இளையான்குடியில் நடைபெற இருந்த மனித நேய மக்கள் கட்சியினரின் போராட்டம் ரத்து செய்யப்பட்டது.
போராட்டம்
இளையான்குடி நகருக்குள் உள்ள 95 சதவீத குறுகிய தெருக்களில் அரசு குவாரி களில் இருந்து அரசு அனுமதி சீடடுடன் கொண்டுவரப்படும் ஆற்றுமணல், கிராவல் ஆகிய வற்றை லாரி செல்ல முடியாத சாலைகளில் டிராக்டரில் மாற்றி கொண்டு செல்லும் போது, வருவாயத்துறையினர் பிடித்து வழக்குபதிவு செய் வதை கண்டித்தும், கல்வி கடன் வழங்க மறுக்கும் தேசிய வங்கிகளை கண்டித்தும் இளையான்குடியில் மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.
இதனையடுத்து இளையான் குடி தாசில்தார் மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன்னிலை யில் சமாதான கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் அரசு அனுமதிசீட்டுடன் லாரிகளில் கொண்டுவரப்படும் ஆற்று மணல் மற்றும் கிராவலை 4 நாட்களுக்குள் கொட்டப் பட்ட இடத்தில் இருந்து இளையான்குடி பேரூராட் சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் டிராக்டரில் எடுத்து செல்லலாம், அதற்கு 7 டிராக் டருக்கு மட்டும் அனுமதி அளிப்பது, கொட்டப்படும் இடம் மற்றும் டிராக்டரின் பதிவு எண் ஆகியவையும் பதிவு செய்யப்பட்டது.
வாபஸ்
மேலும் தேசிய வங்கிகளில் கல்விக்கடன் வழங்குவதாக அளித்த உறுதிமொழியை தொடர்ந்துமனிதநேய மக்கள் கட்சியினர் அறிவித்து இருந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜெயினுல்லாபுதின் செயலாளர் முபாரக் அகமது, துணை செயலாளர் கான்சாசி ராஜ், டிராக்டர் சங்கத்தை சேர்ந்த அயூப்கான், சேக் இப்ராகீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.