திங்கள், 29 ஜூலை, 2013

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தீவிரவாதிகள் என முத்திரை குத்தக்கூடாது: மார்க்கண்டேய கட்ஜு


தமது மதத்தை தனித்தனியே பிரதிநிதித்துவப்படுத்தாது இந்திய தேசியவாதிகளாக மக்கள் தம்மை அறிவித்துக் கொண்டாலே போதுமானது என பிரஸ்  கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
டெல்லியில் பத்திரிகை ஒன்று ஏற்பாடு செய்து இருந்த கருத்தரங்கில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய கட்ஜு, "நாம் இந்து தேசிய வாதியாகவோ, முஸ்லீம், சீக்கிய, கிறஸ்தவ தேசிய வாதியாகவோ, இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் இந்திய தேசியவாதியாக மட்டும் இருந்தால் போதும்.

இந்தியா பல  இனம்,பல மக்களைக் கொண்டு அனைவரும் இணைந்து வாழும் நாடாகும். மதசார்பிமை இல்லாமல் இந்தியாவில் ஒருநாள் கூட நல்லபடியாக செல்லாது. மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும், நாட்டை பிளவு படுத்துபவர்கள்தான், இந்திய தேசியத்துக்கு எதிரானவர்கள்.

இந்து, முஸ்லீம் அல்லது வேறு எந்த இனவாத அடிப்படை சக்திகளும் வேரறுக்கப்பட வேண்டும். பாகிஸ்தான்  நோக்கினால், நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். அந்த நாடு இஸ்லாமிய தேசமாக உருவாக  விரும்பியதால், அந்த நாடே ஜுராசிக் பார்க் போல காணப்படுகிறது.

பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்களில் இதைப் பார்க்க முடியும். சில சமயங்களில் பாகிஸ்தான் ஒரு நாடா என்று கூட யோசிக்கத் தோன்றும். ஆங்கிலேயர்கள் இந்து, முஸ்லீம், பிரிவினையை உருவாக்குவதற்காக தனி நாட்டை ஏற்படுத்தினார்கள். 

அனைத்து சமூகத்திலும் 99 சதவிகிதம் பேர்கள்  நல்லவர்கள்தான். எனவே, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தக் கூடாது என்று கட்ஜு பேசியுள்ளார்.

செவ்வாய், 23 ஜூலை, 2013

பள்ளிவாசலுக்கு தீ வைப்பு... ராமநாதபுரத்தில் பதற்றம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம், கேணிக்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் முஸ்லிம்கள் தொழுகை தொழுவதற்கான பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இங்கு நேற்று இரவு சில மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் பள்ளிவாசலில் இருந்த தொப்பிகள், பாய்கள் தீயில் எரிந்து நாசமாகின. மேலும் அங்கு இருந்த மின்விசிறிகளும் சேதமாயின. இன்று காலையில் தொழுகை நடத்த சென்ற முஸ்லீம்கள் இதனை கண்டு அதிர்சியடைந்தனர். மர்ம நபர்களின் இந்த செயலை கண்டித்தும், பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கேணிக்கரை சந்திப்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் எஸ்.டி.பி. அமைப்பினர் திரளாக பங்கேற்றனர். சம்பவம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி மயில்வாகணன் ‘‘பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு காம்பவுண்ட் சுவர் உள்ளது. அத்துடன் இரவு நேர காவலாளியும் உள்ளார். அப்படி இருக்கும் போது இதுபோன்ற சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். பள்ளிவாசலுக்கு தீவைத்த மர்மநபர்களைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்'' என்றும் எஸ்.பி கூறினார். பள்ளிவாசலுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 15 ஜூலை, 2013

இராமநாதபுரம் தமுமுக மர்கஸில் தூய இஸ்லாத்தை இருவர்.





இராமநாதபுரம் தமுமுக மர்கஸில் சகோ.சுப்பிரமணியன் அவர்கள் தனது வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு அப்துல் ரஹீமானார்.

