ஞாயிறு, 24 நவம்பர், 2013

மனிதநேய மக்கள் கட்சி திருப்புல்லாணி ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம்



அஸ்ஸலாமு அலைக்கும்









தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி தன் கரைபடியாத தன்னலமற்ற செயல்பாட்டினால் ஜாதிஇ மத பேதமின்றி தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் விரிந்திருப்பது நாம் அறிந்ததே. குறிப்பாக மனிதநேய மக்கள் கட்சியி இந்திய வரலாற்றிலே கரைபடியாத இரு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு சிறப்பாக செயல்படுவது மாற்றுமத சகோதரர்களை மெய்சிலிர்க்கச் செய்துள்ளது என்றால் அது மிகையாகாது.

அதன் எடுத்துக்காட்டாக முகவை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் திருப்புலாணி செயல்வீரர்கள் கூட்டம் கலிமன்குண்டு என்ற கிராமத்தில் நடைவெற்றுக் கொண்டிருக்கிறது.

இக்கிராமம் முஸ்லிம்கள் நிறைந்த கிராமம் இல்லை. இங்கு தொழுவதற்கு பள்ளிகள் கூட இல்லை. மாற்றுமத சகோதரர்கள் நிரைந்துள்ள இக்கிராமத்தில் மனிதநேய மக்கள் கட்சியில் தூய செயல்பாட்டில் கவரப்பட்டு அங்குள்ள பொதுமக்கள் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். குறிப்பாக அக்கிராமத்தில் உள்ள சகோ.சுரேஸ், சகோ.செந்தில் இக்கூட்டத்தை தலைமை ஏற்று ஏற்பாடு செய்துள்ளனர்.

இதில் தலைமை உரை திருப்புலானி ஒன்றியச் செயலாளர் சகோ.ரைஸ் இப்ராஹிம் நிகழ்த்தினார். அறிமுகஉரையை இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் சகோ. சாதிக் பாட்ஷா நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் அனைத்து மக்களுக்கும் அரசின் உதவித்திட்டங்கள் முறையாக சென்றடைய வேண்டும் என்றும் அதை எவ்வாறு பெற வேண்டும் என்று திருவாடனை ஒன்றியச் செயலாளர் சகோ.அக்பர் சுல்தான் விளக்கினார்.

இக்கூட்டத்தில் சிறப்புரை மாநில அமைப்புக் குழு உறுப்பினர் மௌலவி மைதீன் உலவி நிகழ்த்த உள்ளார்.

மேலும் இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சகோ.அன்வர் மாவட்டப் பொருளாளர் சகோ. வாணி சித்திக்இ மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் சகோ.ஜாஹிர் உட்பட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

களத் தகவல் சகோ. அக்பர் சுல்தான்