செவ்வாய், 25 ஜூன், 2013

கடல் அட்டை மீதான தடையை நீக்க முயற்சி எடுத்து வருகிறோம்


கீழக்கரை :
கடல் அட்டை என்பது உணவு வகை. அது அழியக்கூடிய இனம் அல்ல. கடல் அட் டை பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத் திய, மாநில அரசுகளிடம் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது  என ஜவாஹிருல்லா எம்எல்ஏ கூறினார்.

கீழக்கரை நகரில் மக்களை சந்தித்து ஜவாஹிருல்லா எம்எல்ஏ குறைகளை கேட்டறிந்தார். அவரிடம் ஏராளமான மக்கள் நகரின் பல்வேறு இடங்களில் நிலவும் சுகாதாரக்கேடு உள்ளிட்ட பல்வேறு குறைகள் குறித்து மனுக்கள் மூலம் புகார் அளித்தனர் மனுக்களை பெற்ற ஜவாஹிருல் லா எம்எல்ஏ கூறியதாவது:
 
கீழக்கரையில் பொதுமக்களின் சிரமத்தை போக்க சட்டமன்ற கூட்டத்தில் வெட்டு தீர்மானம் போட்டு கீழக்கரை புதிய பஸ் ஸ்டாண்டில் மின் கட்டண வசூல் மையம் அமைக்கப்பட்டது. இந்த அலுவலகம் அவசர அவசரமாக நகராட்சி நிர்வாகத்தால் திறப்பு விழா நடத்தப்பட்டு ஒரு நாள் மட்டுமே செயல்பட்டு  தற்போது மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசு கடல் அட்டை பிடிப்பதற்கு தடை விதித்திருப்பது தேவை இல்லாதது. கடல் அட்டை அழியும் இனம் இல்லை. சாதாரண உணவு வகை. ஆகவே கடல் அட்டை தடை நீக்கம் குறித்து தமிழக முதல்வரிடமும், மத்திய அரசிடமும் தெரிவித்துள்ளேன். கடல் அட்டை தடையை நீக்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு விரைவில் இதற்கு தீர்வு காண்போம்.
 
கீழக்கரையில் ஆங்காங்கே கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு சாலை யில் வழிந்தோடுகிறது. இதற்கு ஒரே தீர்வு பாதாளசாக்கடை திட்டம்தான். இத்திட்டத்தை கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது சட்டசபை யில் இதுபற்றி பேசியுள்ளேன்.
வரும் நிதியாண் டில் இதற்கான அறிவிப்பு வரும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கூறினார்.
ஜவாஹிருல்லா எம்எல்ஏ தகவல்