சனி, 31 ஆகஸ்ட், 2013

முகவை தமுமுகவின் மதுவின் ஒழிப்புப் போராட்டம்!!!!!

மதுவை ஒழிப்போம் மாதர்கள் கண்துடைப்போம்!!!!

மதுவை ஒழிப்போம் மாணவர்களைக் காப்போம்!!!!!

மதுவை ஒழிப்போம் மாசற்ற சமுதாயம் அமைப்போம்!!!!


செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

தமிழ்நாட்டின் சாதனையைப் பாரீர்!!!!!!!!

 

மதுபான விற்பனை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழக அரசுக்கு வருமானத்தை தருவதாக சமீபத்திய புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

2003-04 -ம் ஆண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் தொடங்கப்பட்ட போது, 3 ஆயிரத்து 639 கோடியாக இருந்த மது விற்பனை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது.

2004-ம் ஆண்டு 4 ஆயிரத்து 72 கோடிக்கும்

2005-ம் ஆண்டு 6 ஆயிரத்து 30 கோடிக்கும்

2006-ம் ஆண்டு 7 ஆயிரத்து 473 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து

2007-ம் ஆண்டு 8 ஆயிரத்து 821 ஆக இருந்த மது விற்பனை

2008-09-ம் ஆண்டில் 5 இலக்க எண் வருமானத்தை எட்டியது.

இந்த ஆண்டில் 10 ஆயிரத்து 601 கோடியாக மது விற்பனை இருந்தது.

2010-ம் ஆண்டில் 12 ஆயிரத்து 498 கோடியும்

2011-ம் ஆண்டில் 14 ஆயிரத்து 965 கோடியாகவும் இது உயர்ந்தது.

தொடர்ந்து

2012-ம் ஆண்டில் 18 ஆயிரத்து 81 கோடியாக இருந்த மது விற்பனை

2012-13 ஆம் ஆண்டில் 21 ஆயிரத்து 680 கோடியை எட்டியது.

அதே போல் கடந்த 2003- 04 ஆம் ஆண்டு 156.61 லட்சம் பீர் பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை

2013- ஆம் ஆண்டில் 284 .29 லட்சம் பீர் பெட்டிகளாக உயர்ந்துள்ளது.

மதுபானங்களின் விற்பனை 156. 61 லட்சம் பெட்டிகளில் இருந்து தற்போது 536.35 லட்சம் பெட்டிகளாக உயர்ந்துள்ளது

தொகுதிப் பணியில் முகவை எம்.எல்.எ




ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

இராமநாதபுரம் மாவட்ட தமுமுகவின் வாழ்வாதார உதவி



இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் தொண்டி அருகே உள்ள நம்புதாளையை சேர்ந்த முகம்மது மைதீன் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 10,000 தை மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா தலைமையில் மமக மாவட்ட துணை செயலாளர் அஸீஸ் ரகுமான் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர் இந்த நிகழ்வில் மாணவர் இந்திய கலந்தர் ஆஸிக், திருவாடானை ஒன்றிய தமுமுக செயலாளர் அக்பர் சுல்தான், மீரான், புர்கான், ஆகியோர் கலந்து கொண்டனர் .

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

தொண்டி கிளை சார்பில் சதக்கத்துல் ஃபித்ர்




தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொண்டி கிளை சார்பில் தொண்டி த.மு.மு.க அலுவலகத்தில் நோன்பு பெருநாள் தினத்தை முன்னிட்டு சதக்கத்துல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் அன்பளிப்பை பெருநாள் தினத்தன்று ஏழைகளும் மகிழ்ச்சியாக பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இஸ்லாம் காட்டித்தந்த வழியில் பித்ரா வழங்கும் நிகழ்ச்சி இராமநாதபுரம் மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் மண்டலம் ஜைனுலாபிதீன் அவர்களும்,மமக மாவட்ட துணைசெயலாளர் அசீஸ் ரகுமான்,மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் கலந்தர்ஆசிக்,மனிதநேய தொழிலாளர் அணியின் மாவட்ட செயலாளர் முகம்மது பிலால்,தமுமுக திருவாடானை ஒன்றிய செயலாளர் அக்பர் சுல்தான், ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. மற்றும் நகர் நிர்வாகிகள் துபாய் காதர்,மீரான்,ஜலால்,மைதீன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட மக்களுக்கு புத்தாடைகள் மற்றும் கோழி இறைச்சி,ஆட்டு இறைச்சி உட்பட வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் அனைத்தும் ரூபாய் 3,00,000 (மூன்று லட்சம்) செலவில் வழங்கப்பட்டது.

பட விளக்கம் : தொண்டி தமுமுக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா மற்றும் நிர்வாகிகள் ஏழைகளுக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வழங்கும் போது எடுத்தபடம்.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

இலங்கை கடற்படை அட்டூழியத்தை தடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பிரதமருக்கு கடிதம்



மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவரும் ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து சிங்கள பேரினவாத கடற்படையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருவது மிகுந்த வேதனைக் குரியதாகும். இலங்கை கடற்படையினர் நேற்று மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை சுற்றி வளைத்தனர். 5 படகுகளையும், அவற்றில் இருந்த அந்தோணி, ஜோசப், அல்போன்ஸ் உள்பட 24 மீனவர்களையும் தாக்கி அவர்களை கைது செய்து இலங்கை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மீன்பிடி தடைக் காலம் முடிவடைந்து தமிழக மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்கச் செல்லும் நேரத்தில் இலங்கை கடற்படையின் போர் கப்பல்கள் கச்சதீவு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தமிழக மீனவர்களை மட்டும் அல்ல இந்தியாவையே அச்சுறுத்தும் செயலாக உள்ளது. இது குறித்து இந்திய அரசு எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்காத நிலையில் ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு தலையிட்டு கைது செய்யபட்ட 24 மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் படகுகள் திரும்ப ஒப்படைக்கப்படுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோருகின்றேன். மேலும் தொடர்ந்து தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்த பலமான நடவடிக்கைகளை எடுத்து இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

இராமநாதபுரம் மாவட்டம் ,திருவாடானை வட்டம் ,மங்களக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது !






இராமநாதபுரம் மாவட்டம் ,திருவாடானை வட்டம் ,மங்களக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இந்த நிகழ்ச்சிக்கு தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா தலைமை தாங்கினார் ஜமாஅத் செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்கள்  நோன்பின் மாண்பு குறித்து உரை நிகழ்த்தினார்கள். திருவாடானை தமுமுக செயலாளர் அக்பர் சுல்தான்,மமக செயலாளர் அப்துல் கையும் தமுமுக செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்கள் .நிகழ்ச்சியில் மமக மாவட்ட துணை செயலாளர் அஸீஸ் ரகுமான் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் கலந்தர் ஆஸிக் ஜமாஅத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் உட்பட பெருந்திரளான தமுமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர் முடிவில் திருவாடானை வட்டார ஜமாத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி அப்துல் ஹக்கீம் நன்றி கூறினார்.