வியாழன், 17 ஜூலை, 2014

'இஸ்ரேல்' விவாதத்தை தடுக்க போராடிய சுஷ்மாவின் முயற்சி தோல்வி!!




டெல்லி: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை குறித்து ராஜ்யசபாவில் விவாதிக்க கூடாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் ஹமீத் அன்சாரி நிராகரித்துவிட்டார்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் அட்டூழிய தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் 200க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலையை நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே கண்டித்து வருகின்றன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

புதன், 16 ஜூலை, 2014

இஸ்ரேலின் இனப்படுகொலை.. ராஜ்யசபாவில் விவாதத்தை தடுத்த சுஷ்மா ஸ்வராஜ்- கொந்தளித்த எதிர்க்கட்சிகள்!!



டெல்லி: இஸ்ரேல் நடத்தி வரும் பாலஸ்தீன இனப்படுகொலை குறித்து ராஜ்யசபாவில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலையிட்டு அந்த விவாதம் நடைபெறாமல் தடுத்து நிறுத்தினார். காஸா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது. இஸ்ரேலின் இந்த கொடூர தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். காஸா பகுதிக்குள் நுழைந்திருக்கும் இஸ்ரேலிய தரைப்படையோ அந்த மண்ணின் மக்களை சொந்த மண்ணைவிட்டு வெளியேறச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

நாடாளுமன்றம் பாதிப்பு 

ஆனால் மத்திய அரசோ இதுபற்றி விவாதிக்க மறுத்து வருகிறது. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 ராஜ்ய சபாவில் இஸ்ரேலின் மிருகத்தனத்தைப் பற்றி விவாதிக்க எத்தனிக்கும் போது யூதர்களின் நகலான சுஷ்மா அதைத் தடுக்க முற்பட்டார். அப்பாவி பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்த எதிர்கட்சிகள் வெகுட்டெழுந்தனர். இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது.

முன்பு இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட விவகாரத்திலும் எதிர்கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் தீர்மானம் கொண்டுவரவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

அது சரி இனம் (மிருகம்) இனத்திற்குத் தானே பரிந்துபேசும்.



திங்கள், 14 ஜூலை, 2014

புதிய வேலை வாய்ப்புக்களை அடையாளம் காண புதிய இணைய தள வசதி:மத்திய அரசு

திறமையுள்ளவர்களுக்கு உதவும் வகையில் புதிய வேலைவாய்ப்புக்களை அடையாளம் கண்டு, விண்ணபிக்க ஏதுவாக, மத்திய அரசு புதிய இணையத் தளத்தை தொடங்கியுள்ளது.
வேலைக்கு ஆள் தேவை என்று யார், எந்த நிறுவனம் வேண்டுமானாலும் இந்த இணைய தளத்தில் தகவல் வெளியிடலாம். அதுமட்டுமின்றி வேலை தேடுவோரும், தங்களுக்கு இந்த வேலை தேவை என்று விபரம் வெளியிடலாம். 150 பிரிவின் கீழ் இந்த வேலைவாய்ப்புக்கான விவரங்கள் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
www.niesbudnaukri.com என்கிற இணைய தளத்தில் இந்த விவரங்களை அறிந்து பதிவு செய்யலாம், தெரிந்துக் கொள்ளலாம்.

இலங்கை மீதான ஐ.நா. விசாரணை; இந்தியா ஆதரிக்காது: இந்திய வெளியுறவுத்துறை!

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக்குழு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளை இந்தியா ஆதரிக்காது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார். 
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸூக்கும் இடையில் புதுடில்லியில் நேற்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குழு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டதா என்றும், இந்த விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்துள்ள அவர், ”ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் விசாரணைக் குழுவை அமைக்கும் விவகாரத்தில் இந்தியா ஏற்கனவே தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. குறிப்பிட்ட அந்த பிரிவை எதிர்த்து வாக்களித்தது. அந்த நிலைப்பாட்டை இந்திய அரசு மாற்றவில்லை. அதே நிலைப்பாடே தொடர்கிறது” என்றுள்ளார்.

புதன், 2 ஜூலை, 2014

சென்னை கட்டட விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தமுமுகவினர்!

சென்னை கட்டட விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தமுமுகவினர்!

சென்னை: சென்னை கட்டட விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தமுமுக அமைப்பினரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த 11 மாடிக் கட்டடம் நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்ததில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வருகின்றது. மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
இந்த நிலையில் இந்த விபத்தில் சிக்கியவர்களை தமிழக தீயணைப்பு படை, மெட்ரோல் ரயில் பணியாளர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆகியோருடன் தமுமுகவின் 5 ஆம்புலன்ஸ்களுடன் காஞ்சி(வடக்கு) மாவட்ட தமுமுகவினர் 50 பேர் இணைந்து மீட்புப் பணி செய்து வருகின்றனர்.
மாவட்டச் செயலாளர் சலீம்கான் தலைமையில் மாவட்ட தொண்டரணிச் செயலாளர் எஸ்.ஆர்.ஏ.இப்ராஹிம், மாவட்ட மாணவரணிச் செயலாளர் கௌஸ் பாஷா, மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் எஸ். தமீம் அன்சாரி உட்பட 50 தமுமுகவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டட இடிபாட்டிற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
INNERAM

ரமலான் மாதம் முழுவதும் அதிகாலைகுடிநீர் விநியோகம் செய்ய தமுமுக வலியுறுத்தல்



 ரமலான் மாதம் முழுவதும் அதிகாலைகுடிநீர் விநியோகம் செய்ய தமுமுக வலியுறுத்தல்
காரைக்கால்: ரமலான் மாதம் முழுவதும், சஹர் நேரத்தில், அதிகாலை 3 முதல் 5 மணிவரை குடிநீர் விநியோகம் செய்யவேண்டும் என காரைக்கால் மாவட்ட தமுமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, காரைக்கால் மாவட்ட தமுமுக செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
"இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருப்பது வழக்கம். அவ்வாறு நோன்பு இருக்கும் 30 நாட்களும், அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள், குளித்து, சஹர் உணவு சமைத்து, நோன்பு துவக்குவார்கள். அந்த நேரத்தில், மாவட்ட பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் அதிமுக்கியமாகும்.
எனவே, அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காரைக்கால், திருநள்ளாறு, திரு-பட்டினம், நிரவி, கருக்கன்குடி, நல்லம்பல், சேத்தூர், அம்பகரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை தடையில்லாமல் வழங்க ஆவணம் செய்யவேண்டும்". இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.