சென்னை: சென்னை கட்டட விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தமுமுக அமைப்பினரும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த 11 மாடிக் கட்டடம் நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்ததில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வருகின்றது. மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
இந்த நிலையில் இந்த விபத்தில் சிக்கியவர்களை தமிழக தீயணைப்பு படை, மெட்ரோல் ரயில் பணியாளர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆகியோருடன் தமுமுகவின் 5 ஆம்புலன்ஸ்களுடன் காஞ்சி(வடக்கு) மாவட்ட தமுமுகவினர் 50 பேர் இணைந்து மீட்புப் பணி செய்து வருகின்றனர்.
மாவட்டச் செயலாளர் சலீம்கான் தலைமையில் மாவட்ட தொண்டரணிச் செயலாளர் எஸ்.ஆர்.ஏ.இப்ராஹிம், மாவட்ட மாணவரணிச் செயலாளர் கௌஸ் பாஷா, மாணவர் இந்தியா மாவட்டச் செயலாளர் எஸ். தமீம் அன்சாரி உட்பட 50 தமுமுகவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டட இடிபாட்டிற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
INNERAM