ஞாயிறு, 5 மே, 2013

வேலூர் கோட்டை பள்ளிவாசலில் தொழுகை நடைபெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டபேரவையில் மமக வலியுறுத்தல்




வேலூர் கோட்டை பள்ளிவாசலில் தொழுகை நடைபெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டபேரவையில் மமக வலியுறுத்தல்

25.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் கேள்வியும் அமைச்சரின் பதிலும்

வேலூர் கோட்டையிலே அகழ்வாராய்ச்சித் துறையினரால் பராமரிக்கப் படக்கூடிய கோட்டையிலே சர்ச் இருக்கிறது. அங்கே வழிபாடு நடக்கிறது. அங்கே ஜகதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. அங்கேயும் வழிபாடு நடக்கிறது. அங்கே இருக்கக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிகுந்த பள்ளிவாசலிலும் வழிபாடு நடத்துவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாண்புமிகு திரு முனைவர் வைகைச் செல்வன் (தொல்லியல் துறை அமைச்சர்): வேலூரில் இருக்கின்ற பழமையான அந்த நினைவுச் சின்னத்தை பற்றி ஒரு கேள்வியை மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் எழுப்பினார்கள். வேலூர் என்றாலே ஜெயில் ஞாபகம் வரும் மற்றொன்று வெயில் ஞாபகம் வரும் இருந்தாலும் கூட அவர் எழுப்பியிருக்கக்கூடிய கேள்வியில் நியாமான கோரிக்கை இருப்பின் மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய தலைமையிலான அரசு பரிசீலனை செய்யும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.