வியாழன், 20 ஜூன், 2013

நாங்கள் சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுடன் இல்லை- ஜவாஹிருல்லா



சென்னை: சட்டசபைத் தேர்தலில் நாங்கள் அதிமுக கூட்டணியில் இருந்தோம். அதன் பிறகு நடந்த எந்த ஒரு தேர்தலிலும் நாங்கள் அவர்களுடன் இல்லை. எங்களது வாக்குகள் வீணாகி விடக் கூடாது என்பதற்காக ராஜ்யசபா தேர்தலில் திமுகவை ஆதரிக்க முடிவு செய்தோம் என்று கூறியுள்ளார் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றத் தலைவர் ஜவாஹிருல்லா. நேற்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து மனித நேய மக்கள் கட்சி ராஜ்யசபா தேர்தலில் தனது ஆதரவை திமுகவுக்குத் தெரிவித்தது. பின்னர் செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா பேசுகையில்இ மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எங்கள் தலைவர் ரிபாய் தலைமையில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்தோம். வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடக் கூடிய சகோதரி கனிமொழி அவர்களுக்கு மனிதநேய மக்கள்கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று எங்களுடைய கட்சியின் ஆதரவை தெரிவிப் பதற்காக சந்தித்தோம். ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவின் நான்கு வேட்பாளர்களும் அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற டி. ராஜாவும் வெற்றி பெற அதிமுகவின் போதுமான வாக்குகள் அளிக்கப்பட இருக்கிற இந்த சந்தர்ப்பத்தில் எங்கள் வாக்குகளை வீணாக்க விரும்பவில்லை. ஆகவே திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். ராஜ்யசபா தேர்தலுக்கு மட்டும் இப்போது இந்த ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தல் வரும்போதுதான் அதுகுறித்து்ப பேச முடியும். அதிமுகவுடன் கடந்த சட்டமன்றத்தேர்தலில் கூட்டணியில் நாங்கள் இருந்தோம். அதற்குப் பிறகு நடைபெற்ற எந்த ஒரு தேர்தலிலும்இ அது உள்ளாட்சிமன்றத் தேர்தலாக இருந்தாலும்இ கூட்டுறவுத்தேர்தலாக இருந்தாலும் நாங்கள் அவர்களோடு இல்லை என்றார் அவர். அப்படியானால் கூட்டணி முறிந்து விட்டதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் இந்த தேர்தலுக்கு இந்த நிலைப்பாடு என்றார் அவர்.