பத்திரிக்கை செய்தி !
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு இராமநாதபுரம்மாவட்டம்,
திருவாடானைவட்டம், தொண்டி வரலாற்று சிறப்புமிகு துறைமுக நகரமாகும். தொண்டியை சுற்றி
அதிகமான கிராமங்கள் இருக்கிறது. தொண்டி சுற்றுவட்டார பகுதியில் மீனவர்கள்,விவசாயிகள்,முஸ்லிம் கள்
மற்றும் ஏழை,எளிய மக்கள் அதிகம் வாழக்கூடிய பகுதியாகும்.ஒரு காலத்தில் கல்வியில்
மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்தது, தற்பொழுது கல்வியில் முன்னேற வேண்டும் என்ற
தாக்கம் அதிகஅளவில் மக்களிடத்தில் இருக்கிறது. இப்பகுதி இளைஞர்கள் படித்து முடித்தவுடன்
தொடர்ந்து படிக்க கல்லூரிகள் இல்லாததால் 10,12ம் வகுப்பு முடித்தவுடன் விவசாயம், மீன்பிடிதொழில்,
தச்சுவேலை, கொத்தனார்,கடைகளுக்குகூலிவேலை போன்றவைகளுக்கு சென்று விடுகிறார்கள். ஏழை.எளிய
மக்கள் கல்வி கற்க உதவியாக விலையில்லா மிதிவண்டி,மடிக்கணிணி,சீருடை,பா டப்புத்தகங்கள்,சத்தானமதியஉணவு, நோட்டுகள்,எழுது
உபகரணங்கள்,காலணிகள்,ஸ்கூல்பேக் போன்ற பொருட்களை வழங்கிக் கொண்டிருக்கும் தமிழக
அரசு. இப்பகுதியில் உள்ள ஏழை,எளிய மாணவ,மாணவிகள் ,இளைஞர்கள் தங்களின் மேற்படிப்பை
தொடர ஏதுவாக கலைக்கல்லூரி,அல்லது பொறியியல் கல்லூரி அமைக்க ஆவணசெய்யுமாறு
கேட்டுக்கொள்கிறேன்.