அகமதாபாத்: குஜராத்தில் இளம் பெண் இஷ்ரத் ஜகான் உள்ளிட்டோர் போலி
என்கவுகண்டரில் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு உளவுத்துறை அதிகாரிக்குத்
தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
ஐபி எனப்படும் உளவுத்துறையில் பணியாற்றி வரும் முக்கியமான அதிகாரி அவர்
என்று சிபிஐ கூறியுள்ளது.
அந்த அதிகாரிக்கு இந்த கொலையில் உள்ள தொடர்புக்கு போதுமான ஆதாரங்கள்
கிடைத்திருப்பதாகவும் சிபிஐ கூறியுள்ளது.