வியாழன், 30 மே, 2013

தமிழக முதல்வருக்கு தொண்டியில் அரசு கலைக்கல்லூரி - தமுமுக கோரிக்கை!



பத்திரிக்கை செய்தி !
 
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு இராமநாதபுரம்மாவட்டம், திருவாடானைவட்டம், தொண்டி வரலாற்று சிறப்புமிகு துறைமுக நகரமாகும். தொண்டியை சுற்றி அதிகமான கிராமங்கள் இருக்கிறது. தொண்டி சுற்றுவட்டார பகுதியில் மீனவர்கள்,விவசாயிகள்,முஸ்லிம்கள் மற்றும் ஏழை,எளிய மக்கள் அதிகம் வாழக்கூடிய பகுதியாகும்.ஒரு காலத்தில் கல்வியில் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்தது, தற்பொழுது கல்வியில் முன்னேற வேண்டும் என்ற தாக்கம் அதிகஅளவில் மக்களிடத்தில் இருக்கிறது. இப்பகுதி இளைஞர்கள் படித்து முடித்தவுடன் தொடர்ந்து படிக்க கல்லூரிகள் இல்லாததால் 10,12ம் வகுப்பு முடித்தவுடன் விவசாயம், மீன்பிடிதொழில், தச்சுவேலை, கொத்தனார்,கடைகளுக்குகூலிவேலை போன்றவைகளுக்கு சென்று விடுகிறார்கள். ஏழை.எளிய மக்கள் கல்வி கற்க உதவியாக விலையில்லா மிதிவண்டி,மடிக்கணிணி,சீருடை,பாடப்புத்தகங்கள்,சத்தானமதியஉணவு,நோட்டுகள்,எழுது உபகரணங்கள்,காலணிகள்,ஸ்கூல்பேக் போன்ற பொருட்களை வழங்கிக் கொண்டிருக்கும் தமிழக அரசு. இப்பகுதியில் உள்ள ஏழை,எளிய மாணவ,மாணவிகள் ,இளைஞர்கள் தங்களின் மேற்படிப்பை தொடர ஏதுவாக கலைக்கல்லூரி,அல்லது பொறியியல் கல்லூரி அமைக்க ஆவணசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தே.மு.தி.க சகோதரர் மமக வில் இணைந்தார் !



பத்திரிக்கை செய்தி !

இராமநாதபுரம் மாவட்டம் ,திருவாடானை வட்டம் ,தொண்டியை சேர்ந்த சகோதரர் இப்னு சூது இவர் தொண்டியில் அஸ்மத் டெக்ஸ் டைல்ஸ் என்ற ஜவுளி கடை வைத்துள்ளார் ரியல் எஸ்டேட் வியாபாரமும் செய்து வருகிறார் தே.மு.தி.க திருவாடானை ஒன்றிய செயலாளராக பொறுப்பில் இருந்தார் நமது தமுமுக ,மமக செயல்பாடுகளை கண்காணித்து வந்த அவர் மமக மாநில பொது செயலாளர் சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்கள் தொண்டி வருகை தந்தபொழுது நேரிடையாக நமது அலுவலகத்துக்கு வந்து தமது எண்ணங்களை வெளிப்படுத்தி ஏற்கனவே இருந்த பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு நமது மனித நேய மக்கள் கட்சியில் உறுப்பினராக இணைந்தார் எல்லாப்புகழும் இறைவனுக்கே. இந்த நிகழ்வின்போது மாநில மமக பொதுசெயலாளர் தமீமுன் அன்சாரி அவர்களும்,தமுமுக,மமக,மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா ,மாவட்ட மமக துணை செயலாளர் அஜீஸ் ரகுமான் ,மாவட்ட MTS செயலாளர் முஹம்மது பிலால் மற்றும் ஒன்றிய செயலாளர் அக்பர் சுல்தான் நகர் நிர்வாகிகள் அப்துல் ரகுமான் மற்றும் பலர் இருந்தனர்.

அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் : நாம் தமிழர் கட்சி கோரிக்கை


நடைபெறும் எந்தவொரு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும், அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அக்கட்சித்தலைவர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் :

கர்நாடக மாநிலம் மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில், குறிப்பாக கோவையில் வசிக்கும் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதும், பிறகு அவர்கள் தொடர்பற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யப்படுவதும் சமீப நாட்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடந்த மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 14 முஸ்லீம் இளைஞர்கள் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக கர்நாடக காவல் துறையின் பிடியில் உள்ளனர். கைது செய்யப்படுவதற்கு முன்னர், கோவை கோட்டை மேடு பகுதியில் சோதனை என்ற பெயரில் வந்த கர்நாடக காவல் துறையினர், கைது செய்ய திட்டமிட்டிருந்த இளைஞர்களின் வீடுகளில் இருந்து குறிப்பிடத்தக்க எந்த பொருளையும் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பியுள்ளனர். ஆனால் கர்நாடக காவல்துறை தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 600 கிராம் வெடி பொருட்கள் அந்த சோதனைகளின் போது கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

 இதனை கோவை மாநகர ஆணையர் மறுத்துள்ளார். சோதனையின் போது சந்தேகிக்கத்தக்க எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று கோவை மாநகர ஆணையர் தெளிவாக அறிக்கையும் கொடுத்துள்ளார். அது மட்டுமல்ல, இவ்வழக்கில் ஐயத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பீர் முகமதுவுடன் தங்கியிருந்தார் என்று ஒரே காரணத்திற்காக அலியப்பா என்பவரை பிடித்துச் சென்றுள்ளனர். அவரிடம் 3 நாட்களாக விசாரணை நடத்தியுள்ளது கர்நாடக காவல் துறை. ஆனால் நீதிமன்றத்தில் நிறுத்தாமலேயே, கைது செய்யப்பட்டதை அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தாமலேயே அவரை காவலில் வைத்து விசாரித்துள்ளனர். “என்னிடம் காவல் துறையினர் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதிலில்லை, எனவே விடுதலை செய்துவிட்டனர்” என்று அலியப்பா பெங்களூருவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார். கர்நாடகத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத அலியப்பாவை விசாரணை செய்துவிட்டு விடுவித்துவிட்டனர். ஆனால், அவரால் எங்கு எப்படி செல்வது என்று கூட தெரியாமல் திணறியுள்ளார். கர்நாடகத்தில் இயங்கிவரும் மக்களுக்கான மனித உரிமை சங்கம் வழிகாட்டி பாதுகாத்து அழைத்துவந்துள்ளது. இந்த நிகழ்வு அனைத்து நாளிதழ்களிலும் செய்தியாக வெளிவந்துள்ளது.

மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு வழக்கை விசாரிக்க முற்பட்ட தேச புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), விட்டுவிட்டு சென்றுவிட்டது! ஆனால் கர்நாடக காவல்துறையினர் இன்னமும் தமிழ்நாட்டுக்குள் வந்த முஸ்லீம் இளைஞர்களை விசாரணைக்காக என்ற பெயரில் கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தாமலேயே  சட்டத்திற்குப் புறம்பாக நடத்துகின்றனர். இது தடுக்கப்பட வேண்டும்.

இப்படிப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் இஸ்லாமியர்களை ஏதோ குற்றப் பரம்பரையினர் என்று நடத்துவதாகவே இருக்கிறது. எங்கு குண்டு வெடித்தாலும் அதற்கான பூர்வாங்க விசாரணையை தொடங்கும் முன்பே, முஸ்லீம் இளைஞர்களை சுற்றி வளைத்து கைது செய்வது என்பது அவர்கள்தான் குற்றம் செய்திருப்பார்கள் என்று நாட்டு மக்களை நம்ப வைக்கும் முயற்சியாக உள்ளதே தவிர, அது உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதாக இல்லை.

ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் செல்வதற்குரிய சட்ட ரீதியான வழிமுறைகளை கையாளாமல் கைது செய்வதும், அடிப்படை ஆதாரமின்றி அவர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதும், குறிப்பிட்ட நபர் சம்பவத்தில் சம்மந்தப்பட்டுள்ளாரே என்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயமலும் காவல் துறை செயல்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. கோவையில் ஒரு முறை குண்டு வெடிப்பு நடந்துவிட்டது என்பதற்காகவும், என்றோ நடந்த ஒரு குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் வாழ்ந்த இடம் என்பதற்காகவும், தென்னாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும் கோவையிலும், திருநெல்வேலியிலும் வாழ்ந்துவரும் முஸ்லீம் இளைஞர்களை சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல. இப்படிப்ட்ட காவல் துறை அத்துமீறல்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிப்பட்ட அத்துமீறல்கள் தொடர்ந்தால் இந்திய சமூக வாழ்விலிருந்து அந்நியப்படும் ஒரு மன நிலை முஸ்லீம் இளைஞர்களிடம் ஏற்பட்டுவிடும் என்பதையும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks : Tamil Media

புதன், 29 மே, 2013

இராமநாதபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா இராமநாதபுரத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு



