இக்கடிதம் தங்களின் பூரண உடல் நலத்துடனும் சீரிய
மக்கள் பணி சிறப்பதற்கும் இறைவன் அருளோடு சந்திக்கட்டுமாக. மரியாதைக்குரிய
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தனிப்பிரிவிற்கு அனுப்பப்படுகிறது :- இராமநாதபுரம்
மாவட்டம் ,திருவாடானை வட்டம் , தொண்டி உள்வட்டம் ,வேலங்குடிகுரூப் சர்வே எண் – 21/3 புஞ்சை விஸ்தீரணம் 25 ஏக்கர் நிலம் தொண்டி
முஸ்லிம் கல்வி சங்கம் சார்பில் 2006 ல் கவர்னர் பெயரில் இனாமாக அரசாங்கத்திற்கு
மினி துறைமுகம் அமைப்பதற்காக கொடுக்கப்பட்டது. அந்த இடம் நல்ல மணற்பாங்கான
இடமாகும்.இதுவரை மினி துறைமுகம் அமைப்பதற்கான எந்த அரசு உத்திரவும் வராத நிலையில்
அப்பகுதியில் சிலர் அங்குள்ள மொத்தமுள்ள 25 ஏக்கர் இடத்தில் சுமார் 15 ஏக்கர்
சுற்றளவில் அதிகமான மணலை அரசுக்கு தெரியாமல் அள்ளி விற்று வருகிறார்கள் . இது
சம்பந்தமாக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொண்டி வரலாற்று
சிறப்புமிகு நகரமாகும் இந்த இடத்தில் அரசு கவனம் செலுத்தி நல்ல மணலை திருடி
விற்பனை செய்வதை தடுத்து இதே மாவட்டத்தில் சுற்றுலா தளமாக விளங்கும் அரியமான்
கடற்கரையை போன்று சுத்தப்படுத்தி பராமரிப்பு செய்து கிழக்கு கடற்கரை சாலையில்
அமைந்துள்ள இப்பகுதியில் பொது மக்கள் பொழுது போக்குக்காக ஏற்பாடு செய்தால் இதன்
மூலம் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் ஆகவே சமூகம் மேற்படி இடத்தினை ஆய்வு
செய்து கிழக்கு கடற்கரை பூங்கா அமைப்பதற்கு ஆவன செய்ய வேணுமாய் அன்புடன் கேட்டுக்
கொள்கிறேன் .