ஞாயிறு, 28 டிசம்பர், 2008


ராஜா மஸ்தான் குடும்பத்தினருக்குதமுமுக தலைவர் ஆறுதல்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கடந்த 9ம் தேதி பரமக்குடி வருகை புரிந்தார். பரமக்குடியில் மர்ம மான முறையில் இறந்த மாணவர் ராஜா மஸ்தான் வீட்டிற்கு அவர் சென்றார். அவரது தாயார் மற்றும் குடும்பத்தி னருக்கு அவர் ஆறுதல் கூறினார். பின்னர் எமனேஸ்வரம் பள்ளிவாசலில் ஜமாஅத்தார்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் பங்கு கொண்டார். ஜமாஅத் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆலம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ராஜா மஸ்தான் மர்ம மரணம் தொடர்பாக தமுமுக எடுத்த நடவடிக்கை களை அவர் விவரித்தார். பின்னர் பத்திரி கையாளர்கள் சந்திப்புக் கூட்டத்திலும் அவர் பங்கு கொண்டார். ராமநாதபுரம் (மத்தி) மாவட்டத் தலைவர் சலிமுல்லாஹ் கான் உட்பட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தமுமுக தொண்டர்கள் இந்த நிகழ்ச்சி யில் பங்கு கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக