புதன், 20 நவம்பர், 2013

சவூதியில் பணிபுரியும் தமிழர்களே உஷார்...உஷார்!




சவூதி: சவூதியில் நிதாகத் சட்டப் பிரச்சனையையொட்டி பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது.
சமீபத்திய நிதாகத் சட்டப் பிரச்சனையை ஒட்டி சவூதியில் பல்வேறு இடங்களிலும் கொள்ளை சம்பவங்களும், வழிப்பறிகளும் அதிக அளவில் நடந்து வருகின்றன என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் வழிப்பறி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தமிழர் கூறுகையில்,
நேற்று இரவு 8 மணி அளவில் நான் தம்மாமில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது வழியில் நான்கு கொள்ளையர்களால் மடக்கப்பட்டு கழுத்தில் கூரிய கத்தி வைக்கப்பட்ட நிலையில் என்னிடமிருந்த இரண்டு மொபைல் போன்களையும் பிடுங்கி கொண்டு ஓடிவிட்டனர். இது போன்று பலரிடமும் போன்களும், மணிபர்ஸுகளும் கத்தி முனையில் துணிகரமாக கொள்ளையடிக்கப்பட்டு வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
தயவு செய்து எந்த சூழ்நிலையிலும் வெளிச்சமில்லாத பகுதிகளில் தனி நபராக செல்ல வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். இரண்டு போனையும் பறி கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் இருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.