அல்லாஹ்வின் திருப்பெயரால்....
65 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம், உச்சிப்புளி தமுமுக கிளை சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் மாவட்ட தலைவர் எம்.சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது, இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் அன்வர் அலி,மாவட்ட நிர்வாகிகள்,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் யாசர் அரபாத்,ஒன்றிய தலைவர் ரசூல்கான்,நகர் தலைவர் சீனி முஹம்மது, மண்டபம் சீனி செய்யது இபுராஹீம், இருமேனி ஜகுபர் சாதிக் முன்னிலை வகித்தனர். டாக்டர்.மதார்ஷா,டாக்டர்.கீர்த் திகா வட்டார சுகாதார ஆய்வாளர் எம்.மகேந்திரன்,சுகாதார ஆய்வாளர்கள் கரு.மகேந்திரன்,கேசவமூர்த்தி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் இரத்தம் சேகரித்தனர். மாவட்ட,ஒன்றிய,நகர் தமுமுக,மமக சகோதரர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.