திங்கள், 29 டிசம்பர், 2008

மண்டபத்தில் தமுமுகவின் 44வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

இராமநாதபுரம் மத்திய மாவட்டம் மண்டபத்தில் 24-08-08 அன்று தமுமுகவின் 44வது ஆம்புலன்ஸை தமுமுகவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார்.

தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை செய்யது, வேங்கை இப்ராகிம் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சலிமுல்லாஹ்கான் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் பெரியபட்டிணத்தைச் சேர்ந்த ஹாரிஸ் என்பவருக்கு வாழ்வாதார உதவியும், 6 பெண்களுக்கும் தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொது மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
முன்னதாக சமீபத்தில் வபாத்தான இராமநாதபுரம் 19வது வார்டு கிளைத் தலைவர் சீனி ஜஹாங்கீரின் வீட்டிற்குச் சென்று இறப்புச் செய்தி விசாரித்து அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி தமுமுகவின் சார்பாக ரூ-50இ000 வழங்கினார் தமுமுகவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி. அதே தினம் பாரதிநகர் கிளையின் சார்பாக தமுமுகவின் கொடியேற்றினார்.