பத்திரிக்கை செய்தி !
இராமநாதபுரம்
மாவட்டம், திருவாடானை ஒன்றியம், தொண்டியில் பொருளாதார உதவி வழங்கும்
நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட த.மு.மு.க, ம.ம.க தலைவர்
சாதிக் பாட்சா தலைமை தாங்கினார் . மாவட்ட மமக துணை செயலாளர் அஸீஸ் ரகுமான்
மற்றும் மாவட்ட M.T.S செயலாளர் முஹம்மதுபிலால் முன்னிலை வகித்தார்கள் .
திருவாடானை ஒன்றிய தமுமுக செயலாளர் அக்பர் சுல்தான் மற்றும் P.V.பட்டிணம்
கிளை பொறுப்பாளர் ஜலால் ஆகியோர் கலந்து கொண்டனர் . இந்த நிகழ்ச்சியில்
திருவாடானையைச் சேர்ந்த சகோதரி உஷா அவர்களுக்கு ரூ. 2,500.00 ம் ,தொண்டியை
சேர்ந்த மற்றொருவருக்கு ரூ. 5,000.00 ம் ஆக மொத்தம் ரூ. 7,500.00 பொருளாதார
உதவியாக வழங்கப்பட்டது . இதற்கான ஏற்பாடுகளை நகர் நிர்வாகிகள்
செய்திருந்தனர் .