இராமநாதபுரம் (ம) மாவட்டம் நயினார் கோவில் ஒன்றியம் கிளியூர் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாய ஏழை எளிய மாணவ-மாணவியர்களுக்கு ரூபாய் 30 ஆயிரம் மதிப்பில் 180 பேருக்கு கல்வி உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சலிமுல்லாஹ் கான் தலைமை வகித்தார். கிளியூர் கிளி தமுமுக நிர்வாகிகள் மற்றும் கிளியூர் ஜமாலிஅத்தார்கள் இதில் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு நயினார் கோவில் ஒன்றியப் பெருந்தலைவர் சுப. த. திவாகர் மற்றும் நயினார் கோவில் காவல்துறை ஆய்வாளர் அழகு, தொழுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற செல்வி என்கிற மாணவிக்கு தமுமுக சார்பில் தங்கப் பதக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கிளியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்புத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு கேடயம் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள் முழு வதையும் ரியாஸ்இ ஹபிபுல்லாஹ், தீன் மகாதிர், மதார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
மண்டபத்தில் கல்வி உதவி
வேதாளையில் கல்வி உதவி
இராமநாதபுரம் (மத்திய) மாவட்டம் வேதாளை தமுமுக கிளை சார்பாக ஏழை எளிய மாணவ மாண விகள் 42 நபர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் ரூ.4500ஃ- செலவில் வழங்கப் பட்டன.இதில் மாவட்டஇ நகர மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் மேலப்புதுக்குடி கிளை தமுமுகவின் சார்பாக ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு சீருடை மற்றும் நோட்டு புத்தகம் ரூ.6இ000ஃ- செலவில் வழங் கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சம்சுதீன் சேட் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் ஜகுபர் சாதிக் முன்னிலை வகித் தார். மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், ஜமாஅத்தார்கள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.