சனி, 22 ஜூன், 2013

தங்கச்சிமடம் அரசு மேனிலை பள்ளி ஆய்வு - எம்.எல்.எ


தங்கச்சிமடம் அரசு மேனிலை பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவிகித தேர்ச்சியும்,12ம் வகுப்பில் 90 சதவிகித தேர்ச்சியும் அடைந்துள்ளது. இருப்பினும் அங்கு போதிய வகுப்பறை கட்டடங்கள்,தளவாட பொருட்கள்,கணிணி போன்றவை பற்றா குறியாக உள்ளதாக எம்.எல்.எ விடம் தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அரசு மேனிலை பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பள்ளி தலைமையாசிரியர் பள்ளியின் தற்போதைய நிலை குறித்து எடுத்து கூறினார். பள்ளியின்  தேவை குறித்து விபரமாக எழுதி தருமாறும்,அதுகுறித்து பரிசீலிப்பதாகவும் எம்.எல்.எ கூறினார். சமூக நல ஆர்வலர் ஜஸ்டின்,ஊராட்சி மன்ற துணை தலைவர் பழனி முனியாண்டி,ஊராட்சிமன்ற தலைவர் ஞானசீலன், த.மு.மு.க.மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா, மாவட்ட செயலாளர் அன்வர் அலி, ஒன்றிய தலைவர் ரசூல்கான், கிளை தலைவர் ரஹ்மான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.