மூன்று நாட்களுக்கு முன்புதான் இதே தமுமுக மர்கஸில் சகோ.செந்தில் அவர்கள் உமர் பாரூக்காக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே... இந்த சகோதரர்களுக்காக துவா செய்வோம்.

ஞாயிறு, 14 ஜூலை, 2013

தொண்டியில் கல்வி உதவி மற்றும் சிறந்த மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி !








இராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை வட்டம்,தொண்டியில் தமுமுக அலுவலகத்தில் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சியும், மேல்நிலை உயர்நிலை பள்ளிகளில் 10 ம், 12 ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கும் விழாவும் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இராமநாதபுரம் த.மு.மு.க,ம.ம.க மாவட்ட தலைவர் M.சாதிக் பாட்சா அவர்கள் தலைமை வகித்தார்,ஏழை மாணவ,மாணவிகள் 10 நபர்களுக்கு உயற்கல்வி படிப்புக்கு உதவும் வகையில் தலா 15,000 வீதம் ரூபாய் 1,50,000 (ஒன்றரை லட்சம்) காசோலையாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் கலந்தர் ஆசிக் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட நிர்வாகிகள் அன்வர் அலி,வாணி சித்திக்,ஜாகிர் ஹுசைன்,அஜிஸ் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ம.ம.க. மாநில செயலர் மண்டலம் ஜெய்னுல் ஆபிதீன் தொண்டி பேரூராட்சி மன்ற தலைவர் சேகு நெய்னா துணை தலைவர் பவுசுல் ஹக் ஆகியோர் கல்வியின் அவசியம் பற்றி பேசி காசோலை மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை நகர் நிர்வாகிகள் முஹம்மது,காதர்,அன்சாரி,ரிபாக்,மீரான்,பரகத்அலி,ஜிப்ரி,செ.பி.,ஆகியோர் செய்து இருந்தனர்.முடிவில் த.மு.மு.க திருவாடானை ஒன்றிய செயலாளர் அக்பர் சுல்தான் நன்றி கூறினார்.

சனி, 13 ஜூலை, 2013

புத்தகயா குண்டு வெடிப்பு - புத்த துறவிகளுக்கு தொடர்பு?



பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகாபோதி புத்தர் கோவிலில் கடந்த வாரம் அடுத்தடுத்து 9 குண்டுகள் வெடித்தன. மகாபோதி கோயில் மைதானத்தில் 4 குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன. 

யுனேஸ்கோவால் உலக பாரம்பரிய இடமாக இந்த இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பிற்கு இந்தியன் முஜாகுதீன் பொருப்பேற்றிருந்தாலும், அதற்கான ஆதரங்கள் சிக்கவில்லை மேலும் முரணான சில யூகங்கள் கிளம்பியுள்ளது. 

புத்தர் கோவிலில் வெடிக்காமல் கிடந்த 4 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சிறிய ரக சிலிண்டரில் அம்மோனியம் நைட்ரேட், சல்பர் மற்றும் வெடிமருந்து கலவைகளால் அந்த டைம்- பாம்கள் உருவாக்கப்பட்டிருந்தன. அவற்றின் மீது உருது மொழியில் குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன. 

மியான்மரில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதை கண்டித்து இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் இந்த தொடர் குண்டு வெடிப்பை நடத்தி இருக்கலாம் என்று கருதப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து டூவிட்டர் இணையத் தளத்தில் போடப்பட்ட தகவல்களால் இந்த சந்தேகம் அதிகரித்தது. 

என்றாலும் இந்தியன் முஜாகிதீன்கள்தான் குண்டு வெடிப்பை நடத்தினார்கள் என்பதற்கு இதுவரை எந்த உறுதியான ஆதாரங்களும் தேசிய புலனாய்வு பிரிவினருக்கோ, போலீசாருக்கோ கிடைக்கவில்லை. குண்டு வெடித்த மறுநாளே போலீசார் 5 பேரை பிடித்து விசாரித்தனர். 

