வியாழன், 21 நவம்பர், 2013

டிசம்பர் 6ல் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் -- பேராசிரியர் ஜவாஹிருல்லா MLA பேட்டி






இராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் தன் தொகுதிக்குட்பட்ட கீழக்கரை பகுதியில் களஆய்வு செய்தார்கள். குறிப்பாக கீழக்கரையில் உள்ள  இஸ்லாமியா தொடக்கப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் ஆய்வை மேற்கொண்டார்கள்.

அதன் பின் கீழக்கரை நகர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பேராசிரியர்.

அதில் விபத்துக்கள் பாதுகாப்பு வாரத்தை நாம் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும், வாகன ஓட்டிகளின் தவறுகளால் ஏற்படும் கோர விபத்துக்கள் குறித்து முழு அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்றார். அதன் பின் இந்தியாவிற்கு உலகரங்கிள் தலைகுனிவை ஏற்படுத்திற பாபர் மசூதி இடிப்பு தினமாம் டிசம்பர் 6ல்  மாவட்ட தலைநகரங்களில் மாலை 3மணிக்கு தமுமுக தலைமையில் மக்கள் திரல் போராட்டம் நடைபெறும் என்றார். இந்நிகழ்சிகளில் மாவட்டத் தலைவர் சகோ.சாதிக்பாட்ஷா, மாவட்டச் செயலாளர் சகோ.அன்வர்  உட்பட ஏனைய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

களத்தகவல் சகோ.அக்பர் சுல்தான்