கீழக்கரை மேலத்தெரு பிரமுகர்கள் சந்திப்பு:
கீழக்கரையில் 21.06.2013 வெள்ளிக்கிழமை மாலை சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா திடீர் ஆய்வு மேற்கொன்றார்.அதன் ஒரு பகுதியாக கீழக்கரையின் இதய பகுதியாக திகழும் மேல தெருவில் உள்ள பாரம்பரியமான உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்கம் அலுவலகத்திற்கு சென்று முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். அப்போது கீழக்கரை தனி தாலுகா, மேலதெரு புறக்காவல் நிலையம், ரயில்வே முன்பதிவு மையம் போன்ற முக்கிய பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. எம்.எல்.எ அனைத்து கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். மறைந்த முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் செ.மு.ஹமீது அப்துல் காதர் அவர்களின் சேவை பற்றியும் நினைவலைகள் பரிமாறப்பட்டது. இச்சந்திப்பின் போது ஹைராதுல் ஜலாலியா மேனிலைப்பள்ளியின் தாளாளர் ஹமீது காக்கா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் த.மு.மு .க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.