ஆனால் அவர்கள் அப்பாவிகள் என்று தெரிய வந்ததால் விடுவிக்கப்பட்டனர். தடயவியல் துறையினர் நடத்திய ஆய்வு மற்றும் கண்காணிப்பு காமிரா காட்சிகளால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் விசாரணை அடுத்தக் கட்டத்துக்கு நகராமல் உள்ளது. 

இந்த நிலையில் புத்தர் கோவிலுக்குள் இருப்பவர்கள் உதவி இல்லாமல் இந்த குண்டு வெடிப்பை நடத்தி இருக்க முடியாது என்று முடிவுக்கு தேசிய புலனாய்வு பிரிவினர் வந்துள்ளனர். கோவிலுக்குள் வைக்கப்பட்ட 13 குண்டுகளும் 6-ந் தேதி இரவு தான் எடுத்து வந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்த காட்சிகள் எந்த ஒரு கண்காணிப்பு காமிராவிலும் பதிவாகவில்லை. எனவே புத்த துறவிகளில் யாரோ ஒருவர்தான் குண்டுகளை வைக்க மர்ம நபர்களை காமிரா கண்ணில் படாமல் அழைத்து சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஒரு போதும் நாச வேலைக்கு இப்படி சக்தி குறைந்த குண்டுகளை பயன்படுத்தியதே இல்லை. மேலும் 13 குண்டுகளும் ஒரே நேரத்தில் அதிகாலை 5.30 மணிக்கு வெடிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 நிமிட இடைவெளியில் தான் குண்டுகளை வெடிக்க வைப்பார்கள். 

இதன் மூலம் அதிக சேதம் ஏற்படுத்த வேண்டாம் என்ற நோக்கத்தில்தான் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. மகாபோதி புத்தர் கோவிலை நிர்வகிப்பது யார் என்பதில் புத்த துறவிகளிடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு உள்ளது. 

எனவே கோவில் நிர்வாகத்தை குறி வைத்து உள்ளே இருக்கும் புத்த துறவிகளே குண்டு வெடிப்பில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணையை தேசிய புலனாய்வு பிரிவினர் தொடங்கியுள்ளனர். 

Adaderana

சிறையில் அப்பாவி முஸ்லிம்கள் - சிறுபான்மைத்துறை அமைச்சர் கோரிக்கை



டெல்லி - தீவிரவாத முத்திரைக் குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு படைப்பிரிவு அமைக்கப்பட வேண்டும் என அமைச்சர் ரஹ்மான் கான் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அரசாங்கம் இவ்வாறான சிறப்புப்பிரிவினை உருவாக்கியிருப்பதை சுட்டிக் காட்டியுள்ள சிறுபான்மைத் துறை அமைச்சர் ரஹ்மான் கான், இது சம்பந்தமாக பிரதமருக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்திக்கும் கடிதம் எழுதுவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு சிறப்புப் பிரிவு அமைத்து விசாரணை நடத்துவது சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெறுவதாக அமையும் எனக் குறிப்பிட்டார்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் வாடுவதைக் குறிப்பிட்ட ரஹ்மான் கான், ” நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக எச்சரிக்கையாக இருக்கும் அதே நேரத்தில், அப்பாவி மக்கள் தண்டிக்கப்படவும் கூடாது” என்றும் ” நீதி தாமதப்படவோ மறுக்கப்படவோ கூடாது ” எனவும் தெரிவித்தார்.
உயர் அதிகாரம் கொண்ட ஒரு குழு இவ்வாறான விசாரணைகளை ஆய்வு செய்தால், கைது செய்யும் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் என அமைச்சர் தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிய ஒருவர் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்படுவது மனித உரிமை மீறலாகும் எனக் குறிப்பிட்டார். ஒருவரின் வாழ்க்கையினை இது மிகவும் பாதிப்புக்குள்ளாகி விடுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

செவ்வாய், 9 ஜூலை, 2013

ஓரினச் சேர்க்கை புகார் : மத்தியப் பிரதேச முன்னாள் பா.ஜ.க நிதியமைச்சர் ராகவ்ஜி கைது


