இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா 21.06.2013 வெள்ளிக்கிழமை மண்டபம் ஒன்றியம் தங்கச்சிமடம் ஊராட்சியில் குறைகளை கேட்டறிந்தார். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் ஊராட்சிமன்ற உறுப்பினர்களும்,பொதுநல அமைப்பினரும்,சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு ஊர் வளர்ச்சி குறித்து கோரிக்கைளை தெரிவித்தனர். அரசு மனையில் குடியிருப்போருக்கு இலவச பட்டா, விதவை,முதியோர் உதவி தொகை போன்றவை நீண்டகாலமாக தீர்க்கப் படாத குறையாக உள்ளதாக தெரிவித்தனர். அதுகுறித்த முழு விவரங்களை தந்தால் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பெற்று தர முயற்சிப்பதாக எம்.எல்.எ தெரிவித்தார். இச்சந்திப்பின்போது ஊராட்சிமன்ற தலைவர் ஞானசீலன், த மு மு க மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா,மாவட்ட செயலாளர் அன்வர் அலி, மண்டபம் ஒன்றிய தலைவர் ரசூல்கான், தங்கச்சிமடம் கிளை தலைவர் ரஹ்மான் உள்ளிட்ட மாவட்ட,ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.