திங்கள், 9 ஜூன், 2014

வங்கிக்கணக்கு மூலம் வாக்காளர்களுக்கு பணம்: தேர்தல் ஆணைய செலவு கண்காணிப்புக் குழு அம்பலம்



தேர்தலின்போது வங்கிக்கணக்கு மூலம் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய செலவுக் கண்காணிப் புக் குழு தெரிவித்துள்ளது.
தேர்தலில் வாக்காளர்களுக் குப் பணம் கொடுப்பதைத் தடுப்ப தற்கும், கறுப்புப் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் வாகன சோதனைகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஈடு பட்டனர். அப்போது, காரின் பானட் டிற்குள் ரூபாய் நோட்டுகளை மறைத்து வைத்து எடுத்துச் செல்லப்பட்டதை கண்டறிந்து, அதை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதோடு வாக்கா ளர்களின் வங்கிக் கணக்குகளின் மூலமும் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
தேர்தல் ஆணைய செலவு கண்காணிப்புக் குழுவின் தலைமை இயக்குநர் பி.கே. தாஸ் கூறுகையில் “மொத்தம் ரூ.313 கோடி பறிமுதல் செய்யப் பட்டது. காரின் பானட்டிற்குள் ளும், பஸ்சின் மேற்கூரையி லும் பணத்தை மறைத்து வைத்து எடுத்துச்செல்வதை நாங்கள் கண்டறிந்தோம். இது தவிர, வாக்காளர்களின் வங்கிக் கணக்கிற்கு பணப்பரிமாற் றம் செய்யப்பட்டதை அறிந்து நடவடிக்கை எடுத்தோம். இதேபோல பல நூதனமான முறைகளில் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
வேட்பாளர்களின் செலவு உச்சவரம்பு ரூ.70 லட்சமாக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதில் 90 சதவீதத் தொகையைக் கூட 80 சதவீத வேட்பாளர்கள் செலவு செய்யவில்லை. பெரும்பாலா னோர் மிகவும் குறைந்த தொகை யைத்தான் செலவு செய்துள்ளதாக கணக்குக் காட்டியுள்ளனர்.
எனவே, வேட்பாளர் செலவுத் தொகைக்கான உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தேவையற்றது.
வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பது, மதுவுக்கு பணம் செலவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கு, உச்சவரம்பை எவ்வளவு உயர்த்தி னாலும் அது போதாது என்று தான் கூறுவார்கள்.
மேலும், இதுபோன்ற செலவு களை மேற்கொள்வோர், அவை சட்டவிரோதம் என்று அறிந்து வைத்துள்ளதால், அந்த செலவுத் தொகையை கணக்கில் காட்ட மாட்டார்கள். பெரும்பாலும், கறுப்புப் பணத்தைத்தான் சட்ட விரோதச் செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர்” என்றார்.



THANKS : THE HINDU (TAMIL)