ஓரினச் சேர்க்கை புகாரில் மத்தியப் பிரதேச முன்னாள் பா.ஜ.க நிதியமைச்சர் ராகவ்ஜி இன்று கைது செய்யப்பட்டார். மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2004ம் ஆண்டு முதல் நிதியமைச்சராக இருந்து 10 பட்ஜெட்களை தாக்கல் செய்தவர் ராகவ்ஜி(79). இவரது வீட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்த நபர், ராகவ்ஜி மீது போலீசில்  ஓரினச் சேர்க்கை புகார் அளித்தார். மேலும், ராகவ்ஜி, ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோ ஆதாரமும் தன்னிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார். ராகவ்ஜியை உடனடியாக ராஜினாமா செய்யும்படி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார். 

அதன்படி தனது அமைச்சர் பதவியை ராகவ்ஜி ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பா.ஜ.கவில் இருந்தும் ராகவ்ஜி நீக்கப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் கைதாகாமல் தப்பிக்க ராகவ்ஜி முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்த மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து ராகவ்ஜி இன்று கைது செய்யப்பட்டார்.

DINAKARAN

சனி, 6 ஜூலை, 2013

இளவரசன் மரணம்: நீதி விசாரணை தேவை



மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும்  பத்திரிகை அறிக்கை:

தர்மபுரியில் காதல் திருமணம் செய்த இளைஞர் இளவரசனின் மர்ம மரணம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாழவேண்டிய வயதில் ஒரு இளம் தம்பதியினரின் வாழ்வு சிதறடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.

மனிதாபிமானத்துடன் அணுகப்பட வேண்டிய ஒரு பிரச்சனையை சாதிய உணர்வோடு சிலர் அணுகியதால் இளம் கணவரான இளவரசன் உயிர் இழந்தது வேதனையாக இருக்கிறது.

இளவரசனின் மரணம் கொலையா? தற்கொலையா? என சந்தேகங்கள் உருவாகி உள்ளதால், இதுகுறித்து நீதி விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.

இளவரசனை இழந்த அவரது பெற்றோருக்கு எமது ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். துயரத்தில் இருக்கும் திவ்யாவுக்கு உரிய உளவியல் அறிவுரைகளை நடத்தி, அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் பாதுகாப்பை வழங்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். அதுபோல் இளவரசனின் பெற்றோருக்கும் தமிழக அரசு பாதுகாப்பு கொடுப்பதுடன், அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலையும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டார மக்கள் இவ்விஷயத்தில் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்,
(எம். தமிமுன் அன்சாரி)

தடைகளை உடைத்தது தமுமுக - மக்கள் வெள்ளத்தால் செயலிழந்து சென்னை...

அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர்!!! 

தடைகளை உடைத்தது தமுமுக - மக்கள் வெள்ளத்தால் செயலிழந்து சென்னை...

ஜனநாயகப் போராட்டத்தை நசுக்க நினைத்த தமிழக அரசின் அடக்கு முறையை அடக்கம் செய்தது தமுமுக.

மிகப்பெரும் அரசு நெருக்கடியிலும் கருப்பு வெள்ளை மக்கள் வெள்ளத்தில்  சென்னை காவல்துறை செயலிழந்து நிர்கிறது. சென்னையில் கைது செய்த நம் மக்களை அடைப்பதற்கு  இடம் பத்தாமல் தடுமாறுகின்றனர் காவல்துறையினர்.

இன்ஷா அல்லாஹ் விரைவில் நம் இலக்கை எட்டுவோம் இந்த சமுதாயத்தை மேன்மை அடையச் செய்வோம்.


















வியாழன், 4 ஜூலை, 2013

இஷ்ரத் ஜஹான் படுகொலை - இறைவனே என்னை தண்டித்துவிட்டான்:ஐபிஎஸ் அதிகாரி!


மும்பை: இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்குபேரை என்கவுண்டர் முறையில் படுகொலை செய்ததை  முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரானகுஜராத் IPS அதிகாரி G L சிங்கால், "இச்செயலுக்காக இறைவனே என்னை தண்டித்து விட்டான்" என்று கூறியுள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத் புறநகரில் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்யும் நோக்கத்துடன் ஊடுருவியதாக கூறி இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேர் என்கவுண்டர் மூலம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இது திட்டமிட்ட சதி என்றும் இது போலி என்கவுண்டர் என்றும் நாடு முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த போலி என்கவுண்டர் படுகொலையை முன்னின்று நடத்தியவர்களில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் குஜராத் IPS அதிகாரி G L சிங்கால்.  ஜாமீனில் வெளி வந்துள்ள இவர் அப்ரூவராக மாறியுள்ளார். மேலும் கொலையை மூடி மறைப்பதற்காக 2011 நவம்பரில் குஜராத் அமைச்சர்கள் அரசு அதிகாரிகளான குஜராத் சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா ,கல்வி அமைச்சர் புபேந்தர் சுடாசமா ,மற்றும் பிரபுல் படேல் , IAS அதிகாரி முர்மு ,அட்வகேட் ஜெனரல் கமல் திரிவேதி ஆகியோரது பேச்சினை ரகசியமான முறையில் பதிவு செய்த ஒரு ஒலிப்பேழையை தானாகவே முன்வந்து CBI அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார் .
மேலும் தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்துள்ள சிங்கால், "இந்தப் படுகொலைக்கு இறைவனே எனக்கு தண்டனை கொடுத்துவிட்டான். இரு மாதங்களுக்கு முன்பு என்னுடைய 17 வயதுடைய ஒரே மகன் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னரே இந்தப் படுகொலையின் பின்னணியில் உள்ள உண்மையை கூற முன் வந்தேன்" என்று கூறியுள்ளார்.
மேலும் குஜராத் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் முதல்வர் மோடி உள்ளிட்டோருக்கு இந்தப் படுகொலையில் தொடர்பிருப்பதாகவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
INNERAM

மகத்தான நற்பாக்கியங்கள்

1)  அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்

2)  லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.

3)  100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.

4)  அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார்.

5)  எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு ரக்அத் சுன்னத்தை தொழுது வருவாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான்

6)  எவர் நபியின் மீது ஒரு தடவை ஸலவாத்துச் சொல்வாரோ அல்லாஹ் அவருக்கு பத்து முறை அருள் புரிகின்றான்

7)  எவர் மஸ்ஜிதுக்கு செல்வாரோ அல்லது மஸ்ஜிதில் இருந்து திரும்புவாரோ மஸ்ஜிதுக்கு செல்லும் போது அல்லது திரும்பும் போது வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.

8.)  எவர் அதிகாலை (ஃபஜ்ரு)த் தொழுகையை பெனுகிறாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் வந்து விடுகிறார்...

9)  எவர் கடமையான தொழுகையின் பின் ஆயதுல் குர்ஸியை ஓதி வருவாரோ அவருக்கு சுவர்க்கம் நுழைவதற்கு மரணத்தை தவிர வேறெதுவும் தடையாக இருக்காது.

10)  எவர் அழகான முறையில் ஒழுச் செய்து பிறகு ஜும்ஆவுக்கு வந்து மொளனமாக செவி தாழ்த்தி உரையை செவிமடுப்பாரோ அவரது ஜும்ஆவுக்கு இடைபட்ட பாவங்களும், மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படும்.

11)  எவர் உறவினர்களுடன் சேர்ந்து வாழ்கின்றாரோ அல்லாஹ் அவரது ரிஸ்கை விஸ்தீர்ணப்படுத்துவதோடு, அவரது ஆயுளையும் நீட்டுகிறான்.

12)  எவர் தனது சகோதர முஸ்லிமுக்கு மறைவில் பிரார்த்திக்கின்றாரோ அவருக்காக ஒரு வானவர் மறைவில் சாட்டப்பட்டு ஆமீன் கூறுவார். உமக்கும் அதே போன்று என கூறுவார்.

