ஞாயிறு, 24 நவம்பர், 2013

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பிழைத் திருத்தம் செய்ய தியதி அறிவிப்பு



மதுரை : தமிழகத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணையதளம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு பதிவுதாரர்களின் விபரங்கள் ஆன்-லைன் மூலமாக பாரமரிக்கப்பட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்tnvelaivaippu.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவுதாரர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விபரங்களை சரி பார்த்துக் கொள்ளலாம். இந்த இணையதள முகவரியில் சென்று வேலைவாய்ப்பு அலுவலக புதுப்பதிவு, புதுப்பித்தல், கூடுதல் தகுதியினை பதிவு செய்தல், மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகலெடுத்தல் போன்ற வசதிகளை உடனடியாக பெற முடியும்.
பதிவுதாரர்கள் தங்களது பதிவு விபரங்களை சரிபார்க்கும் போது காணப்படும் எழுத்துப்பிழைகள், பதிவு விடுதல்கள், பதிவு மூப்பு, கல்வித்தகுதி திருத்தங்கள், முன்னுரிமை பதிவு விபரங்கள் ஆகியவற்றில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை சரி செய்ய வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் முதற்கட்டமாக தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு கிளை அலுவலகம் மதுரையில் முன்னுரிமை பிரிவின் கீழ் (ஆதரவற்ற விதவை, கலப்பு திருமணம் புரிந்தோர் ;, இராணுவத்தினரைச் சார்ந்தோர்,  முன்னாள் இராணுவத்தினா, மாற்றுத்திறனாளி போன்ற பிரிவில் பதிவு செய்துள்ள முன்னுரிமை பதிவுதாரர்கள் தங்களது பதிவு விபரங்களை மேற்குறிப்பிடப்பட்ட இணையதள முகவரியில் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதை சரிசெய்ய உடனடியாக மதுரையில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகத்தில் 29.11.2013 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை (கையெழுத்து பிரதி) இணையதளம் மூலம் பெறப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள கல்வி மற்றும் இதர தகுதி தொடர்பான சான்றுகள், ரேஷன் கார்டு, சாதிச் சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவற்றின் நகல்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பி வைக்குமாறு தொழில் மற்றும் செயல்வேலைவாய்ப்பு கிளை அலுவலக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவவர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார்.