செவ்வாய், 14 ஜனவரி, 2014

இராமநாதபுரம் நகராட்சி சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும்




இராமநாதபுரம் நகராட்சி பகுதியில் சுவார்ட்ஸ் மேனிலை பள்ளிக்கு எதிர்புறம் சில ஆண்டுகளுக்கு முன் சிறுவர் பூங்கா ஒன்று அமைக்க பட்டது. நகராட்சிக்கு சொந்தமான இடத்தில தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அமைத்த இந்த பொழுது போக்கு சிறுவர் பூங்காவை . நல்ல முறையில் செயல்பட்டு வந்தது. ஆனால் சமீப காலமாக இந்த பூங்கா சில மிக மோசமான நிலையில் உள்ளதாகவும்,அங்குள்ள உபகரணங்கள் யாவும் சிதிலமடைந்து உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் கூறியதை அடுத்து கடந்த ஞாயிறு 12.01.2014 அன்று நேரில் சென்று பார்வையிட்டேன். இராமநாதபுரத்தின் ஒரே பொழுது போக்கு அம்சமான இந்த பூங்காவை சீரமைக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், இங்கு வரும் பள்ளி மாணாக்கர்களை ஊக்குவிக்கும் வகையில் அவ்வப்போது சிறு சிறு போட்டிகள் நடத்த வேண்டும், இது குறித்து வரும் சட்டமன்ற கூட்ட தொடரின் போது வலியுறுத்த உள்னேள். இராமநாதபுரம் மாவட்டமற்றும் நகர மனிதநேய மக்கள் கட்சிநிர்வாகிகளுடன் பார்வையிட்ட காட்சிகள்