பெரியபட்டிணம் சாகுல், ஒன்றிய செயலாளர்கள் கலிமுல்லா, இப்ராகிம், பாவா ராவுத்தர் உள்பட பரமக்குடி, எமனேசுவரம் மற்றும் அனைத்து கிளைக்கழக நிர்வாகிகள் ஊர்வலமாக புறப்பட்டனர்.
கைது:
ஊர்வலம் ஆர்ச் பகுதிக்கு வந்த போது தாசில்தார்கள் நாக ஜோதி, ரங்கன், துணை தாசில்தார் ராஜலிங்கம், வருவாய் ஆய்வாளர் பாண்டியன், கிராம நிர்வாக அலுவலர்கள் காந்தி, கோவிந்தன் பரமக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு பெருமாள் தலைமையில் ஏராளமான போலீசார் தடுத்து 507 பேரை கைது செய்தனர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

திங்கள், 29 டிசம்பர், 2008

மண்டபத்தில் தமுமுகவின் 44வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

இராமநாதபுரம் மத்திய மாவட்டம் மண்டபத்தில் 24-08-08 அன்று தமுமுகவின் 44வது ஆம்புலன்ஸை தமுமுகவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார்.

தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை செய்யது, வேங்கை இப்ராகிம் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சலிமுல்லாஹ்கான் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் பெரியபட்டிணத்தைச் சேர்ந்த ஹாரிஸ் என்பவருக்கு வாழ்வாதார உதவியும், 6 பெண்களுக்கும் தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொது மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
முன்னதாக சமீபத்தில் வபாத்தான இராமநாதபுரம் 19வது வார்டு கிளைத் தலைவர் சீனி ஜஹாங்கீரின் வீட்டிற்குச் சென்று இறப்புச் செய்தி விசாரித்து அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி தமுமுகவின் சார்பாக ரூ-50இ000 வழங்கினார் தமுமுகவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி. அதே தினம் பாரதிநகர் கிளையின் சார்பாக தமுமுகவின் கொடியேற்றினார்.
கல்வி உதவி

கிளியூர் கிராமத்தில் கல்வி உதவி

இராமநாதபுரம் (ம) மாவட்டம் நயினார் கோவில் ஒன்றியம் கிளியூர் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாய ஏழை எளிய மாணவ-மாணவியர்களுக்கு ரூபாய் 30 ஆயிரம் மதிப்பில் 180 பேருக்கு கல்வி உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சலிமுல்லாஹ் கான் தலைமை வகித்தார். கிளியூர் கிளி தமுமுக நிர்வாகிகள் மற்றும் கிளியூர் ஜமாலிஅத்தார்கள் இதில் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு நயினார் கோவில் ஒன்றியப் பெருந்தலைவர் சுப. த. திவாகர் மற்றும் நயினார் கோவில் காவல்துறை ஆய்வாளர் அழகு, தொழுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற செல்வி என்கிற மாணவிக்கு தமுமுக சார்பில் தங்கப் பதக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கிளியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்புத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு கேடயம் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள் முழு வதையும் ரியாஸ்இ ஹபிபுல்லாஹ், தீன் மகாதிர், மதார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

மண்டபத்தில் கல்வி உதவி

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிளையின் சார்பில் ரூ.30இ000ஃ- மதிப்பிலான கல்வி உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி மூலமாக 100 மாணவ-மாணவியர்கள் பயனடைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சலிமுல்லாஹ்கான் தலைமை தாங்கினார். கிளைத் தலைவர் சாகுல்இ செயலாளர் முஸ்தபா, பொருளாளர் காதர், துணைத் தலைவர் அப்பாஸ், துணைச் செயலாளர் முஹம்மது காசிம், அம்ஜத், மருத்துவ சேவை அணி செய லாளர் அஜ்மல்கான், மாணவ ரணிச் செயலாளர் பாரூக் அலி மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் ரசூல் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலி எம்.எல்.ஏ.இ மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் ரவிச் சந்திர ராமவண்ணிஇ ஓஆணஐ மாவட்டத் தலைவர் ஹபிபுல்லாஹ்இ ஹாஜி அலி பிர்தவ்ஸி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக மாவட்ட உலமா அணிச் செயலாளர் அப்துல் காதிர் நூரி நன்றியுரை நிகழ்த்தினார். வேதாளையில் கல்வி இராமநாதபுரம் (மத்திய) மாவட்டம் வேதாளை தமுமுக கிளை சார்பாக ஏழை எளிய மாணவ மாண விகள் 42 நபர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் ரூ.a4500-செலவில் வழங்கப் பட்டன.இதில் மாவட்ட, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


வேதாளையில் கல்வி உதவி

இராமநாதபுரம் (மத்திய) மாவட்டம் வேதாளை தமுமுக கிளை சார்பாக ஏழை எளிய மாணவ மாண விகள் 42 நபர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் ரூ.4500ஃ- செலவில் வழங்கப் பட்டன.இதில் மாவட்டஇ நகர மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மேலப்புதுக்குடியில் கல்வி உதவி

இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் மேலப்புதுக்குடி கிளை தமுமுகவின் சார்பாக ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு சீருடை மற்றும் நோட்டு புத்தகம் ரூ.6இ000ஃ- செலவில் வழங் கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சம்சுதீன் சேட் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் ஜகுபர் சாதிக் முன்னிலை வகித் தார். மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


ஞாயிறு, 28 டிசம்பர், 2008


ராஜா மஸ்தான் குடும்பத்தினருக்குதமுமுக தலைவர் ஆறுதல்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கடந்த 9ம் தேதி பரமக்குடி வருகை புரிந்தார். பரமக்குடியில் மர்ம மான முறையில் இறந்த மாணவர் ராஜா மஸ்தான் வீட்டிற்கு அவர் சென்றார். அவரது தாயார் மற்றும் குடும்பத்தி னருக்கு அவர் ஆறுதல் கூறினார். பின்னர் எமனேஸ்வரம் பள்ளிவாசலில் ஜமாஅத்தார்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் பங்கு கொண்டார். ஜமாஅத் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆலம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ராஜா மஸ்தான் மர்ம மரணம் தொடர்பாக தமுமுக எடுத்த நடவடிக்கை களை அவர் விவரித்தார். பின்னர் பத்திரி கையாளர்கள் சந்திப்புக் கூட்டத்திலும் அவர் பங்கு கொண்டார். ராமநாதபுரம் (மத்தி) மாவட்டத் தலைவர் சலிமுல்லாஹ் கான் உட்பட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தமுமுக தொண்டர்கள் இந்த நிகழ்ச்சி யில் பங்கு கொண்டனர்.

பிஃத்ரா வினியோகம்