இராமநாதபுரம் மே 26: இராமநாதபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா இராமநாதபுரத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும் நோயாகளையும், பார்வையாளர்களையும் அங்கு பனி புரியும் அதிகாரிகளையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
முன்னதாக மருத்துவமனைக்கு சென்ற எம்.எல். வை இணை இயக்குனர் மரு.மீனாட்சி சுந்தரம்,நிலைய மருத்துவ அதிகாரி மறு.சகாய ஸ்டீபன் ராஜ் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு,உல் நோயாளிகள் சிகிச்சை பிரிவு,நவீன எக்ஸ்ரே பிரிவு,மற்று சி.டி.ஸ்கேன் பிரிவு, நரம்பியல் பிரிவு ஆகியவற்றையும் பார்வையிட்டார்.அங்குள்ள கழிப்பறையில் காணப்படும் குறைகள் மற்றும் கழிவு நீர் தேங்குவது குறித்த குறைபாடுகள், தேவைகள் சீர் செய்யப்பட வேண்டியது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்படி உத்திரவிட்டார்.
பின்னர் மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இணை இயக்குனர் மறு.மீனாட்சி சுந்தரம்,நிலைய கண்காணிப்பாளர் மரு.சகாய ஸ்டீபன் ராஜ் ஆகியோருடன் எம்.எல். ஆலோசனை நடர்தினார்.அப்போது இணை இயக்குனர்,இம்மருத்துவமனையை தரம் உயர்த்தும் வகையில் விரைவில் உள்நோயாளிகள் பிரிவில் பொதுவான படுக்கைகள் 100ம் மனநோய் பிரிவில் கூடுதலாக 50ம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப் பட வுள்ளதாக தெரிவித்தார்.
.மு.மு..மாவட்ட செயலாளர் பி.அன்வர் அலி,மாவட்ட பொருளாளர் வாணி சித்தீக், இராமநாதபுரம் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பாகர் அலி,பசீர் அகமது, அகமது இப்ராஹிம்,பரக்கத்துல்லா,பிஸ்மி () நசுருதீன்,ஜஹாங்கீர் அலி,அப்துல் ரஹ்மான் மற்றும் .மு.மு.. ...வார்டு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் முகவை ஊரணியில் எம்.எல்.எ ஆய்வு

 

இராமநாதபுரம் முகவை ஊரணியில் உள்ள ஆகாய தாமரை,செடிகளை உடனே அகற்றி கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், நகராட்சி அதிகாரிகளுக்கு எம்.எல். உத்திரவு:

இராமநாதபுரம் மே 28: மாவட்ட தலைநகரான இராமநாதபுரம் நகரில் பழமையான பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கிவரும் முகவை வரும் முகவை ஊரணியில் உள்ள ஆகாய தாமரைகள்,செடி கொடிகளை உடனே அகற்றி கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என இராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகளுக்கு எம்.எல். ஜவாஹிருல்லா உத்திரவிட்டார்.
இராமநாதபுரம் அரண்மனையின் பின்புறமுள்ள பழமையான முகவை ஊரணி உள்ளது.இந்த ஊரணி நகரின் குடிநீர் தேவையையும்,நிலத்தடி நீர் மட்டத்தையும் பாதுகாத்து வருகிறது.இந்நிலையில் அண்மைக் காலமாக இந்த ஊரணியில் ஆகாய தாமரைகளும்,செடி கொடிகளும் முழுமையாம வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது.இதனால் இராமனாதபுரம்னகரின் குடிநீர் தேவை மற்று நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து பொது மக்கள் எம்.எல். விடம் நேரில் முறையிட்டனர். அப்போது அருகே உள்ள ஊராட்சி பகுதிகளிருந்து கழிவு நீரும்ம் இந்த ஊரணி பகுதிக்குள் வாய்க்கால் மூலம் விடப்படுவதாகவும் முறையிட்டனர்.இதனை தொடர்ந்து இந்த ஊறணிப் பகுதியை இராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் (பொ) மதைவானனுடன் சென்று எம்.எல். பார்வையிட்டார்.அப்போது ஊரணியை ஆக்கிரமித்துள்ள அணைத்து ஆகாய தாமரகளையும் கழிவு நீர் கலப்பதையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு எனவும் உத்திரவிட்டார்.அதற்கு பதிலளித்த நகராட்சி ஆணையாளர் இராமநாதபுரம் நகரின் பிரதான ஊரணியை பாதுகாக்கவும் செடி கொடிகளை அகற்றவும் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

