திங்கள், 9 ஜூன், 2014

முசாபர்நகர் கலவரத்தில் போலீஸ்காரருக்கு தொடர்பு: சிறப்பு புலனாய்வுக் குழு தகவல்


முசாபர்நகர் கலவரத்தில் போலீஸ்காரர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முசாபர்நகர் மாவட்டத்தில் பஹாவ்டி கிராமத்தின் கீழ் உள்ள புகானா போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர், கலவரத்தின்போது சட்டத்துக்குப் புறம்பாக உடைமைகளுக்குத் தீ வைப்பதிலும் திருடுவதிலும் ஈடுபட்டார் என்பது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.
கலவரக் குற்றங்களை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கலவரத்தில் போலீஸ்காரர் உட்பட மேலும் ஐவருக்கு தொடர்புள்ளது தெரியவந் துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஏற்பட்ட வகுப்பு கலவரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

Source : THE HINDU (TAMIL)