13)  எவர் பாங்கின் பின் ‘அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித்ஃவதித்தாம்மா வஸ்ஸலாதில் காஇமா ஆதி முஹம்மதல் வஸீலத வல்பழீலத வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதல்லதி வஅத்தஹு’ என்று ஓதுவாரோ அவருக்கு மறுமையில் நபிகளார் (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும்.

14)  எவர் அவையில் அமர்ந்து அதன் இறுதியில் அந்த அவையை விட்டு எழுந்து செல்வதற்கு முன் ‘ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைக்’ என்று ஓதவாரோ, அவர் அவையில் இருக்கும் போது நிகழ்ந்த அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.

15)  எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.

16)  எவர் அல்லாஹ்வின் வழியில் ஏதாவது ஒன்றை செலவிடுவாரோ அவருக்கு எழு நூறு மடங்கு நன்மைகளை அல்லது அதைவிடவும் அதிகமாக நன்மைகளை அல்லாஹ் எழுதி விடுகின்றான்.

17)  அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்றால் அல்லாஹ் எழு நூறு வருட தொலைவுக்கு அவரது முகத்தை நரகை விட்டு தூரப்படுத்துவான்.

18)  எவர் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து தொழுகையையும், நிரை வேற்றி, ஜனாஸாவை அடக்கும் வரை இருப்பாரோ அவர் இரண்டு கீராத் நன்மைகளை பெற்றவராக திரும்புவார். (கீராத் என்பது உஹத் மலைக்கு சமமாகும்).

19)  ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று அதை அடக்கம் செய்வதற்கு முன் திரும்புவாரென்றால், அவர் ஒரு கீராத் அளவு நன்மைகளை பெற்று திரும்புகிறார்.

20)  ஒரு முஸ்லிமை நோய் விசாரிக்கச் சென்றால் அவர் தீரும்பும் வரை சுவர்க்கத்தின் ஒரு இறக்கையில் இருக்கின்றார்.

21)  எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில் கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்) அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.

22)  யார் கல்வியை கற்பதற்காக வெளியேறிச் செல்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பாதையை இழகு படுத்துகின்றான்.

23)  ஒரு முஸ்லிமுக்கு துன்பம் ஏற்படும் போது ‘இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்ஃஜுர்னீ பீஃ முஸீபதி வஹ்லுஃப் லீ ஹயிரம் மின்ஹா’ அல்லாஹ் அவரது துன்பத்திற்கு நற்கூலி வழங்குவதோடு, அவரது துன்பத்தையும் மாற்றி அதை விட சிறந்ததை வழங்குவான்.

24)  எவர் ஒருவர் அழகான முறையில் ஒழுச் செய்வாரோ, அவரது பாவங்கள் அவரது உடலை விட்டு வெளியேறும், நகத்தின் கீழிருந்து நிகழ்ந்த பாவங்கள் உட்பட.

25)  ஒரு முஸ்லிமின் சோதனையை எவர் இந்த உலகில் போக்குவாரோ, அவரது துன்பத்தை அல்லாஹ் மறுமையில் நீக்குவான்.

26)  எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறையை நாளை மறுமையில் மறைப்பான்.

27)  எவர் ஒருவரின் கடனை இழகு படுத்துகின்றாரோ, அல்லது அதை தல்லுபடி செய்கின்றாரோ நிழலே இல்லாத நாளை மறுமையில் அல்லாஹ் அர்ஷின் கீழ் அவருக்கு நிழல் வழங்குவான்.

28)  எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ அவருக்கு சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.

29)  எவர் நேர் வழியின் பால் அழைப்பு விடுப்பாரோ அவரை பின் பற்றியவர்களின் கூலி இவருக்கு உண்டு, அவர்களது கூலியில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது.