வெள்ளி, 10 மே, 2013

உயர்கல்வியை நோக்கி..... தமுமுகவின் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி




அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம்


வெளிநாட்டிலே வாழக்கூடிய தொழிலாளர்களுக்கென தமிழ்நாட்டிலே ஒரு அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும்: சட்டமன்றத்தில் மமக கோரிக்கை


09.05.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கையில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் உரை:
அதிமுக அரசு வெளிநாட்டிலே வாழக்கூடிய தமிழர்களுடைய பல்வேறு பிரச்சினைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு, அந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நல்ல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் மிக முக்கியமாக நாம் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினை அயல்நாட்டிலே வாழக்கூடிய, அயல்நாட்டிலே வாழக்கூடிய என்று சொல்வதைவிட, அயல் நாட்டிலே பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தமிழகத் தொழிலாளர்களுடைய பிரச்சினை பற்றி இந்த அரசு நிச்சயமாக, சிறப்பான நடவடிக்கைகளை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் சில கருத்துகளை என்னுடைய ஆலோசனைகளாக நான் எடுத்துரைக்க விரும்புகின்றேன்.

2010-
ல் மத்திய அரசாங்கத்தினுடைய வெளிநாடு இந்திய விவகாரத்திற்கான அமைச்சகத்தில் இணைந்திருக்கக்கூடிய Research Unit on Inter National Migration வெளிநாட்டிற்குச் செல்லக்கூடியவர்கள் பற்றிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. பேரா. எஸ். இருதயராஜன் என்பர் இந்த ஆய்வை மேற்கொண்டார். அந்த ஆய்விலே, உண்மையிலே நான் வியக்ககூடிய ஒரு புள்ளிவிவரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவிலே இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களிலிருந்து வெளிநாட்டிலே பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் தங்களுடைய மாநிலத்திற்கு அனுப்பக்கூடிய தொகை எவ்வளவு என்பதை கணக்கிட்டிருக்கின்றார்கள், அதிலே முதலாவதாக வருவது கேரள மாநிலம், 42,922 கோடி ரூபாய் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த மாநிலத்திற்க அனுப்புகிறார்கள். அதற்கடுத்த நிலையிலே இருப்பது இந்தியாவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய மாநிலங்கள் இல்லை. கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் ரூ. 41,400 கோடியை செலுத்தியிருக்கின்றார்கள். மூன்றாவது இடத்திலே ஆந்திரா மாநிலம் 28,550 கோடி எனவே வெளிநாட்டில் பணியாற்றக்கூடிய தமிழர்களின் நலனை பேணி பாதுகாப்பதிலே நிச்சயமாக நாம் கூடுதல் அக்கறை செலுத்துவதற்குக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
இதிலே என்ன பிரச்சினை என்றால் அதிகாரப்பூர்வாமாக தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு சென்று வேலையில அமர்ந்திருக்கக்கூடிய தொழிலாளர்கள் எத்தகை பேர் என்ற புள்ளிவிவரம் இருக்கின்றதா? என்றால் இல்லை, இங்கிருந்து வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பிற்காக, தொழிலாளர்களாக விசா பெற்று செல்லக்கூடியவர்களுடைய புள்ளிவிவரத்தை கணக்கிடக்கூடிய பணியை தமிழக அரசு செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக வளைகுடா செல்லக்கூடிய தமிழர்கள் தங்களின் விசா, பணிக்காலம், வேலை செய்ய போகும் நிறுவனம், ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் பற்றிய முழு தகவல்களையும் முதலில் தமிழக அரசு அளித்து அதை துôதரகம் பரிசோதித்தப் பிறகுதான் இவர்கள் நாட்டைவிட்டே வெளியே செல்லவே அனுமதிக்க வேண்டும். ஏனென்றால், இன்றைக்கு அரசு நாடுகளாக இருக்கட்டும் அல்லது மலேசியவாக இருக்கட்டும். தாங்கள் கடன் பெற்று, பல்வேறு சுமைகளைப் பெற்று விசா எடுத்துச் சென்று, அங்கே மிக கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு, மிகப் பெரிய துயரங்களைப் படக்கூடிய தமிழர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடைய நலன்களை காப்பாற்றுவது நிச்சயமாக நம்முடைய அரசாங்கத்தின் கடமையாக இருக்கின்றது. இந்த விஷயத்திலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோல், தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் சார்பாக மிகப் பெரிய விழிப்புணர்வை நடத்த வேண்டும். வெளிநாட்டிலே உள்ள தமிழர்கள் வேலைக்குச் செல்லும்போது அங்குள்ள இடர்பாடுகள் என்ன? அங்கே அவர்கள் நடந்துக்கொள்ளக்கூடிய முறைகள் என்ன என்பதைப் பற்றி விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இன்று அரபு நாடுகளுக்கும், சில தூர கிழக்கு நாடுகளுக்கும் செல்லக்கூடிய தொழிலாளர்கள் துயரங்களிலே மாட்டிக் கொள்ளும்போது அவர்களுக்கு அங்கேயிருக்கக் கூடிய நம்முடைய 100க்கு 90 சதவீதம் நம்முடைய தமிழகத் தொழிலாளர்களுக்கு அங்கேயிருக்கக்கூடிய வெளிநாட்டு தூதரங்கள் சரியான முறையிலே உதவிகளை செய்வதில்லை. அமைப்புச்சாரா அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் நம்முடைய தமிழக அமைப்புகள் எங்களுடைய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உட்பட அவர்களுடைய துயரங்களை நீக்குவதற்கு நாங்கள் ஏதாவது பணிகளைச் செய்கின்றோம். இதற்குப் பதிலாக இங்கே ஒரு Distress Cell அதாவது அவர்கள் துயரத்தில் இருக்கும்போது இமெயில் வழியாகவோ அல்லது தொலைபேசி வழியாகவோ தங்களுடைய தகவல்களைக் கொடுத்து உடனே நம்முடைய தமிழக அரசு அதிகாரிகள் அது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுத்து அப்படி வெளிநாட்டிலே வாழக்கூடிய தமிழகத் தொழிலாளர்களைக் காப்பாற்றக்கூடிய பணியைச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இப்போது சவூதி அரேபியாவிலே ஏராளமான, இலட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதுவும் கேரளாவிற்கு அடுத்த நிலையிலே இருக்கக்கூடியவர்கள் நம்முடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான். அங்கே அந்த நாட்டு அரசாங்கம், அந்த நாட்டிலே இருக்கக் கூடியவர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டுமென்பதற்காக நிதாகத் எனற ஒரு திட்டத்தை கொண்டுவந்து அதன்மூலமாக நம்முடைய இந்திய நாட்டைச் சார்ந்த ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பை இழந்து நாடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அவர்களுடைய மறுவாழ்விற்காகவும் இந்த அரசு திட்டத்தைத் தீட்டிச் செயல்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

