திங்கள், 1 ஜூலை, 2013

தொண்டியில் தமுமுக சார்பில் ஜூலை 6 விளக்க தெருமுனை பிரச்சாரம்




இராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை வட்டம்,தொண்டியில் தமுமுக சார்பில் ஜூலை 6 பேரணியை விளக்கும் விதமாக தெருமுனை பிரச்சாரம் 20 இடங்களில் தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது. மாநில மமக அமைப்புச் செயலாளர் மண்டலம் ஜைனுலாபுதீன்,மாவட்ட மமக துணை செயலாளர் அசீஸ் ரகுமான்,மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் கலந்தர் ஆசிக்,திருவாடானை தமுமுக ஒன்றிய செயலாளர் அக்பர் சுல்தான் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். வரும் ஜூலை 6 அன்று சென்னையில் தமுமுக தலைமையில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் கோட்டை நோக்கி கோரிக்கைப் பேரணி மூன்று முக்கிய கோரிக்கைகள் 1. 7% இடஒதுக்கீடு, 2. 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் அனைத்து சமுதாயத்தைச் சார்ந்த சிறைவாசிகள் விடுதலை, 3. திருமண பதிவுச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு திருத்தம் ஆகிய மூன்றுகோரிக்கைகளை வென்றெடுக்க குடும்பத்துடன் அனைவரும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நகர் நிர்வாகிகள் முஹம்மது,அன்சாரி.மீரான்.காதர்,அப்துல் ரகுமான், ஆகியோர் செய்திருந்தனர்.