30)  நன்மையை எதிர்ப்பார்த்து தனது குடும்பத்துக்கு எவர் செலவளிப்பாரோ அவருக்கு தர்மத்தின் நன்மை உண்டு.--

புதன், 3 ஜூலை, 2013

இஷ்ரத் ‌போலி என்கவுன்டர் தான்: குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. தகவல்


புதுடில்லி: "இஷ்ரத் என்கவுன்டர்' வழக்கில், சி.பி.ஐ., இன்று தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. நடந்தது போலி என்கவுன்டர் தான் என கூறப்பட்டு்ளது. . 
குஜராத் மாநிலத்தில், 2004ல் ஜூன், 15ம் தேதி, மும்பை கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான், 19, பிரனேஷ் கோபிநாத் என்கிற ஜாவீத் ஷேக், அம்ஜத் அலி அக்பர் அலி ராணா, ஜீஷன் ஜோகர் ஆகிய நான்கு பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதை, "என்கவுன்டர்' என, போலீசார் கூறினர். ஆனால், பல்வேறு கட்சிகள், இதை போலி என்கவுன்டர் என, குற்றம் சாட்டின. இது குறித்து விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ.,க்கு உத்தரவிடப்பட்டது. தீவிர விசாரணை நடத்தி வரும், சி.பி.ஐ., குஜராத் ஐகோர்ட்டில், ஜூலை, 4ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என, உறுதியளித்து இருந்தது. இதையடுத்து சி.பி.‌ஐ., இன்று தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் பி.பி.பாண்டே, ,வஞ்சாரா உள்ளிட்ட ஐ.பி.எஸ்.,கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் போலி என்கவுன்டர்கள் நடத்தியுள்ளார்கள். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. மேலும் முழுவதுமாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டுள்ளது.

Dinamalar

செவ்வாய், 2 ஜூலை, 2013

சவூதி அரேபியாவில் நிதாகத் சட்டத்தை அமல்படுத்த காலம் நீட்டிப்பு.



சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக பிணிபுரிபவர்களுக்கான நிதாகத் சட்டம் நாளை அமல்படுத்த உள்ளதாக இருந்த நிலையில்  பரிதவிக்கும் வெளிநாட்டவர்களுக்கு இரக்கம் காட்டும் வகையில் வரும் நவம்பர் மாதம் 4ந் தேதி வரை நிதாகத் சட்டத்தை அமுல் படுத்த காலத்தை நீட்டி உள்ளார் அந்நாட்டு மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ். இந்த வாய்பை நம் மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

திங்கள், 1 ஜூலை, 2013

தொண்டியில் தமுமுக சார்பில் ஜூலை 6 விளக்க தெருமுனை பிரச்சாரம்




இராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை வட்டம்,தொண்டியில் தமுமுக சார்பில் ஜூலை 6 பேரணியை விளக்கும் விதமாக தெருமுனை பிரச்சாரம் 20 இடங்களில் தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது. மாநில மமக அமைப்புச் செயலாளர் மண்டலம் ஜைனுலாபுதீன்,மாவட்ட மமக துணை செயலாளர் அசீஸ் ரகுமான்,மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் கலந்தர் ஆசிக்,திருவாடானை தமுமுக ஒன்றிய செயலாளர் அக்பர் சுல்தான் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். வரும் ஜூலை 6 அன்று சென்னையில் தமுமுக தலைமையில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் கோட்டை நோக்கி கோரிக்கைப் பேரணி மூன்று முக்கிய கோரிக்கைகள் 1. 7% இடஒதுக்கீடு, 2. 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் அனைத்து சமுதாயத்தைச் சார்ந்த சிறைவாசிகள் விடுதலை, 3. திருமண பதிவுச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு திருத்தம் ஆகிய மூன்றுகோரிக்கைகளை வென்றெடுக்க குடும்பத்துடன் அனைவரும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நகர் நிர்வாகிகள் முஹம்மது,அன்சாரி.மீரான்.காதர்,அப்துல் ரகுமான், ஆகியோர் செய்திருந்தனர்.