2011-
ல் தமிழக அரசு தமிழ்நாடு அயல்நாடுவாழ் தமிழர்கள் நல்வாழ்வுச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றியது. தமிழ்நாட்டிற்கு வெறியே பிற மாநிலங்களிலே வாழக்கூடிய பிற மாநிலங்களிலே பணியாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கும், அதேபோல, இந்தியக் கடல் எல்லைக்கும் அப்பால் வெளிநாடுகளில் வாழக்கூடிய தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்குரிய எல்லா நலன்களையும் பாதுகாக்கக்கூடிய வகையிலே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. அந்தச் சட்டத்தினுடைய பிரிவு 10 லே தமிழ்நாடு அயல் நாட்டுவாழ் தமிழர்களுக்கான நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்று குறிபிடப்பட்டிருக்கின்றது. அந்த நல வாரியத்தை விரைவிலே இந்த அரசு அமைப்பதற்கான சட்டங்களை வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு சில நேரங்களிலே அயல்நாடுகளில் பணியாற்றும்போது அவர்கள் ஏதாவது தண்டனை பெற்றிருப்பார்கள், அதற்குபிறகு அவர்களை நாட்டிற்குத் திருப்பி அனுப்புவார்கள், வழக்கமாக அவர்களுக்கு டிக்கெட்டை மும்பை வரைதான் கொடுக்கிறார்கள். மும்பைக்கு இரவிலே வந்து இறங்கிவிட்டு, தாயகத்திற்கு வருவதற்குக் கையிலே காசில்லாமல் துயரப்படக்கூடிய தமிழகத் தொழிலாளர்களும் இருக்கின்றார்கள், எனவே கேரளாவில் வெளிநாட்டிலே வாழக்கூடிய அந்த மாநிலத்தவர்களுக்கென தனியாக ஒரு அமைச்சகம் இருக்கின்றது. முழுக்க முழுக்க நான் சொன்ன அத்தனைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடிய வகையிலே அந்த அமைச்சகம் செயல்படுகிறது. எனவே வெளிநாட்டிலே வாழக்கூடிய நம்முடைய தமிழகத் தொழிலாளர்களுக்கென தமிழ்நாட்டிலே ஒரு அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.