தமிழ்நாடு முஸ்லிம்
முன்னேற்றக் கழகம் தொண்டி கிளை சார்பில் தொண்டி த.மு.மு.க அலுவலகத்தில் நோன்பு
பெருநாள் தினத்தை முன்னிட்டு சதக்கத்துல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் அன்பளிப்பை
பெருநாள் தினத்தன்று ஏழைகளும் மகிழ்ச்சியாக பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற உயரிய
நோக்கத்தில் இஸ்லாம் காட்டித்தந்த வழியில் பித்ரா வழங்கும் நிகழ்ச்சி இராமநாதபுரம்
மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் மாநில
அமைப்பு செயலாளர் மண்டலம் ஜைனுலாபிதீன் அவர்களும்,மமக மாவட்ட துணைசெயலாளர் அசீஸ்
ரகுமான்,மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் கலந்தர்ஆசிக்,மனிதநேய தொழிலாளர் அணியின்
மாவட்ட செயலாளர் முகம்மது பிலால்,தமுமுக திருவாடானை ஒன்றிய செயலாளர் அக்பர்
சுல்தான், ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. மற்றும் நகர் நிர்வாகிகள் துபாய்
காதர்,மீரான்,ஜலால்,மைதீன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த
நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்ட மக்களுக்கு புத்தாடைகள் மற்றும் கோழி
இறைச்சி,ஆட்டு இறைச்சி உட்பட வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் அனைத்தும் ரூபாய்
3,00,000 (மூன்று லட்சம்) செலவில் வழங்கப்பட்டது.
பட விளக்கம் : தொண்டி
தமுமுக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா மற்றும் நிர்வாகிகள் ஏழைகளுக்கு
வீட்டுக்கு தேவையான பொருட்களை வழங்கும் போது எடுத்தபடம்.