இதுதான் நாங்கள், இப்படிதான் தினந்தோறும் வாழ்ந்து வருகிறோம்! என் உயிர் நண்பர்கள் என்று 10 பேரை பட்டியல் இட்டால் அதில் பாதிபேர் எனது ஹிந்து சகோதரர்கள்தான்!
நீ முஸ்லிம், நீ சொல்கிறாய் என்பதற்காக எனது ஹிந்து சகோதரனை நான் எதிரியாய் பார்க்கமாட்டேன், உனக்கு வெறி என்றால் நீ போய் சுவற்றில் முட்டிக்கொள், என்னை அதில் நுழைக்காதே!
நீ சொல்வதையும் முகப் புத்தகத்தில் எழுதுவதையும் பின்பற்றுவதல்ல எனது இஸ்லாம், எனது இஸ்லாம் எனது இறைவனாலும், எனது நபியாலும் எனக்கு தெளிவாக சொல்லிக் கொடுக்கபட்டிருக்கிறது, நான் அதையே பின்பற்றுவேன்!
எனது மார்க்கம் எனக்கு யாரையும் துன்புறுத்த, பயமுறுத்த, பலியெடுக்க சொல்லித்தரவில்லை, அது எனக்கு அழகிய முன்மாத்ரியை, முழு மனித சமுதாயத்துக்கும் நலவையே சொல்லிக் கொடுத்திருக்கிறது, நானும் அதையே பின்பற்றுவேன்!
நாம் அனைவரையும் விட இறைவன்தான் உள்ளங்களை நன்கு அறிந்தவன்! அவனே உள்ளங்களின் ஆட்சியாளன்!
படம் : வடக்குக் கர்நாடகா கிராமமான புர்தகேறி யில் ஹிந்துக்களால் கட்டப்படும் பள்ளிவாசல்,
சுப்ஹானல்லாஹ்!