இராமநாதபுரம் மாவட்டம் ,திருவாடானை வட்டம் ,மங்களக்குடியில் தமிழ்நாடு
முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
நடைபெற்றது .இந்த நிகழ்ச்சிக்கு தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா தலைமை
தாங்கினார் ஜமாஅத் செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார்.
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்கள்
நோன்பின் மாண்பு குறித்து உரை நிகழ்த்தினார்கள். திருவாடானை தமுமுக
செயலாளர் அக்பர் சுல்தான்,மமக செயலாளர் அப்துல் கையும் தமுமுக செயல்பாடுகள்
குறித்து விளக்கி பேசினார்கள் .நிகழ்ச்சியில் மமக மாவட்ட துணை செயலாளர்
அஸீஸ் ரகுமான் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் கலந்தர் ஆஸிக் ஜமாஅத் தலைவர்
மற்றும் நிர்வாகிகள் உட்பட பெருந்திரளான தமுமுக தொண்டர்களும் பொதுமக்களும்
கலந்துகொண்டனர் முடிவில் திருவாடானை வட்டார ஜமாத்துல் உலமா சபையின்
செயலாளர் மௌலவி அப்துல் ஹக்கீம் நன்றி கூறினார்.