ஞாயிறு, 2 ஜூன், 2013

தொண்டியில் முதியோர்,விதவைகள் நலத்திட்ட அரசு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி !



பத்திரிக்கை செய்தி !
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா ,தொண்டியில் முதியோர்,விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு சமூக பாதுகாப்பு  நலத்திட்ட அரசு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, மாநில மமக அமைப்பு செயலாளர் மண்டலம் ஜெயினுலாப்தீன் அவர்களின் முன்னிலையில் ,இராமநாதபுரம் மாவட்ட தமுமுக ,மமக தலைவர் சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது . இந்தநிகழ்ச்சியில் தொண்டி,நம்புதாளை ,புதுப்பட்டினம் ஆகிய ஊர்களை சேர்ந்த 21 பயனாளிகளுக்கு அரசு ஆணைகள் பெற்று வழங்கப்பட்டது . பயனாளிகளுக்கு அரசு ஆணைகளை மாநில செயலாளர் வழங்கினார் உடன் மமக மாவட்ட துணை செயலாளர் அஸீஸ் ரகுமான் ,ஒன்றிய செயலாளர் அக்பர் சுல்தான் ,நகர் பொருளாளர் அப்துல் ரகுமான் ,ஷேக்,P.V.பட்டிணம் ஜலால்,பாச்சாளை சேக் முஹம்மது,அன்சாரி,காதர்,அஜ்மீர்  ஆகியோர் கலந்து கொண்டனர் .