இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா கீழக்கரையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒருபகுதியாக கீழக்கரையின் மைய பகுதியில் உள்ள பண்ணாட்டார் தெருவில் குறைகளை கேட்டறிந்தார். அப்பகுதியில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப் படவில்லை எற்றும், தேசிய அடையாள அட்டை இதுவரை கிடைக்கவில்லை என்றும் மக்கள் குறைபட்டனர். இது குறித்து உரிய அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி ஆவன செய்வதாக எம்.எல்.எ உறுதி கூறினார்.