செவ்வாய், 19 நவம்பர், 2013

இராமநாதபுரம் மாவட்டம் சார்பில் அரசின் முதியோர் உதவித்தொகை






இராமநாதபுரம் மாவட்டம் (கிழக்கு)சார்பில் அரசின் முதியோர் உதவித்தொகைக்கான அரசாணைகளை பெற்று வழங்கும் நிகழ்ச்சி தமுமுக மாவட்ட தலைவர் எம்.சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பேசும்பொழுது  முதியோர்,விதவைகள்,கணவரால் கைவிடப்பட்டவர்கள்,மாற்றுத்திறனாளிகள்,50 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாதவர்கள்,எய்ட்ஸ்,கேன்சர்,டிபி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் அவர்கள் இறக்கும் வரை மத்திய,மாநில அரசுகளால் மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது இதை நமது பகுதிகளில் வாழும் தகுதியான அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கும் தொடர்ந்து அரசாணைகளைப்பெற்று வழங்கி வருகிறோம். இதைப்போல் தமிழகம் முழுவதும் உள்ள தமுமுக கிளை நிர்வாகிகள் முயற்சி செய்தால் அரசின் நிதி மூலமாக பலர் பயனடைய வாய்ப்பு உள்ளதாக கூறினார்.இந்த நிகழ்ச்சியில் 10 பயனாளிகளுக்கு அரசாணைகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் மமக மாவட்ட துணை செயலர் அஸீஸ் ரகுமான்,மாணவர் இந்தியா மாவட்ட செயலர் கலந்தர் ஆஸிக்,திருவாடனை ஒன்றிய தமுமுக செயலாளர் அக்பர் சுல்தான்,ஒன்றிய இளைஞர்அணி செயலர் சம்சுதீன் நவ்வர்,தமுமுக தொண்டரணி செயலர் முஹம்மது,நகர் தலைவர் சம்சு நெய்னா,நகர மமக செயலர் பரக்கத் அலி,நகர தமுமுக செயலர் பௌசுல் ரகுமான்,பொருளாளர் நெய்னார் காஜா,ஈகோ ரபீக்,புதுப்பட்டினம் கிளை நூருல் ஹக்,பி.வி.பட்டிணம் கிளை ஜலால்,பாசிப்பட்டினம் கிளை மற்றும் தமுமுக,மமக தோழர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.முடிவில் ஒன்றிய தலைவர் சாகுல் ஹமீது நன்றி கூறினார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை மீரான்,சகுபர் சாதிக்,செல்லக்கனி,சே.பி.புர்கான் ஆகியோர் செய்திருந்தனர்.